Friday, March 13, 2009

படித்ததில் பிடித்தது!

கறுப்பரினத்தைச் சேர்ந்த பெண்மனி ஒருவர் நூறு வயது வரை வாழ்ந்தார். அவரது நீண்ட நாள் வாழ்க்கையின் ரகசியம் என்னவென்று கேட்ட போது,

“வேலை செய்யும் போது நான் கடினமாக வேலை செய்கிறேன்..

சும்மா இருக்கும் போது சுகமாக - சாதாரணமாக, இருக்கிறேன்..

கவலை தோன்றும் போது நான் தூங்கச் செல்வேன்!”

என்று அந்த அம்மையார் கூறினார்.

அந்த அம்மையாரின் அருமையான வாழ்க்கையைப் பின்பற்றி அனைவரும் வாழ்ந்தால் நாமும் நூறு வயது வரை வாழலாம்.

                                               நூல் KILL FEAR BEFORE FEAR KILLS YOU

Monday, March 09, 2009

படித்ததில் பிடித்தது...

ஒரு தொழிலதிபர் பசிபிக் கடலின் குறுக்கே நீண்ட தூரம் பறந்து கொண்டிருந்தார். விடுமுறை நாட்களுக்காக வீட்டிற்குச் செல்லும் ஒரு பையன் அவருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தான். சுவைமிக்க மதிய உணவுக்குப் பிறகு பயணிகள் சிறு துயில் கொள்ளும் நேரம்! கடும் புயலும் காற்றும் வீசும் இடத்தைக் கடந்துக் கொண்டிருப்பதால் அனைவரையும் இடுப்பில் வார் மாட்டிக் கொள்ளுமாறு விமான ஓட்டுனர் ஆணையிட்டார். விமானம் மிகப் பெரிதாக இருந்த போதிலும் அது மோசமாக ஆடியது.

அந்தப் பையன் வேதனையுடன் அஞ்சி நடுங்கி அவருடைய தோளில் சாய்ந்து கொண்டான். அவரோ அவனுடைய தலையை அன்புடன் நீவி விட்டார். அஞ்சாதிருக்கும்படி அவர் ஆறுதல் ஊட்டினார்.

திடீரென விமானம் சாய்ந்ததால் சிறுவன்,“உங்களுக்குப் பயமாக இல்லையா?” என்று கேட்டான்.

இல்லை... இது உண்மையான வேடிக்கை, உனக்கு இது ரசிக்கத்தக்கதாக - அனுபவிக்கத்தக்கதாகத் தோன்றவில்லையா? என்றார்.

சிறுவனிடத்தில் ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டது. அவனுடைய பயமும் பீதியும் அகன்றன. விமானம் சாயும் போதும், தள்ளாடும் போதும் அதை ரசித்துக் கீச்சொலியுடன் சிரித்து மகிழத் தொடங்கினான்.

தொழிலதிபர் அந்தச் சிறுவனுக்கு வாழ்க்கைக்கலையில் ஓர் அரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்துவிட்டார்!

கோழைகள் பலமுறை சாகின்றனர்.வீரனோ ஒரு முறை தான் சாகிறான்.” நமக்குக் கிடைத்திருப்பது ஒரே ஒரு வாழ்க்கை என்பது தான் உண்மை. ஆனால் அச்சத்தாலும், நடுக்கத்தாலும் ஆயிரம் முறைகளுக்கும் மேலல்லவா சாகிறோம்!

                                                       KILL FEAR BEFORE FEAR KILLS YOU

Tuesday, March 03, 2009

குழந்தைகள் கணினி விளையாட்டு - உலக கணித தினம் மார்ச் 4ம் தேதி

உலக கணித தினம் 4ம் தேதி மார்ச் மாதம் நடைபெற இருக்கின்றது. இதற்காக ஒர் இணையத்தளம். அதில் பள்ளி குழந்தைகள் கணினி மூலம் கணித விளையாட்டு விளையாடி வெற்றி பெற ஓர் அறிய வாய்ப்பு காத்திருக்கின்றது.

நீங்கள் இதில் பங்கு பெற ரிஜிஸ்டர் செய்யவேண்டும். அதற்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

எவ்வாறு ரிஜிஸ்டர் செய்வது ?

http://www.worldmathday.com/ என்ற இணையத்தளத்திற்கு சென்று மெனு பாரில் உள்ள ரிஜிஸ்டர் என்ற பட்டனை கிளிக் செய்யவும். பின்னர் நீங்கள் பள்ளி ஆசிரியராக இருந்து பள்ளிக்கூடம் சார்பாக உங்கள் மாணவர்களுக்கு ரிஜிஸ்டர் செய்ய ஸ்கூல் ரிஜிஸ்டரேஸன் என்ற பட்டணை கிளிக் செய்யவும். நீங்கள் தனி நபராக ரிஜிஸ்டர் செய்ய ஹோம் ரிஜிஸ்டரேஸன் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

clip_image002

பின்னர் உங்களுடைய நாடு, வயது, பெயர், மின் அஞ்சல் முகவரி, மற்றும் கடவுச்சொல் (பாஸ்வேட்) விபரத்தை பூர்த்தி செய்யவும் பின்னர் நீங்கள் 13 வயதுக்கு மேற்பட்டவரா அல்லது கீழ் பட்டவரா என்பதை தேர்வு செய்து சப்மிட் பட்டனை கிளிக் செய்யவும்.

clip_image004

எவ்வாறு லாகின் செய்வது?

