படித்ததில் பிடித்தது
நம் எல்லா கனவுகளும் நனவாகும் – நாம் அந்தக் கனவுகளைச் செயலாக்க முனைந்தால்... - வால்ட் டிஸ்னி
முதலில், கனவு ஒன்று வேண்டும். கனவுதான் நாம் எங்கே செல்ல வேண்டும் என்று சொல்லும்.
பெரும்பான்மையான கனவை நனவாக்கியவர்கள் சிந்தித்ததினால் மட்டுமே அதைச் செய்தார்கள். ரொம்பவும் பெரிதாய் சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால், மிகச் சரியாய்ச் சிந்திக்கவேண்டும்.
நம்மில் பெரும்பாலானோர் சிந்திக்காமலேயே ஒரு செயலை ஆரம்பித்து விடுகின்றோம் அல்லது ஒரேயடியாய் சிந்தித்து நேரத்தைச் செலவழித்துவிட்டு, செயலை ஆரம்பிக்காமலே இருந்துவிடுகின்றோம். இதனாலேயே பெரும்பாலானோருக்கு ஸ்டார்ட்டிங் ட்ரபிள்.
மனம்தளராத குணத்தை. பிரச்னையைச் சந்திக்காத மனிதர்களே இல்லை எனலாம். அதிலும், கனவை நனவாக்க முனையும்போது நாம் எக்கச்சக்கப் பிரச்னைகளைச் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. இவற்றில் பல பிரச்னைகள் இயற்கையானதாகவும், பல பிரச்னைகள் செயற்கையானதாகவும் இருக்கும். இதில் சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், நாம் சந்திக்கின்ற பல பிரச்னை களில் ஒருசில பிரச்னைகளே தீர்க்கமுடியாத வையாக இருக்கும்
பிரச்னையைக் கண்டு கலங்காமல் இருந்து விடாமுயற்சி செய்தால் மட்டுமே கனவு நனவாகும
கனவை மனதில் வைத்து நனவாக்கும் முயற்சியில் ஈடுபடும்போது, எப்போதுமே நம்முடைய பார்வையும் எண்ணமும் தொலைநோக்குடன் இருக்க வேண்டும். இந்தத் தொலைநோக்குப் பார்வையே நம்மை இடையில் வரும் இடையூறு களைச் சுலபத்தில்
களையச்செய்வதாய் இருக்கும்.
தொலைநோக்குப் பார்வை இல்லாதபட்சத்தில் குறுகிய பார்வை இடையூறுகளைப் பெரிதாக்கிக் காண்பித்து, நம்மை அந்த இடத்திலேயே ஸ்தம்பிக்கச் செய்துவிடும்
இறுதியில் எல்லா பிரச்னைகளையும் சமாளித்து தடைகளை யெல்லாம் தாண்டி மன உறுதியுடன் செயல்பட் டால், நாம் நமது கனவை நனவாக்கிவிடுவோம்.
அவ்வப்போது கொஞ்சம் திரும்பியும் பார்க்க வேண்டும் திரும்பிப்பார்த்தால் மட்டுமே நமக்கு நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே போகின்றோம், இடையில் கற்ற பாடங்கள் என்னென்ன என்பது புரியும். இது புரிந்தால், அட நாம் இவ்வளவு சிறப்பாக இந்த விஷயங்களைச் செய்துவருகின் றோமே என்ற மனமகிழ்ச்சி வரும். அந்த மன மகிழ்ச்சியே நம்மை அடுத்தடுத்து, நாம் காணும் புதிய கனவுகளை நனவாக்குவதில் மிகவும் உதவியாக இருக்கும்.
No comments:
Post a Comment