Wednesday, July 01, 2009

வாரன் பஃபட் ”பணக் கடவுள்”

”வாரன் பஃபட்” டின் ”பணக்கடவுள்” என்ற இந்த புத்தகத்தை தங்களுக்கு நான் படித்து விமர்சனம் வழங்குவதின் நோக்கம்… பங்கு சந்தையில் நீங்கள் எவ்வாறு ஈடுபடுவது என்பதை அறிந்து கொள்ள அல்ல! ”வாரன் பஃபட்” 100 ரூபாயை எவ்வாறு 100 கோடியாக மாற்றினார்? என்ற ”டெக்னிக்கை” தெரிந்து கொள்ளவும், அதை நாம் எவ்வாறு செயல்படுத்துவது? என்பதை அறிந்துகொள்ளவுமே இந்த புத்தகம்!.

சரி… எத்தனையோ எழுத்தாளர்கள் இது போன்று எத்தனையோ நூல்களை வெளியிட்டிருப்பினும், நான் குறிப்பாக இப்புத்தகத்தை தேர்ந்த்தெடுத்து தங்களுக்கு விமர்சனம் வழங்குவதினும் ஓர் நோக்கம் இருக்கின்றது. அதையும் நீங்கள் தெரிந்துக்கொண்டால் உங்களுக்கு இந்நூலின் மீது பிடிப்பு ஏற்படும். அப்படியே உங்களை தொழில் களத்தில் தன்முனைப்போடு இறங்கத்தூண்டும். அதுவே உங்களது வாழ்க்கைத் தடத்தை மாற்றியமைக்காலம்… வரும் காலத்தில் நிலாவில் தங்கி இளைப்பாறும் பில்லியனராக உங்களை மாற்றலாம்… யாருக்கு தெரியும்? நான் தடம் மாறாமல் கூற விரும்பும் விஷயத்திற்கு வருகிறேன்.

நாம் ஒரு விஷயத்தை நம்பினால் தான் அதை செயல்படுத்த துணிவோம்! இது அனைவரும் அறிந்து கூற்று ஒரு காரியத்தை அரை குரை மனதோடு செயல்படுத்தினோமென்றால் அக்காரியம் முழுமையும் பெறாது வெற்றியும் கிடைக்காது. எனக்கு இந்நூலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது அப்படிப்பட்ட நம்பிக்கையை கொடுத்ததின் தாக்கம் தான். விமர்சனம் வழங்குவதின் நோக்கம்.

கி.பி. 1930 ம் வருடத்தில் பிறந்த இந்நூலின் கதாநாயகன் ”வாரன் பஃபட்” டின் வியாரபார அணுகு முறைகள், வணிக செயல்பாடுகள், தொழிலின் தொலைநோக்கு சிந்தனைகள், இவையனைத்தும் அதே வருடத்தில் பிறந்த எனது தாத்தா K.P.R. அப்துல் ஹையூம் அவர்கள் வாழ்வில் பிரதிபலித்ததை, நான் இந்நூலை பிடிக்கும் பொழுது உணர்ந்தேன். தொழில் முனைவர்களின் பெரும்பாலோர். தொழிலில் வெற்றியடையும் பொழுது, தன் வியாபார ஸ்தாபனத்தை பல கிளைகளாக விஸ்திரப்படுத்திக் கொள்வதிலும், அது சார்ந்த தொழில்களை உருவாக்குவாதிலுமே முனைப்போடு செயல்படுவார்கள். அது வெளிப்பார்வைக்கு மிகப்பெரிய வெற்றியாளர்களாக, உறுதியான, நிலையான வியாபார ஸ்தாபனமாக காட்சியை தந்தாலும் காலம், மாற, மாற காட்சியும் மாறும்! இதுதான் முற்றிலும் உண்மை.

அதற்கு தான், ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாத பல்வேறு தொழில்களில் தொலைநேக்கு பார்வையுடன் தன்னம்பிக்கையோடு செயல்படுத்த முன்வரவேண்டும். இது வணிக வாழ்வின் ஏற்ற இறக்கத்தை ஈடுசெய்ய கற்றுக்கொடுக்கும்.

”வாரன் பஃட்டின்” தொழில் ”டெக்னிக்கை” நான் முற்றிலும் நம்புவதின் நோக்கம் எனது தாத்தா இது போன்று ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாத மளிகை, பொழுது போக்கு துறை, ரைஸ் மில், மொத்த வியாபாரம், ரியல் எஸ்டேட், விவசாயம், முதலிடூ, உற்பத்தி, நூகர்வோர் பொருள் விநியோகம், சிமெண்ட், பஞ்சு போன்ற பல தொழில்களை சீரான முறையில் திட்டமிட்டு, தெளிவாக நடைமுறை படுத்தி வெற்றியும் கண்டார்கள். ஆக இவ்வளவு பிந்தைய காலத்திலே, ஒரு சிறு கிராமத்திலே சம காலத்தவரான எனது தாத்தா, வாரன் பஃபட்டின் சிந்தைனையிலும் ஒத்தவராக தன் புதிய வணிக சிந்தனையை தைரியமாக நடைமுறைபடுத்தி, தன் சுற்று வட்டாரத்தில் சிறந்த தொழிலதிபராக வெற்றி பெற முடிந்த்து என்றால், இந்த நவீன காலத்தில் ஏன் நம்மால் புதிய சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வெற்றி காண முடியாது? ஆக நம்பிக்கையோடு படியுங்கள் கருத்தை சுவையுங்கள். காலம் தாழ்த்தாமல் களம் இறங்குங்கள்… !!!!