Friday, October 24, 2008

ICICI Direct மூலம் எவ்வாறு தின வர்த்தகம் செய்வது?

எல்லோரும் தினசரி வர்த்தகம் செய்கின்றார்களே., நாமும் செய்வோம்னு களத்துல இறங்கினேன். முதலில் நமக்கு தின வர்த்தகம் செய்யவதற்கு நல்ல பங்கு எது என்று தெரியவேண்டும் அல்லவா! அதனால் நம்ம (பங்கு சந்தையில் பணம் பண்ணலாம் வாங்க) ”திரு. சாய் கணேஷ்” அவர்களின் ”நிப்டி” போட்டியில் கலந்துகொண்டேன்.

”நிப்டி முடிவு என்ன?” என்ற போட்டியில் ஒருநாள் வெற்றி பெற்றதால் ஒரு மாதத்திற்கான தினவர்த்தக குறிப்பு பரிசாக கிடைத்தது.

அதன்படி திரு.சாய் அவர்களும் தினசரி தினவர்த்தக குறிப்பு அனுப்புகிறார் நானும் பார்க்கின்றேன். அவர் பரிந்துரை செய்த பங்குகள் சொன்ன மாதிரி ஏறி இறங்கியது. ஆக என்னடா கையில் வெண்ணைய வச்சிகிட்டு நாம சும்மா பார்த்துக்கிட்டு இருக்கோமேன்னு களத்துல  இறங்கிட்டேன். (ஒரு நாள் மட்டும்)

எப்படி Margin Plus அல்லது Margin வர்த்தகம் செய்வது?

நீங்கள் ICICI Direct வங்கியில் கணக்கு வைத்து இருந்தால், இரண்டு விதமான முறையில் தினவர்த்தகம் செய்ய முடியும்.

1. Margin Plus இதில் உங்கள் கையில் இருக்கும் முதலீட்டை விட 21 மடங்கு அதிகமான  பங்குகளை வாங்கி விற்க முடியும்.

2. Margin இதில் உங்கள் கையில் இருக்கும் முதலீட்டை விட 3 முதல் 4 மடங்கு அதிகமான  பங்குகளை வாங்கி விற்க முடியும்.

Margin Plus மற்றும் Margin னில் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், MarginPlus ல் டெலிவரி எடுக்க முடியாது. உங்களிடம் தேவையான பணம் இருப்பில் இருந்தால் மட்டுமே Margin னில் டெலிவரி எடுக்க முடியும்.

image

Margin Plus வர்த்தகம் செய்ய முதலில் Margin Plus order என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் கீழ் தெரியும் திரையில் நீங்கள் வாங்க நினைக்கும் பங்கு குறியீட்டு எண்னை குறிப்பிட்டு பின்னர் எத்தனை வாங்க அல்லது விற்க விரும்புகின்றீர்கள் என்று தெரிவிக்கவேண்டும்.

image 

உதாரணமாக எப்படி முதலில் விற்றுவிட்டு பின்பு வாங்குவது என்பதை பார்ப்போம்.

முதலில் Action என்ற இடத்தில் Sell  என்பதை நீங்கள் செலக்ட் செய்ய வேண்டும்.

image 

உதாரணமாக நீங்கள் Reliance Infra பங்கை வாங்க எண்ணி இருந்தால் பங்கினுடைய Stock Code என்ன என்பதை Stcok என்ற இடத்தில் தரவேண்டும்.

குறிப்பு : ICICI Direct வுடைய Stock code, NSE உள்ள Stock code இரண்டும் ஒன்று அல்ல. ஆகவே உங்களுக்கு Stock code என்னவென்று தெரியாவிட்டால் Find Stock code என்ற லிங்கை கிளிக் செய்து நிறுவனத்தின் பெயர் குறிப்பிட்டு Search செய்யவும்.

Stock Code கிடைத்தவுடன் தற்போது உள்ள விலை நிலவரம் தெரியவேண்டும் என்றால் Get Quote என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

நீங்கள் விற்க நினைக்கும் அளவு (Qty) என்ன என்பதை Quantity என்ற இடத்தில் தரவும்.

பின்னர் Cover Order பகுதியில் முக்கியமாக, என்ன விலைக்கு வாங்க அல்லது விற்க விரும்புகின்றீர்கள் என்பதை Limit Price என்ற இடத்தில் தரவும். பின்னர் Stop Loss Trigger Price எவ்வளவு என்பதையும் தெரிவிக்கவேண்டும். குறிப்பாக Stop Loss Trigger Price 3% சதவிகிதம் Limit Price விலைக்கு குறைவாக இருக்க வேண்டும். இல்லை என்றால் நீங்கள் Submit செய்யும் போது Error என்று வரும் மீண்டும் சரி செய்து தான் Submit செய்யமுடியும்.

