என்.எச்.எம். ரைட்டர் 1.5.1.1'' எனும் மென்பொருள் 2009-10-ம் ஆண்டுக்கு சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த மென்பொருளை தயாரித்த சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த
'நியூ ஹொரைசன் மீடியா' நிறுவனத்திற்கும் பரிசுத் தொகை ஒரு லட்சமும், பாராட்டிதழும், வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்
சும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது அதன் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ!
Thursday, January 13, 2011
NHM Writer selected as 2009-10 Best Tamil Software
Tuesday, March 03, 2009
குழந்தைகள் கணினி விளையாட்டு - உலக கணித தினம் மார்ச் 4ம் தேதி
உலக கணித தினம் 4ம் தேதி மார்ச் மாதம் நடைபெற இருக்கின்றது. இதற்காக ஒர் இணையத்தளம். அதில் பள்ளி குழந்தைகள் கணினி மூலம் கணித விளையாட்டு விளையாடி வெற்றி பெற ஓர் அறிய வாய்ப்பு காத்திருக்கின்றது.
நீங்கள் இதில் பங்கு பெற ரிஜிஸ்டர் செய்யவேண்டும். அதற்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
எவ்வாறு ரிஜிஸ்டர் செய்வது ?
http://www.worldmathday.com/ என்ற இணையத்தளத்திற்கு சென்று மெனு பாரில் உள்ள ரிஜிஸ்டர் என்ற பட்டனை கிளிக் செய்யவும். பின்னர் நீங்கள் பள்ளி ஆசிரியராக இருந்து பள்ளிக்கூடம் சார்பாக உங்கள் மாணவர்களுக்கு ரிஜிஸ்டர் செய்ய ஸ்கூல் ரிஜிஸ்டரேஸன் என்ற பட்டணை கிளிக் செய்யவும். நீங்கள் தனி நபராக ரிஜிஸ்டர் செய்ய ஹோம் ரிஜிஸ்டரேஸன் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
பின்னர் உங்களுடைய நாடு, வயது, பெயர், மின் அஞ்சல் முகவரி, மற்றும் கடவுச்சொல் (பாஸ்வேட்) விபரத்தை பூர்த்தி செய்யவும் பின்னர் நீங்கள் 13 வயதுக்கு மேற்பட்டவரா அல்லது கீழ் பட்டவரா என்பதை தேர்வு செய்து சப்மிட் பட்டனை கிளிக் செய்யவும்.
எவ்வாறு லாகின் செய்வது?
பின்னர் நீங்கள் குறிப்பிட்ட மின்அஞ்சல் முகவரிக்கு உங்களுடைய விபரத்தை சரிபார்க்க மின்அஞ்சல் வரும். மின்அஞ்சலில் உள்ள கிளிக்ஹியர் என்ற லிங்கை கிளிக் செய்யவும். கணினி http://www.worldmathday.com/ சென்று உங்கள் அக்கௌன்ட்டை ஆக்டிவேட் செய்யும். அவ்வளவுதான் உங்கள் அக்கௌன்ட் ரெடி. உங்கள் கணினி திரையில் உங்களுடைய யூஸர் நேம் மற்றும் பாஸ்வேட் தெரியும். அதைவைத்து வளைப்பக்கத்தில் உள்ள சைன் இன் என்ற பட்டனை கிளிக் செய்து யூஸர் நேம் மற்றும் பாஸ்வேட் தந்து நீங்கள் விளையாட வேண்டியது தான்.
கன்ரோல் போடின் பயன்பாடு?
நீங்கள் லாக்கின் செய்தவுடன் உங்களுடைய விபரம். அதாவது, நீங்கள் (முன்பு விளையாடி இருந்தால்) அதிகம் பெற்ற மதிப்பெண், சரியான பதில்கள் எத்தனை, சரியாக கணக்கிடும் திறன் எவ்வளவு, வேகமாக மற்றும் சரியாக கணக்கிடும் திறன் எவ்வளவு மற்றும் இதுவரை விளையாடிய விளையாட்டுக்கள் எத்தனை என்ற விபரம் தெரியும்.
எவ்வாறு விளையாடுவது?
வளைத்தளத்தின் வலது பக்கத்தில் (கீழ் விளக்கப்படம்) உள்ள என்டர் கேம் என்ற அய்கானை கிளிக் செய்யவும்.
கிளிக் செய்தவுடன் கணினி தற்போது உலகின் மற்ற பகுதியில் உள்ள விளையாட்டு நண்பர்களை தானாக (ரேண்டம் முறையில்) தேர்வு செய்து (நான்கு நபர்கள்) உங்கள் கண் முன் நிறுத்தி உங்களுடன் விளையாட வைக்கும்.
சரியாக ஒரு நிமிடத்தில் நீங்கள் எத்தனை கணக்குக்கு சரியாக விடை செய்கின்றீர்கள் என்பது தான் போட்டி…
குறிப்பு- சில சமயம் கணக்கில் கூட்டல், கழித்தல் அல்லது இரண்டும் சேர்ந்து இருக்கும். கவனம் தேவை.
இதில் கவனிக்க வேண்டியது, நீங்கள் மூன்று (3) தவறான விடை தந்தால் விளையாட்டை விட்டு நீக்கப்படுவீர்கள்.
ஆட்டம் முடிந்தவுடன் உங்களுடைய வெற்றி விபரம் தரப்படும் .
நன்றாக இருக்கின்றதே என்று நீங்கள் மீண்டும் விளையாட நினைத்தால் பிளே எகைன் என்ற இடத்தில் கிளிக் செய்யவும்.
சரி இதனால் என்ன பயன் ?
பரிசு மற்றும் சர்ட்டிபிகேட் வழங்கப்படுகின்றது….. இவை மட்டுமா?
இந்த போட்டியின் மூலம் உங்கள் குழந்தைக்கு மனிதனுக்கே உரித்தான தொடு உணர்ச்சி, பார்வை, கேட்டல் மற்றும் பகுத்தறிவு என அனைத்து பாகங்களும் ஒன்று இணைந்து வேகமாக செயல்படுவதால், இந்த அவசர உலகத்தில் ஈடு கொடுத்து வருங்காலத்தில் வெற்றி பெற இப்பயிற்சி உதவியாக இருக்கும். மேலும் பள்ளி கணக்கு பாடத்தை மிக வேகமாக தப்பு இல்லாமல் செய்ய உதவும், மேலும் கணினியின் மீது ஆர்வம் எற்படும் என்பதில் ஐயமில்லை…
உங்களுக்கு இச்செய்தி பயனுள்ளதாக கருதினால் உங்கள் கருத்துகளை பின்னூட்டம் இடுங்கள்.
Monday, January 12, 2009
உடல் பயிற்சி வாச் டிஸ்ட் (PDF பைலாக)
வாழ்கையில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அது போல் உடல் பயிற்சி மிகவும் அவசியம். நாம் தினம் தினம் எவ்வாறு பங்குசந்தை எற்ற இறக்கம் மற்றும் வனிக வர்த்தக எற்ற இறக்கங்களை தவறாமல் கவனிக்கின்றோமே அது போல், நாம் உடல் நிலை பற்றி கவனிப்பதில்லை (என்னையும் சேர்த்துதான்). நாம் உடல் நிலை நன்றாக இருந்தால் தான் நம்மால் சுரு சுருப்பாக இயங்க முடியும் என்று நமக்கு தெரிந்திருந்தும் நாம் கவணத்தில் கொள்ளதது தான் இதில் வருந்தக்கது.
