Friday, October 22, 2010

காதில் விழுந்த கலக்கல் மொழிகள்

 

தோல்வி இல்லாமல் வெற்றி இல்லை

தீமை இல்லாமல் நன்மை இல்லை

சுமை இல்லாமல் சுகம் இல்லை

வேதனை இல்லாமல் இன்பம் இல்லை

கண்ணீர் இல்லாமல் வாழ்கை இல்லை

Saturday, October 16, 2010

யானை

தொகுப்பு  (முஹம்மது ஃஜாபீர், தொடக்கநிலை 4)

யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மனிதர்களை தவிர்த்த விலங்குகளிலே இதுவே அதிக நாட்கள் வாழும் நில விலங்கு ஆகும் .

யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், மற்றும் ஆசிய யானைகள் ஆகும். இவைகளுக்கு இடையே சிறப்பான வேறுபாடுகள் உண்டு. பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.

யானைகள் மனிதர்களை ஒத்த வாழ்க்கையைக் கொண்டவை. மனிதன் கருவறைக்குள் 10 மாதம் இருக்கிறான், யானை 20 மாதம் இருக்கிறது. மனித ஆயுள், யானை ஆயுள் கிட்டத்தட்ட ஒன்றுதான். மேலும் யானைகள் தாய் வழி சமூகத்தை பின்பற்றக் கூடியவை. மூத்த பெண் யானைதான் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும். ஆண் யானைகள் தனியாகவே இருக்கும்.

யானையின் வாழ்நாளில் 6 முறை பற்கள் விழுந்து முளைக்கின்றன.

clip_image001

பொருள்கள்

  • யானை முடி மோதிரம்
  • யானைத் தந்தச் சிற்பங்கள்
  • யானைத் தந்தச் செயின்
  • யானைத் தந்தக் கட்டில் (மன்னர்கள் உறங்கும் கட்டில்)
  • யானைத் தந்தக் பல்லக்குகளும் செய்யப்பட்டன

பழமொழிகள்

  • யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
  • யானைக்கும் அடி சறுக்கும்.
  • யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்
  • யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே

சொலவடைகள்

  • யானைப்பசிக்கு சோளப்பொரியா?
  • யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டது போல

Saturday, October 02, 2010

இலட்சிய சிகரம்

இன்று காலை சன் டிவியில் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் வாசித்த கவிதை

இலட்சிய சிகரம்

நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன்,

எங்கு இருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா?

நான் தோண்டிக்கொண்டே இருக்கிறேன்,

எங்கு இருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா?

நான் பெருங்கடலில் நீந்திக்கொண்டே  இருக்கிறேன்,

எங்கு இருக்கிறது அமைதித் தீவு, என்   இறைவா?

இறைவா, நூறு கோடி மக்கள்

இலட்சிய சிகரத்தையும், அறிவுப்  புதையலையும்,

இன்ப அமைதியையும், உழைத்தடைய அருள்வாயாக.