குறிப்பு : ICICI Direct அக்கவுன்டை பொருத்தவரை உங்ளுடைய Stop Loss Trigger Price தொட்டவுடன் உங்களுடைய Order உறுதி செய்யப்படும். ஆகவே முடிந்த வரை Stop Loss Trigger Price யை தற்போதைய விலைக்கு சற்று தள்ளியே தரவும்.

மேற்கூறிய விபரங்கள் அனைத்தும் தந்து Submit பட்டனை அமுக்கினால் கீழ் உள்ள திரை கணினியில் தெரியும்.

image 

நீங்க தந்த விபரம் மீண்டும் ஒரு முறை சரிபார்க்கவும். (தயவு செய்து என்ன விலைக்கு விற்பனை செய்கின்றோம், என்ன விலைக்கு வாங்குகின்றோம் என்பதை கட்டயாம் பார்க்கவும்.) சரிபார்த்த பின்பு Proceed என்ற பட்டனை அமுக்கவும்.

image 

Proceed என்ற பட்டனை அமுக்கியவுடன் மேலே உள்ள Order Confirmation திரை தெரியும்.

நம்முடைய Order நிலை என்ன என்பதை பார்க்க Margin Plus Positions என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

image

உங்களுடைய Order நிலை கீழ் உள்ள திரை விளக்கப்படத்தில் உள்ளது போல் தெரியும். image

சரி, தற்போது உங்கள் கையில் பங்கு இல்லாமல் விற்பனை செய்து முடித்து விட்டீர்கள். அதுபோல் என்ன விலைக்கு வாங்கவேண்டும் என்பதையும் Order செய்து செய்துவிட்டீர்கள். எல்லாம் சரி தான்., நான் முன்பு கூறியது போல் நீங்கள் என்ன விலைக்கு விற்பனை செய்கின்றோம், என்ன விலைக்கு வாங்குகின்றோம் என்று பார்த்து இருந்தால் உங்களுக்கு சந்தேகம் வந்து இருக்கும். வரவில்லையா?! இல்லையென்றால்.,  மேலே உள்ள திரை விளக்கப்படத்தை உற்று நோக்குங்கள்! நான் என்ன சொல்ல வருகின்றேன் என்று புரியும். 

இன்னும் புரியவில்லையா?! சொல்கிறேன், கவனமாக படியுங்கள். அதாவது நீங்கள் Reliance Infra பங்கை விற்ற விலை 521.55 ரூபாய். ஆனால் நீங்கள் வாங்க சொல்லி இருக்கும் விலை 550. Stop Loss விலை 530 ரூபாய்.  அப்படியென்றால்

Sell @ 521.55X20 =  10431 ரூபாய்

Buy @ 550.00X20 =  11000 ரூபாய்.

முதலில் நீங்கள் விற்று விட்டு வாங்குவதால் உங்களுக்கு =  569 ரூபாய் தான் நஷ்டம். 

இது ICICI Direct டில் உள்ள ஒரு குறைபாடு. இதுபோன்ற நிலைகளில் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்றால், எப்போது நீங்கள் வெளியேற வேண்டும் என்று முடிவு செய்கின்றீர்ளோ அப்போது Modify என்ற அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். (திரைவிளக்கப்படம் கீழே) 

image

Modify என்ற அந்த லிங்கை கிளிக் செய்த உடன் கீழே உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் கணினியில் தெரியும். அதில் நீங்கள் Order Type என்ற இடத்தில் Limit என்று இருக்கும் அதை நீங்கள் Market என்று மாற்றி Order Now என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

image

இவ்வாறு செய்தால் உங்களுடைய மாற்றம் செய்த Order அப்போதைய சந்தை விலையில் உங்களின் பங்குகள் வாங்கப்படும். இதன் மூலம் நீங்கள் முதலில் விற்று பின்பு வாங்கியதால் உங்கள் கணக்கு நேர் செய்யபட்டுள்ளது.

குறிப்பு : நீங்கள் உங்களுடைய Order  விபரம் மாற்ற விரும்பினால் மாலை 2:45 PM க்குள் முடித்து விடவேண்டும் இல்லையென்றால் 2:45 PM to 3:15 க்குள் எந்த நேரத்திலும் ஆட்டேமெட்டிக்காக ICICI Direct விற்று/வாங்கி உங்கள் கணக்கை நேர்செய்யும்.

உங்களுடைய லாபம்/நஷ்டத்துடன் பங்கு வணிகரின் தரகர் கட்டணம் எவ்வளவு என்பதையும் சேர்த்துகொள்ள வேண்டும்.  ICICI Direct டை பொறுத்தவரை கட்டணம் 0.05% சதவிகிதம்.

கடைசியாக, தினவர்த்தகத்தில் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டியது ”ஸ்டாப் லாஸ்”. இரண்டாவதாக,  ”ஒரு லாட்” (lot) மட்டும் வாங்கவும், மூன்றாவதாக, ”டார்கெட்” -முற்றிலும் டெக்னிகல்அடிப்படையாக கொண்டது. அதனால் அதையே எதிர்பார்த்து இருக்க வேண்டாம், அதற்கு முன்பாகவே வெளியேறுங்கள்.

சந்தையில் வெற்றி பெற வேண்டும் என்றால், போதும் என்ற மனம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதிகம் ஆசைப்படாமல் லாபம் கிடைத்தவுடன் வெளியேறுங்கள். பட்டால் தான் திருந்துவேன் என்று இருக்காதீர்கள்.

இந்த பதிவை எழுத நான் ICICI Direct டுக்கு தந்த டியூசன் பீஸ் 1581.30 ரூபாய். (அன்றைய தேதியில் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம்)

இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

தினவர்த்தகம் எவ்வாறு செய்வது என்று கூறிய திரு. சாய் கணேஷ் நன்றி.

8 comments:

Ravi said...

III:

Thanks for sharing this kind a useful info. For a long time I was trying to do MARGINPLUS but not succeded becos of some error messages. Now can u tell how to do MARGINPLUS BUY & SELL and MARGIN trading. Thanks a lot once again.

Unknown said...

Welcome Ravikumar... Have fun do enjoy your trading.

Vicky said...

Thank you sir. Please explain the same with hdfc demat account sir. Would be much helpful

CM ரகு said...

Thank you very much..
could u tell me which is best- ICICI direct or SBI ?
and if possible explain the process in SBI ...
Thanks in advance..

Unknown said...

Ragu : Sorry i do not know about SBI. I am using only ICICI Direct... the besting about ICICI provides you 5 to 25 times of credit limit to trade...

Rajan said...

எனிக்கி ஒன்னுமே பிரியல நைநா

Unknown said...

Intha vasathigal Android cellphone kidaikuma?.

ATOZ FOREX DETAILS said...

பங்குச் சந்தை பற்றிய மாறவே மாறாத உண்மைகள்:

1. பங்குச் சந்தை என்பது நூறு சதவிகிதம் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.

2. எங்க டிப்ஸ், இண்டிகேட்டர், ரோபோட், சாப்ட்வேர் யூஸ் பண்ணுங்கள் ரிஸ்க் இல்லாமல் பணம் பண்ணலாம் என்பவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள். ரிஸ்க் கட்டாயம் இருக்கிறது. எவ்வளவு ரிஸ்க் எடுகிறோமோ அவ்வளவு பணம் பண்ணலாம் என்பதே உண்மை. ரிஸ்க் என்பதைக் கட்டாயம் தவிர்க்க முடியாது, ஆனால் எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதை வேண்டுமானால் முன்கூட்டியே முடிவு செய்ய இயலும்

4. தினமும் கட்டாயம் இவ்வளவு லாபம் பார்க்கலாம் என்பதெல்லாம் காதுல பூ, சுனாமில கூட அவங்கல்லாம் சும்மிங் போவாங்க போல. ஓவர் ஆல் நீங்கள் எடுக்கும் ரிஸ்க்கின் ,மறுபடியும் சொல்கிறேன் ரிஸ்க்கின் அளவினைப் பொருத்து லாபம் பெறலாம் என்பதே உண்மை. கட்டாயம் லாபம் பார்க்க இயலும் ஆனால் எல்லா நாளும் எல்லா டிறேடிலும் இல்லை .

5. 90 % மேல் டிரேடர்கள் நஷ்டம் மட்டுமே பெறுகிறார்கள். காரணம் அவர்கள் பங்குச் சந்தையினை தொழிலாகப் பார்ப்பது இல்லை.

6. பணத்தை அதிகம் இழப்பவர்கள் தினசரி வர்த்தகம் மற்றும் ஸ்டாப் லாஸ் வைத்து டிரேடு செய்பவர்கள். கண்மூடித் தனமாக ஒரு பங்கில் அல்லது துறையில் முதலீடு செய்பவர்கள்.

7. நான் இதுவரை சொன்ன உண்மை புரியவே பலருக்கு பல ஆண்டுகள் ஆகிறது.

http://atozforexdetails.blogspot.in/2014/03/blog-post.html