நாம் பங்குசந்தையில் எவ்வாறு போட்போலியோ அல்லது வாச் டிஸ்ட் வைத்து நாம் பங்கின் இலக்கை கவனிக்கின்றோமோ அதுபோல் நாம் உடற்பயிற்சி குறிக்கோள் மற்றும் அடைந்த இலக்கு பற்றி அறிய கீழ் தரப்பட்டுள்ள படிவம் உங்களுக்கு உதவுலாம். தேவையுடையவர்கள்
டவுன் லேட் செய்து கொள்ளவும்.இந்த படிவத்தின் மூலம் நீங்கள் கீழ்கன்ட பயன்களை அடையமுடியும்.
- Stay frugal by tracking your fitness for free.
- Easily track weekly and daily workouts.
- Monitor fitness goals and achievements.
- Get trim, slim, and fit by honestly logging your exercise sessions.
- Keep a pulse on weight fluctuations, heart rates, and energy levels.
- Plan daily workout schedules.
- Track time spent exercising, distance traveled, and workout intensity.
- Have fun with fitness by using an attractive exercise log sheet.
Sunday, December 28, 2008
2008 ஆம் ஆண்டிலில் மிகச்சிறந்த மற்றும் அதிக அளவில் டவுன்லோட் செய்யபட்ட மென்பொருள் பற்றிய விபரம்
2008 ஆம் ஆண்டிலில் மிகச்சிறந்த மற்றும் அதிக அளவில் டவுன்லோட் செய்யபட்ட மென்பொருள் பற்றிய விபரம் லைப்ஹேக்கர்.காம் மற்றும் எனது சொந்த பயன்பாட்டு அடிப்படையில் இருந்து வெளியிடுள்ளேன். (விண்டோஸ் தொழில்நுட்பம்)
1.FireFox 3 ஒரு டஜன்க்கு மேற்பட்ட (Smart Location Bar, Add-ons manager,intuitive interface, Malware protection,Improved download manager,Native looks for every system,Remember pas sword,Smart bookmarks,Bookmark Manager) என புதிய வழிமுறைகளையும், சிறப்பு அம்சங்களையும் கொண்டு வெளியிடபட்ட இந்த மென்பொருள் இணையபயன்பாட்டை மிகவும் எழிதாக ஆக்கியுள்ளது.
2. PDF to Word converter, இதுவரை நாம் வேட் டாக்குமெண்டை பிடிஎப் ஆக மாற்றும் மென்பொருளை தான் அதிகம் பார்த்து இருக்கின்றோம், ஆதுவும் தற்போது தனிமென்பொருளாக இல்லாமல் வேட்வுடன் இவ்வசதி இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மென்பொருள் சற்று வித்தியாசமாக பிடிஎப் டாக்குமெண்டை வேட் டாக்குமெண்டகா மிகச் சுலோபமாக மாற்றி தருகின்றது. (குறிப்பு மிகப்பெரிய வேட் டாக்குமெண்டை மாற்ற இந்த மொன்பொருள் சிறந்தது அல்ல)
3. CCleaner என்று அழைக்கப்படும் Crap Cleaner மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள தேவையில்லாத அனைத்து விதமான டெம்பரவரி பைல்ஸ், குக்கிஸ், மொரி டாப், மற்றும் சிஸ்டம் லாக் ஆகியவற்றை ஸ்கேன் செய்து ஆகற்ற உதவுகின்றது. என்னுடைய கணினியில் தேவையில்லாமல் இருந்தவற்றை அகற்றி எனக்கு 1.6 GB இடத்தை தந்துள்ளது.
4. இதுவரை காசு கொடுத்து வாங்கிய ஆன்டி-வைரஸ் மென்பொருளை இலவசமாக வெளியிட்டு கலக்கிய நிறுவனம் AVG அது தனது 2008ம் வருடத்தில் புதிய இட்டர்பேஸ், பாஸ்ட் பர்பாமன்ஸ் மற்றும் இணையதள பாதுகாப்பு அப்டேட் என பல புதிய விசயங்கைளை அறிமுகப்படுத்தியுள்ளது.
