இந்த வாரம் நாணய விகடனில் அரசாங்கத்துக்குக் கிடைக்கவேண்டிய வருமான வரிக்கு வேட்டு வைக்கும் விசயம் பற்றி ஒரு செய்தி வந்துள்ளது.
பங்குச் சந்தையில் தினம் தினம் குட்டையைக் குழப்புகிற பல புண்ணியவான்களில் பல்க் செக்யூரிட்டி டிரேடர்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள் முக்கியமான ஜாதி. டிவிடெண்ட் கொடுக்கப் போகிறோம் என்று ஏதாவது ஒரு நிறுவனம் அறிவித்தால் போதும்... உடனே இந்த பல்க் டிரேடர்கள் கும்பலாகக் கிளம்பி வந்து பல ஆயிரம் ஷேர்களை வாங்கிக் குவித்துவிடுவார்கள்.
பொதுவாக ஒரு நிறுவனம் டிவிடெண்ட் அறிவித்தால், அந்த ஷேரின் மதிப்பு கிடுகிடுவென ஏறும். டிவிடெண்ட் அளிக்கப்படும் ரெக்கார்ட் தேதி முடிந்த மறுநாளே அந்த ஷேரின் விலை சரசரவென இறங்கி, கிட்டத்தட்ட டிவிடெண்ட் அறிவிப்பு வெளியான தேதியில் இருந்த விலைக்கு வந்துவிடும்.
பல்க் டிரேடர்கள் அறிவிப்பு வெளியானதும் வாங்குவார்கள்... அதன்பிறகு வாங்கிய ஷேர்களின் மதிப்பு நன்றாகக் குறைந்த பிறகு நஷ்டத்துக்கு விற்றுவிட்டு வெளியேறிவிடுவார்கள்''
இந்த பல்க் டிரேடர்கள் இரண்டு விஷயங்களை விவரமாகச் செய்வதில் கொழுத்த லாபம் பார்க்கின்றனர். ஒன்று, டிவிடெண்ட் மூலம் கிடைக்கும் பணத்துக்கு வரி கிடையாது என்பதால் அதில், கொள்ளை லாபம் பார்ப்பது. இரண்டாவது, ஷேர்களை நஷ்டத்துக்கு விற்பதால், வரித்தாக்கல் செய்யும்போது, பிற பங்குகளை விற்பதால் கிடைக்கும் லாபத்தை இந்த நஷ்டத்தைக் காட்டி ஈடுசெய்வது. இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதே இந்தப் புத்திசாலிகளின் கணக்கு.
இவர்கள் இப்படிச் செய்து வருவதன் மூலம் அரசாங்கத்துக்கு பல கோடி ரூபாய் வருமான வரி இழப்பு ஏற்படுகிறது. எனவே, இனி பல்க் டிரேடர்கள் வாங்கும் அத்தனை ஷேர்களின் மூலம் கிடைக்கும் டிவிடெண்டுக்கு கட்டாயம் வரி கட்ட வேண்டும் என்று என்று சொல்லிவிட்டது வருமானவரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாணையம் சிறுமுதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் சலுகையில் இவர்கள் இனி குளிர்காயமுடியாது... நல்ல விஷயம்தான்
No comments:
Post a Comment