2008 ஆம் ஆண்டிலில் மிகச்சிறந்த மற்றும் அதிக அளவில் டவுன்லோட் செய்யபட்ட மென்பொருள் பற்றிய விபரம் லைப்ஹேக்கர்.காம் மற்றும் எனது சொந்த பயன்பாட்டு அடிப்படையில் இருந்து வெளியிடுள்ளேன். (விண்டோஸ் தொழில்நுட்பம்)
1.FireFox 3 ஒரு டஜன்க்கு மேற்பட்ட (Smart Location Bar, Add-ons manager,intuitive interface, Malware protection,Improved download manager,Native looks for every system,Remember pas sword,Smart bookmarks,Bookmark Manager) என புதிய வழிமுறைகளையும், சிறப்பு அம்சங்களையும் கொண்டு வெளியிடபட்ட இந்த மென்பொருள் இணையபயன்பாட்டை மிகவும் எழிதாக ஆக்கியுள்ளது.
2. PDF to Word converter, இதுவரை நாம் வேட் டாக்குமெண்டை பிடிஎப் ஆக மாற்றும் மென்பொருளை தான் அதிகம் பார்த்து இருக்கின்றோம், ஆதுவும் தற்போது தனிமென்பொருளாக இல்லாமல் வேட்வுடன் இவ்வசதி இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மென்பொருள் சற்று வித்தியாசமாக பிடிஎப் டாக்குமெண்டை வேட் டாக்குமெண்டகா மிகச் சுலோபமாக மாற்றி தருகின்றது. (குறிப்பு மிகப்பெரிய வேட் டாக்குமெண்டை மாற்ற இந்த மொன்பொருள் சிறந்தது அல்ல)
3. CCleaner என்று அழைக்கப்படும் Crap Cleaner மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள தேவையில்லாத அனைத்து விதமான டெம்பரவரி பைல்ஸ், குக்கிஸ், மொரி டாப், மற்றும் சிஸ்டம் லாக் ஆகியவற்றை ஸ்கேன் செய்து ஆகற்ற உதவுகின்றது. என்னுடைய கணினியில் தேவையில்லாமல் இருந்தவற்றை அகற்றி எனக்கு 1.6 GB இடத்தை தந்துள்ளது.
4. இதுவரை காசு கொடுத்து வாங்கிய ஆன்டி-வைரஸ் மென்பொருளை இலவசமாக வெளியிட்டு கலக்கிய நிறுவனம் AVG அது தனது 2008ம் வருடத்தில் புதிய இட்டர்பேஸ், பாஸ்ட் பர்பாமன்ஸ் மற்றும் இணையதள பாதுகாப்பு அப்டேட் என பல புதிய விசயங்கைளை அறிமுகப்படுத்தியுள்ளது.
5. Quick Media Converter எந்த ஒரு ஆடியோ மற்றும் வீடியோ கோப்பை ஒரு பார்மெட்டில் இருந்து மற்றெரு பார்மெட்டிர்க்கு எழிதாக மாற்ற உதவுகின்றது மேலும் டிரக் அன்ட் டிராப் முறையில் உங்கள் ஆடியோ மற்றும் வீடியோ கோப்பை எழிதாக இலுத்து போட்டு DivX and Xvid to Xbox and iPhone output என சிறப்பாக மாற்ற உதவுகின்றது.
6. Google Chrome கூகிலின் மற்றும் ஒரு வெளியிடு, அருமை என்று மட்டும் சொல்லி நிறுத்தி விடமுடியாது. பயர்பாக்ஸ் பயன்படுத்தியவர்கள் அவ்வளவு எழிதாக எற்றுகொள்ள மாட்டர்கள். இருந்தாலும் இது நால்ல போட்டியை உண்டாக்கும். இதில் எனக்கு பிடித்தது வேகமாக இணையா பக்கங்களை இறக்கம் செய்வது மற்றும் கூகில் சர்ச் உடன் இணைந்து வேகமாக தேட உதவுவது. நாம் பார்த்த இணைய பக்கங்களை தம்புநையிலாக படம் இட்டு காட்டுவது.
7. EverNote நீங்கள் கல்லுரியில் பிராஜக்ட் செய்பவர? அல்லது எதுவும் ஆராச்சியில் இடுபடுபவரா? ஆம் என்றால் இந்த மென்பொருள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் பார்த்த பக்கங்ளை சேகரித்து வைக்க உதவுவது மட்டும் இல்லாமல் வளைத்தள விபரம் போன்றவற்றையும் சேகரித்து வைப்பதால் மேல் விபரம் தேவைப்படும் போது விரைவாக சென்று பார்க்க உதவுகின்றது.
8. ChartNexus சார்ட்டிங் மெண்பொருள் பங்குச்சந்தை வனிகர்களுக்கு ஒர் வரப்பிரசாதம் மிகவும் பயன் உள்ளது. மேலும் இதன் சிறப்பு அம்சங்கள் 3 வருட ஈ.ஓ.டி டேட்டாவும் கிடைக்கிறது. கையாளுவது மிக எளிதாக உள்ளது. இலவசமாகவும் கிடைக்கின்றது வேறு என்ன வேண்டும்.
9. Windows Live Writer வின்டோஸ் லைவ் ரைட்டர் மென்பொருள் வைத்து நேரடியா உங்கள் வலைபக்கத்தில் பதிவு செய்ய முடியும். வின்டோஸ் லைவ் ரைட்டர் பயன்படுத்தி வாரஇறுதி நாட்களில் எழுதியதை வார நாட்களில் பதிவு செய்ய விரும்பினால், நீங்கள் பதிவு செய்ய விரும்பும் தேதியை குறிப்பிட்டு பதிவு (Publish) செய்து விடுங்கள். அது சரியாக நீங்கள் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் வலைதளத்தில் பதிவு செய்து விடும்.
10. NHM Writer தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும். ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி. Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது. மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது. இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.