Sunday, February 17, 2008

காதில் விழுந்த கலக்கல் மொழிகள்

சிக்கல்கள் உருவாகுமோ என்று கவலைப்படுங்கள்
ஆனால் சிக்கல்களை உருவாக்கும் அளவு கவலைப்படாதீர்கள்.
------------------------------------------------------------
எங்கிருந்து வருகிறீர்கள் என்று திரும்பிப்பாருங்கள்,
எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியும்
------------------------------------------------------------
உறைபனி போல உயிர் உலுக்கும் அச்சங்களை
உதிக்கும் கதிர்போல உருக வைப்பதே நம்பிக்கை

Saturday, February 09, 2008

என் வீட்டு நாள்காட்டியில்.!

எண்ணம் ஒரு துளிர்,
பேச்சு ஒரு மொட்டு,
செய்கை அதன் பின்னால் உள்ள பழம்!

======================================

எப்படி ஒரு பூச்சி ஆடையை அரிக்கிறதோ,
அப்படியே பொறாமை மனிதனை அரிக்கிறது!

Tuesday, February 05, 2008

வாடிக்கையாளர்கள்

கர்சன்பாய் படேல வாஷிங்பவுடர் நிர்மாவின் அதிபர்.

வாடிக்கையாளர்கள் என்பவர்கள் மூன்று வகையினர். முதலாமவர்கள் நம்மிடமிருந்து விலகிப் போனவர்கள். இவர்கள் ஏன் விலகினார்கள் என்று ஆராய்ந்தால் நல்ல தீர்வுகள், விடைகள் கிடைக்கும்.

அடுத்தவர்கள் நம்முடன் இருப்பவர்கள். இவர்களை எப்போதும் தக்க வைத்துக் கொள்வதில் குறிப்பாக இருக்க வேண்டும். இவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள் என்பதால் நமக்கு ஆணவம், அலட்சியம் வந்து விடக் கூடாது. இது வந்தால் நம்மிடமிருந்து விலகி விடுவார்கள்.

மூன்றாமவர்கள், இனி வரப் போகிறவர்கள். இவர்கள் மீது அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும். இவர்களை எப்படிக் கவரலாம், எப்படி இழுத்துப் போடலாம் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இப்படி கவனம் செலுத்தினால் வாடிக்கையாளர்களை அப்படியே நம்மிடம் கட்டிப் போட்டுவிடலாம்.