கஸ்டமர் (வாடிக்கையாளர்) என்பவர் ஒருவருக்காகத்தான் நாம் இங்கு இருக்கிறோம், ஏன் என்றால் அவர் தான் நம்முடைய அனைத்து தோவைகளுக்கு உடையா ரசீது மற்றும் சம்பளம் போன்ற வற்றை தருகின்றர், மேலும் நம்மை வியாபரத்தில் நீடிக்க செய்கின்றார், அதனால் அவருடைய தேவைகளை நாம் புரிந்து கொள்வது மிக அவசியம் அப்போது தான் நாம் அவருடைய தேவைகளை மிகச்சரியா நிறைவேற்ற முடியும்.
சரி இப்போது கஸ்டமர் (வாடிக்கையாளர்) அவர்களுடைய தேவைகள் என்ன என்பதை பார்ப்போம்
1. நம்பகத்தக்க தன்மை, (Reliability) (அதாவது நாம் என்ன சொன்னோமே அதை செய்வது, முடிந்தால் அதிகம் செய்வது, அதே நேரத்தில் சொன்னதை விட குறைவாக செய்யாமல் இருப்பது)
2. வேகம் (Speed)(இந்த இனைய உலகில் வேகம் மிகவும் முக்கியம் அது தற்போது எப்படி என்றால் அது மாதத்திலா, வாரத்திலா, நாட்களிலா என்று கேட்டல் இல்லை உடனே கேட்டவுடன் பொருள் கையில் வேண்டும், இது நிருவனத்தின் போட்டித் தன்மையை மேன்படுத்த உதவும்)
3. அறிந்து கொள்ளுதல் (Empathy) (எல்லா வாடிக்கையாலரையும் ஒரே நேரத்தில் திருப்தி படுத்த முடியாது, அதே நேரத்தில் அவர்களுடைய வருத்தம், கோபம், ஏமாற்றம் அகியவற்றறை உனர்ந்து அவர்களிடம் நாம் புரிந்து கொண்டதை தெரிவித்துக்கொண்டு மேலும் இது போல் நடக்காமல் பார்த்த கொள்வதாக உறுதி கூறவேண்டும்)
4. அறிவுத்தன்மை ( Knowledge)(அறிவுத்தன்மை நாம் நிறுவனத்தின் மீது உள்ள மதிப்பை வாடிக்கையாளர் இடையே உயர்த்துகின்றது மேலும் அது பிரச்சனைகளுக்கு மிக விரைவாக விடைகாண உதவுகின்றது.)
5. பார்க்க மற்றும் உணரக்கூடியவைகள் (Tangibility) (வாடிக்கையாளர் பாக்ககூடிய மற்றும் தொடக்கூடிய யாவும் அது உங்கள் தொழிலாளி உடை மற்றும் அழகு தோற்றம், நிருவனத்தின் இடம், விளம்பரம்)
6. விலை (Value) (பொருள் விரைவாகவும், உழைக்ககூடியதாகவும், நம்பிக்கை உடையதாகவும், கிடைத்தாள் மக்கள் விலை அதிகம் தந்து பெற தவறுவதில்லை)
ஒவ்வொறு வாடிக்கையாளரின் தேவை மற்ற வாடிக்கையாளரின் தேவையை விட மாறுபட்டு இறுக்கும் அதாவது ஓருவருக்கு விலை முக்கியமானதாக இருக்கும் மற்றவருக்கு பொருள் விரைவாக கிடைக்க கூடியது முக்கியமானதாக இருக்கும் அகையால் நாம் நம்முடைய வாடிக்கையாளரின் தேவை அறிந்து அவர்களுக்கு எற்றார் போல அறிந்து செயல்பட்டல் வெற்றி நிச்சயம்
No comments:
Post a Comment