5. Quick Media Converter எந்த ஒரு ஆடியோ மற்றும் வீடியோ கோப்பை ஒரு பார்மெட்டில் இருந்து மற்றெரு பார்மெட்டிர்க்கு எழிதாக மாற்ற உதவுகின்றது மேலும் டிரக் அன்ட் டிராப் முறையில் உங்கள் ஆடியோ மற்றும் வீடியோ கோப்பை எழிதாக இலுத்து போட்டு DivX and Xvid to Xbox and iPhone output என சிறப்பாக மாற்ற உதவுகின்றது.
6. Google Chrome கூகிலின் மற்றும் ஒரு வெளியிடு, அருமை என்று மட்டும் சொல்லி நிறுத்தி விடமுடியாது. பயர்பாக்ஸ் பயன்படுத்தியவர்கள் அவ்வளவு எழிதாக எற்றுகொள்ள மாட்டர்கள். இருந்தாலும் இது நால்ல போட்டியை உண்டாக்கும். இதில் எனக்கு பிடித்தது வேகமாக இணையா பக்கங்களை இறக்கம் செய்வது மற்றும் கூகில் சர்ச் உடன் இணைந்து வேகமாக தேட உதவுவது. நாம் பார்த்த இணைய பக்கங்களை தம்புநையிலாக படம் இட்டு காட்டுவது.
7. EverNote நீங்கள் கல்லுரியில் பிராஜக்ட் செய்பவர? அல்லது எதுவும் ஆராச்சியில் இடுபடுபவரா? ஆம் என்றால் இந்த மென்பொருள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் பார்த்த பக்கங்ளை சேகரித்து வைக்க உதவுவது மட்டும் இல்லாமல் வளைத்தள விபரம் போன்றவற்றையும் சேகரித்து வைப்பதால் மேல் விபரம் தேவைப்படும் போது விரைவாக சென்று பார்க்க உதவுகின்றது.
8. ChartNexus சார்ட்டிங் மெண்பொருள் பங்குச்சந்தை வனிகர்களுக்கு ஒர் வரப்பிரசாதம் மிகவும் பயன் உள்ளது. மேலும் இதன் சிறப்பு அம்சங்கள் 3 வருட ஈ.ஓ.டி டேட்டாவும் கிடைக்கிறது. கையாளுவது மிக எளிதாக உள்ளது. இலவசமாகவும் கிடைக்கின்றது வேறு என்ன வேண்டும்.
9. Windows Live Writer வின்டோஸ் லைவ் ரைட்டர் மென்பொருள் வைத்து நேரடியா உங்கள் வலைபக்கத்தில் பதிவு செய்ய முடியும். வின்டோஸ் லைவ் ரைட்டர் பயன்படுத்தி வாரஇறுதி நாட்களில் எழுதியதை வார நாட்களில் பதிவு செய்ய விரும்பினால், நீங்கள் பதிவு செய்ய விரும்பும் தேதியை குறிப்பிட்டு பதிவு (Publish) செய்து விடுங்கள். அது சரியாக நீங்கள் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் வலைதளத்தில் பதிவு செய்து விடும்.
10. NHM Writer தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும். ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி. Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது. மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது. இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.
Wednesday, December 10, 2008
மணிமேனேஜர் (உங்கள் சேமிப்புக்கு வழிகாட்டி)
- 1. என் பணம் எங்கிருந்து வருகிறது விபரம் அறிய?
- 2. எங்கு போகின்றது, யாருக்கு போகின்றது என்ற விபரம் அறிய?
- 3. காலம் கடத்தாமல், அபராதம் இல்லாமல் பில் கட்டவேண்டுமா?
- 4. வங்கிக் கணக்கில் பணம் எவ்வளவு உள்ளது, செக் கொடுத்தால் பாஸ் ஆகுமா?
- 5. என்றைக்கு எந்த செலவை எவ்வளவு செய்தேன் என்ற விபரம் பார்க்க வேண்டுமா?
- 6. ஆண்டு மற்றும் மாத வரவு செலவு திட்டமிடல்?
