Monday, May 07, 2012

வாழ்க்கை கணக்கு

 

முகம் - வீட்டு முகவரியை காட்டும்,

செயல்கள் - வாழ்க்கைக்கு முகவரி காட்டும்

ஒருவன் உயர்ந்தால் அது அவனுடைய பெற்றோருக்கு மட்டும் பெருமை அல்ல; அந்த அளவிற்கு உயர, கல்வி எனும் அறிவு கண்ணை திறந்து வைத்த ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இளமைப்பருவம் வாழ்வின் வசந்த காலம். எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பது இந்த பருவம் தான்.

உழைப்பால் வெற்றியை உருவாக்கு.

முயற்சியை அதற்கு எருவாக்கு.

வாழ்க்கை ஒரு கணிதம்...

“கணிதம் ஒரு புதிர் – வாழ்க்கையும் ஒரு புதிர்”.

சிலருக்கு விடை கிடைத்து விடுகிறது. சிலருக்கு விடை கிடைக்காமலேயே போகிறது. அதற்காக ஒரு போதும் சோர்ந்து விடாதீர்கள். கீழ்கண்ட குறியீட்டை பயன்படுத்திப் பாருங்கள்.

நல்லனவற்றைக் கூட்டிக் கொள் --------> +

தீயவற்றைக் கழித்துக் கொள் ----------> -

அறிவைப் பெருக்கிக் கொள் -----------> x

நேரத்தை வகுத்துக் கொள் ------------> /

வெற்றி, தோல்வியை சமமாக கொள் --> =

வெற்றியை எவ்வாறு சாதனையாக்குவது? தோல்வியை எப்படி தோற்கடிப்பது என்பதை நூலகத்தில் உள்ள நூல்களைப் படித்தால் ஆயிரக்கணக்கான நுட்பம் நிறைந்த வழிகள் புதையலாக புதைந்திருக்கின்றன. நல்ல புத்தகங்களை நேசித்து வாசிப்பதற்கு ஆகும் நேரத்தை விட, அதை யோசித்து தேர்ந்தெடுப்பதற்கு ஆகும் நேரத்தை நீட்டிக் கொள்ளுங்கள். “

எட்டு மணி நேரத்தில் ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என எனக்கு கட்டளையிடப்பட்டால், அதில், ஆறு மணி நேரத்தை கோடாரியை கூராக்குவதிலேயே செலவிடுவேன்” என்றார் சரித்திர நாயகன் ஆபிரகாம் லிங்கன்.

அன்பின் அலாவுதீன்

No comments: