Tuesday, May 20, 2008

காலண்டர்

பூமி இரவு பகலாய் மாறி 365 நாட்கள் 5 மணி நேரம் 48 நிமிடங்கள் 46 நொடிகளில் சுற்றி நாட்களின் கணக்குகளைக் கொண்டதே காலண்டர் என்கிடறோம். இது விவசாயத்தில் பயிரிட, அறுவடை செய்ய, மழை வருவதையறிய பெரிதும் பயன் படுகிறது மற்றும் தொழில் சம்பந்தங்களிலும் மத விசேஷங்களிலும். அன்றாட வாழ்வியலுக்கும் இன்றியமையாததாகிறது. தற்போது நாம் பயன் படுத்துவது ”கிரிகோரியன்” முறையாகும். இது சூரியனை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுகிறது. வருடத்தில் ஒரு நாள் விகிதத்தை சரி செய்ய 4 வருடத்திற்கு ஒரு நாள் பிப்ரவரி மாதம் 29 நாளாக கணக்கிடப்படுகிறது. இது லிப் வருடமட எனப்படும். (இஸ்லாமிய தேதிகள் சந்திரனை வைத்து கணக்கடப்படுகிறது.)