- 7. உங்கள் சொத்து விபரங்கள் அவற்றின் மதிப்புகள் அறிய?
- 8. பங்கு சந்தையில் உங்கள் பங்கின் விலை என்ன அவற்றின் மதிப்பு எவ்வளவு?
- 9.ஆண்டுஅறிக்கை... ஃ
- 10. வீட்டு மின்கட்டணம், தொலைபேசிக் கட்டணம், பால் பில், மளிகை பில் என சகலமும் பராமரிக்க... ?
இந்த மணிமேனேஜர் உங்களுக்கு உதவலாம்?
(தினசரி அல்லது வாரம் ஒரு முறையாவது நீங்கள் உங்கள் வரவு செலவு விபரத்தை டேட்டா என்டர் செய்யவேண்டும்)
மணிமேனேஜர் இன்ஸ்டால் செய்யும் முறை...
மேல் உள்ள திரைவிளக்கபடத்தில் அடிகளை நீங்கள் கடந்து விட்டால் உங்கள் கணினியில் மணிமேனேஜர் வெற்றிகரமாக இன்ஸ்டால் ஆகிவிட்டது.
முதன் முதலாக மணிமேனேஜரை இயக்கும் போது எந்த மொழில் மொன்பொருள் மெனு (Menu) வேண்டும் என்று தேர்வு செய்ய வேண்டும். இதில் மகிழ்சியான செய்தி என்னவென்றால் மெனுக்கள் அனைத்தும் தமிழில் மாற்றி கொள்ளும் வசதி இதன் மூலம் மெனுக்கள் தமிழில் உங்கள் கண் முன்...
முதன் முதலாக மணிமேனேஜரை இயக்கும் போது உங்கள் கணக்கை துவங்க புதிய கோப்பை திறக்கவேண்டும் (New Database)
உங்கள் நாணய பரிவர்த்தனை விபரம் மற்றும் யுஸர் நேம் விபரங்களை பூர்த்திசெய்ய வேண்டும்.
புதிய கோப்பு திறந்த பின்பு நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் விபரம் (உதரணமாக இந்தியன் வங்கி, ஜசிஜசிஜ வங்கி, இந்திய இன்போ லையன், மற்றும் ஷேர்கான்) பெயர் மட்டும் தரவேண்டும்.
உங்கள் கணக்கு வகை என்ன என்பதை தேர்வு செய்யவும். வங்கி கணக்காக இருந்தால் காசோலை சேமிப்பு, பங்கு வர்த்தக கணக்காக இருந்தால் முதலீடு என்ற வகையை தேர்வு செய்யவும்.
உங்களுடைய கணக்கு எண், வைத்திருப்பு, கையிருப்பு விபரம் மற்றும் ஆரம்பத் தொகை பேன்ற விபரங்களை தரவும்.
உங்களுடை கணக்கு விபரம் தந்தவுடன் உங்கள் இல்லப்பக்கம் ரெடி.
மணிமேனேஜர் மெனுவை ஆங்கிலத்தில் மாற்ற கீழ் உள்ள திரைவிளக்கபடத்தை பார்க்கவும்.
மணிமேனேஜர் ஆங்கிலத்தில்....
இந்த மென்பொருளில் உள்ள சிறப்பு அம்சம் உங்கள் பங்கு பற்றி விபரம் பராமரிக்க முடியும் அது மட்டும் இன்றி இந்த மென்பொருள் தினசரி பங்கு வர்த்தக விலையை அப்டேட் செய்யவும் முடியும்.
இந்த மென்பொருள் முலம் நீங்கள் உங்க வங்கி கணக்கு மற்றும் முதலீடு விபரங்களை பதிவு செய்து உங்கள் சேமிப்பு மற்றும் செலவு விபரங்களை பராமரிக்க முடிவதுடன் திட்டமிட்டு வாழ உதவும்.
சரி சரி இந்த மென்பொருள் இலவசமா என்று கேட்டால் ஆம் என்பதே எனது பதில் எங்கு டவுன்லேட் செய்யால்....