பின்னர் நீங்கள் குறிப்பிட்ட மின்அஞ்சல் முகவரிக்கு உங்களுடைய விபரத்தை சரிபார்க்க மின்அஞ்சல் வரும். மின்அஞ்சலில் உள்ள கிளிக்ஹியர் என்ற லிங்கை கிளிக் செய்யவும். கணினி http://www.worldmathday.com/ சென்று உங்கள் அக்கௌன்ட்டை ஆக்டிவேட் செய்யும். அவ்வளவுதான் உங்கள் அக்கௌன்ட் ரெடி. உங்கள் கணினி திரையில் உங்களுடைய யூஸர் நேம் மற்றும் பாஸ்வேட் தெரியும். அதைவைத்து clip_image006வளைப்பக்கத்தில் உள்ள சைன் இன் என்ற பட்டனை கிளிக் செய்து யூஸர் நேம் மற்றும் பாஸ்வேட் தந்து நீங்கள் விளையாட வேண்டியது தான்.

கன்ரோல் போடின் பயன்பாடு?

நீங்கள் லாக்கின் செய்தவுடன் உங்களுடைய விபரம். அதாவது, நீங்கள் (முன்பு விளையாடி இருந்தால்) அதிகம் பெற்ற மதிப்பெண், சரியான பதில்கள் எத்தனை, சரியாக கணக்கிடும் திறன் எவ்வளவு, வேகமாக மற்றும் சரியாக கணக்கிடும் திறன் எவ்வளவு மற்றும் இதுவரை விளையாடிய விளையாட்டுக்கள் எத்தனை என்ற விபரம் தெரியும்.

clip_image008

எவ்வாறு விளையாடுவது?

clip_image010வளைத்தளத்தின் வலது பக்கத்தில் (கீழ் விளக்கப்படம்) உள்ள என்டர் கேம் என்ற அய்கானை கிளிக் செய்யவும்.

கிளிக் செய்தவுடன் கணினி தற்போது உலகின் மற்ற பகுதியில் உள்ள  விளையாட்டு நண்பர்களை தானாக (ரேண்டம் முறையில்) தேர்வு செய்து (நான்கு நபர்கள்) உங்கள் கண் முன் நிறுத்தி உங்களுடன் விளையாட வைக்கும்.

clip_image012

சரியாக ஒரு நிமிடத்தில் நீங்கள் எத்தனை கணக்குக்கு சரியாக விடை செய்கின்றீர்கள் என்பது தான் போட்டி…

குறிப்பு- சில சமயம் கணக்கில் கூட்டல், கழித்தல் அல்லது இரண்டும் சேர்ந்து இருக்கும். கவனம் தேவை.

clip_image014

இதில் கவனிக்க வேண்டியது, நீங்கள் மூன்று (3) தவறான விடை தந்தால் விளையாட்டை விட்டு நீக்கப்படுவீர்கள்.

clip_image016

ஆட்டம் முடிந்தவுடன் உங்களுடைய வெற்றி விபரம் தரப்படும் .

நன்றாக இருக்கின்றதே என்று நீங்கள் மீண்டும் விளையாட நினைத்தால் பிளே எகைன் என்ற இடத்தில் கிளிக் செய்யவும்.

சரி இதனால் என்ன பயன் ?

பரிசு மற்றும் சர்ட்டிபிகேட் வழங்கப்படுகின்றது….. இவை மட்டுமா?

இந்த போட்டியின் மூலம் உங்கள் குழந்தைக்கு மனிதனுக்கே உரித்தான தொடு உணர்ச்சி, பார்வை, கேட்டல் மற்றும் பகுத்தறிவு என அனைத்து பாகங்களும் ஒன்று இணைந்து வேகமாக செயல்படுவதால், இந்த அவசர உலகத்தில் ஈடு கொடுத்து வருங்காலத்தில் வெற்றி பெற இப்பயிற்சி உதவியாக இருக்கும். மேலும் பள்ளி கணக்கு பாடத்தை மிக வேகமாக தப்பு இல்லாமல் செய்ய உதவும், மேலும் கணினியின் மீது ஆர்வம் எற்படும் என்பதில் ஐயமில்லை…

உங்களுக்கு இச்செய்தி பயனுள்ளதாக கருதினால் உங்கள் கருத்துகளை பின்னூட்டம் இடுங்கள்.