தகவல் தொழில்நுட்பத்தில் ”தலை” சிறந்து விளங்குவது சாட்டிலைட். இதனால்தான் இன்று கண்டம் விட்டு கண்டம் டிவியைப் பார்க்க முடிகிறது. ரேடியோ, டெலிபோன், இண்டர்நெட்,ராணுவதொடர்பு, வானவியல் ஆராய்ச்சி,பூமியை படம் பிடித்து ஆராய்தல் போன்ற அனைத்தும் தகவல் தொழில்நுட்பத்தில் பயன்படுவதால் எப்போதும்மில்லாத விரைவான வளர்ச்சி எல்லா துறைகளிலும் காணப்படுகிறது.
பூமியிலிருந்து 300 கி.மி. உயரத்திலிருக்கும் சாட்டிலைட் 90 நிமிடங்களில் பூமியை சுற்றும். அதேபோல 36,000 கீ.மீ. உயரத்தில் நிலை நிறுத்தும்போது அது பூமியை சுற்றிவர 24 மணி நேரமாகிறது. இந்தக் கணக்கில்தான் நமக்கு தேவையான திசையில் நிலை நிறுத்தும்போது தொடர்ச்சியாக நமக்கு நேர் உச்சியில் நின்று தொடர்புகொள்கிறது.
ஓரு சாட்டிலைட் குறைந்தது 10 வருடங்கள் ஆயுளுடன் சுற்றிவருகிறது. இதற்கான சக்தி சூரியனிடமிருந்தே பெறப்படுகிறது.
No comments:
Post a Comment