For Windows 2000/XP/2003 Installer Download from SourceForge.net
For Linux SuSE Download rpm from PackMan repository
For Linux Ubuntu DEB i386-32bit Package (0.9.3.0)
Download from SourceForge.net
The File size is 2.38 MB.
Friday, November 28, 2008
ஆன்லைன் மூலம் வரவு செலவு விபரங்களை கணக்கிட
ஆன்லைன் மூலம் உங்கள் வரவு செலவு விபரங்களை கணக்கிட கீழ் உள்ள வளைத்தளங்கள் உதவலாம்...
Expensr (இந்த வளைத்தளம் பயன்படுத்திய வகையில் நன்றாக உள்ளது).online tool that tracks your expenses and then compares your spending with similar people so you know where to improve.
BillMonk
free service that makes it easy to track expenses between friends, and to settle them up instantly online. Particularly popular with roommates, young professionals, and college students, it has been used for splitting bills like rent, utilities, meals, and beers. BillMonk also allows users to keep track of books, DVDs, or other items that they have lent to or borrowed from their friends.
Billster
online application developed to organise your personal and shared expenses.
BudgetOnWeb
free online system that integrates project management with contacts management and financial tools to manage your budget online.
BudgetTracker
allows you to track your budget, bills and transactions together in an easy to read calendar that can send you reminders when bills are due. You can also view most of the data stored on this site with your cellular phone so you can take all your data with you where ever you may be.
Buxfer
online tool to track your personal expenses online. broken link?Comments
ClearCheckbook
online checkbook register that will help you to keep track of all your checking, savings and credit card accounts in one place.
ExpenseView
easy to use application that helps track your expenses, budgets and income. Use it to get an understanding of how you're spending your money.
Expensr
online tool that tracks your expenses and then compares your spending with similar people so you know where to improve.
IOweYou
expenses sharing calculator, ideal for shared houses, clubs, societies, business partnerships or other cost sharing.
JustBudget
free online web application to manage your personal budget, easily and succesfully.
MoneyTrackin
free online webapp that allows you to track all your expenses and incomes easily and without effort, thus allowing you to have a clear view of your financial situation. It intends to be a simple yet powerful online budget management tool.
MyBillQ
web-based application that gives you an easy way to keep track of your bills.
MySpendigPlan
secure online personal finance budgeting software that can help you manage your spending to save money, reduce debt, manage tasks and reach your financial goals faster. You can create shopping lists online (and buy the items), set bills due and task reminder email alerts and create savings goals that you can track.
Plan2Spend
free tool, you can perform several simple tasks which will help you understand the dynamics of your expenses. It can help you to organize your bills and payments, track your daily expenses, view summary and detailed budget, learn to manage money from the Plan2Spend community and learn to budget your monthly spending.
SharingBills
web based tool that helps you keep track of your shared and personal expenses that reminds you who owes you and whom you owe.
Spending Diary
simple spending tracking and analysis site.
SpendingProfile
website where you can track your spending and watch your budget.
Wesabe
makes it easy to better understand how you spend your money and links you to a community of people dedicated to helping each other make better financial decisions.
Xpenser
online tool to track your expenses via Email, SMS, instant messaging (AOL, MSN, Yahoo), Twitter, and voice (call and say your expense). Export to Quicken/MS Money/CSV/other.
மாதாந்திர வரவு செலவு திட்டம்
உங்களுடைய மாதாந்திர வரவு செலவு திட்டமிட அல்லது திட்டமிட்டு செலவு செய்ய உங்கள் கணனியில் உள்ள எக்ஸல் ஸீட்டை பயன்படுத்த முடியும்.... என்று உங்களுக்கு தெரியுமா?
மாதந்திர கணக்கு
ஓரு வருடத்திற்கான கணக்கு மற்றும் திட்டமிடல்..
டவுன்லேட் செய்யுங்கள் உங்கள் பணத்தை திட்டமிட்டு செலவு செய்யுங்கள்.
மேல் உள்ள உள்ள எக்ஸல் ஸீட்டை டவுன்லேட் செய்ய இங்கு கிளிசெய்யவும்..
Monday, November 24, 2008
வின்டோஸ் லைவ் போட்டோ கேலரி எவ்வாறு பயன்படுத்துவது?
வின்டோஸ் லைவ் போட்டோ கேலரி மூலம் உங்களுடைய புகைப்பட கருவியில் இருந்து நேரடியா புகைப்படங்களை எளிய முறையில் கணினியில் இறக்கி கொள்ள முடியும்.
புகைப்படத்தின் நிழல் படம் திரையில் சிறிய வடிவில் தெரிவதால் அதிக நேரம் தேடாமல் எளிதாக தேர்வு செய்ய முடியும்.
வின்டோஸ் லைவ் போட்டோ கேலரி டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
திரைவிளக்கப்படம்
வின்டோஸ் லைவ் போட்டோ கேலரி உள்ள மிகப்பெரிய பயன்பாடு, புகைப்படங்களை ஆண்டு/மாதம்/நாள் என வரிசைப்படுத்தி பார்க்க முடியும். இதன் முலம் புகைப்படங்களை தேடும் நேரம் வெகுவாக குறையும்.
உங்களுடைய புகைப்படங்களை நீங்கள் தரவரிசைப்படுத்த விரும்பினால் தரவரிசைப்படுத்தி கொள்ளும் வசதி. உதரணமாக உங்கள் வீட்டு திருமனம், ஊட்டி சுற்றுலா, பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும் உறவினர்கள் வருகை என தமிழ் மொழியில் அழகானா முறையில் தரவரிசை படுத்தமுடியும்.
உதரணமாக கணினி புகைப்படம் என்று தரவரிசைப் படுத்தபட்ட படத்தை திரைவிளக்கபடத்தில் காணலாம்.
தரவரிசைபடுத்திய புகைப்படத்தை வெளிநாடுகளில்/வெளிஊர்களில் வாழும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணையதளத்தின் முலம் பகிர்ந்து கொள்ள நீங்கள் நடடினால் Publish என்ற பட்டணை கிளிக் செய்து நீங்கள் பதிவு செய்ய விரும்பும் இணையதள குறிப்புக்ளை (யுஸர் நேம் மற்றும் பாஸ்வேட்) தந்து கிளிக் செய்யவும்.
சிறிது வினாடிகளில் உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பார்த்து மகிழமுடியும்
இந்த வசதியின் மூலம் நீங்க உங்கள் புகைப்படத்தை ஒன்று ஒன்றாக இணையதளத்தில் ஏற்ற தேவையில்லை. மேலும் இதனால் உங்கள் நேரம் வெகுவாக மிச்சம் ஆகின்றது.
ஆகா இணையத்தின் மூலம் எவ்வாறு புகைப்படங்களை பகீந்து கொள்ள முடிந்ததே அதுபோல் இதையே நாம் படச்சுருளாகா பாக்க முடியுமா? அல்லது CDயில் பதிய முடியுமா? என்று நீங்கள் கேட்டால், முடியும் என்பதே எனது பதில்.
படச்சுருளாகா மாற்ற அல்லது CDயில் பதிய. உங்களுக்கு தேவையான படங்களை தேர்வு செய்யது மேக் (Make) என்ற மெனுவை கிளிக் செய்யவும்.
படச்சுருளாகா மாற்ற உங்கள் கணினியில் Windows Movie Maker இருக்க வேண்டும். விஸ்டாக இருந்தல் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகி இருக்கும்.
Windows XP யாக இருந்தால் இந்த இணையதளத்தில் இருந்து இறக்கி கொள்ளுங்கள்
Tuesday, October 28, 2008
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?
NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.
- NHM Writer மென்பொருள் Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.
- மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.
- இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.
- வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.
- தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.
- ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.
- ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.
- இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.
NHM Writer எவ்வாறு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி?
NHM Writer என்ற மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.
எவ்வாறு டவுன்லோட் செய்வது திரை விளக்கப்படம்.
Click here to download NHM Writer
உங்கள் கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய (NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யவும்.
பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
முதல் படி (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
2ஆம் படி (Step 2) இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
3ஆம் படி (Step 3) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
4ஆம் படி (Step 4) இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
5ஆம் படி (Step 5) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.6ஆம் படி (Step 6) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்
பின்னர் மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்படும்.
NHM Writer யை எவ்வாறு பயன்படுத்துவது?
NHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar ரில் வலது மூலையில் மணி போன்ற
ஓர் குறியீடு (Icon) தெரிந்தால் NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம். இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும்.
தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு தேர்வு செய்வது?
நான் முன்பே கூறியது போல் நீங்கள் விரும்பும் தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்ய மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து இடது (Left) பட்டனை கிளிக் செய்தால், திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும். அதில் நீங்கள் விரும்பிய தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்யவும்.
தேர்வு செய்த பின்னர் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யமுடியும்.
மேலும் எளிதாக தமிழில் தட்டச்சு தேர்வு, செய்ய Alt Key மற்றும் 4 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.
தமிழ் தட்டச்சுவிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key மற்றும் 0 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.
செட்டிங்கை எவ்வாறு மாற்றுவது?
NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
அதில் செட்டிங் என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் தெரியும். அதில் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகைக்கு மாற்ற உதவும் Alt Key மற்றும் எண்னை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம்.
தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு அறிந்து கொள்வது?
முதன் முதலில் தமிழில் தட்டச்சு செய்ய எந்தெந்த தமிழ் எழுத்து, தட்டச்சு பலகையில் எந்தெந்த பொத்தானில் உள்ளது? என்பதை அறிவது அவசியம்.
ஆகவே தான் உங்களுக்கு உதவியாக நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்கள் கண் முன் அந்த தட்டச்சு பலகையின் விளக்கப்படம் கொண்டுவர NHM Writer உதவி புரிகின்றது. அதற்கு நீங்கள், மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் போதும். திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
அதில் On-Screen Keyboard என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.
நீங்கள் இதை வைத்து தட்டச்சு செய்யும் எழுத்து எங்கு உள்ளது என்பதை எளிதில் பார்த்து தட்டச்சு செய்ய முடியும்.
யா,ய்,யூ,யி,யீ போன்ற எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சு செய்வது?
எனக்கு தெரிந்தவரை தமிழில் தட்டச்சு செய்பவர்கள் ஆரம்பத்தில் பிரச்சனையாக கருதுவது மேற் குறிப்பிட்ட தமிழ் எழுத்துக்களை தான். அவற்றை தட்டச்சு செய்ய NHM Writer, Key Preview என்ற எளிய வழியை ஏற்படுத்தி உள்ளது.
Key Preview என்ற திரையை பார்க்க மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
அதில் Key Preview என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்
உதாரணமாக நீங்கள் a என்ற ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் அதற்கு ”ய” என்ற தழிழ் எழுத்து உங்கள் திரையில் விழும். நீங்கள் அந்த ”ய” என்ற தழிழ் எழுத்தை ”ய்” என்றோ, அல்லது ”யா” என்றோ மாற்ற விரும்பினால் "a;" அல்லது ah என்று தட்டச்சு செய்ய வேண்டும். உங்களுக்கு உதவியாக கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.
நீங்கள் இதை பார்த்து, எந்த ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் என்ன தமிழ் எழுத்து வரும் என்பதை நன்றாக அறிந்து செய்ய முடியும்.
இனி உங்கள் தமிழ் தட்டச்சு, தமிழை போலவே இனிதாக இருக்கும்! வளர்க இனிய தமிழ் மற்றும் இணைய தமிழ்!!!