Tuesday, October 28, 2008

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

  1. NHM Writer மென்பொருள்  Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.
  2. மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.
  3. இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன்  சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.
  4. வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.
  5. தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள்  மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.
  6. ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.
  7. ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.
  8. இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.

NHM Writer எவ்வாறு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி?

NHM Writer என்ற மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.

எவ்வாறு டவுன்லோட் செய்வது திரை விளக்கப்படம்.

Click here to download NHM Writer

image

உங்கள் கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய (NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யவும்.

பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

முதல் படி (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image

2ஆம் படி (Step 2)  இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image 

3ஆம் படி (Step 3) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
image

4ஆம் படி (Step 4)  இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image

5ஆம் படி (Step 5) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image

6ஆம் படி (Step 6) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்

image

பின்னர் மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்படும்.

image

NHM Writer யை எவ்வாறு பயன்படுத்துவது?

NHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar ரில் வலது மூலையில் மணி போன்ற image ஓர் குறியீடு (Icon) தெரிந்தால் NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம்.  இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும். 

தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு தேர்வு செய்வது?

நான் முன்பே கூறியது போல் நீங்கள் விரும்பும் தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்ய மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon)  உங்கள் மவுசை வைத்து இடது (Left) பட்டனை கிளிக் செய்தால், திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும். அதில் நீங்கள் விரும்பிய தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்யவும்.

image

தேர்வு செய்த பின்னர் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யமுடியும்.

மேலும் எளிதாக தமிழில் தட்டச்சு தேர்வு, செய்ய Alt Key மற்றும் 4 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

தமிழ் தட்டச்சுவிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key மற்றும் 0 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

செட்டிங்கை எவ்வாறு மாற்றுவது?

NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.

image

அதில் செட்டிங் என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் தெரியும். அதில் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகைக்கு மாற்ற உதவும் Alt Key மற்றும் எண்னை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம்.

image

தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு அறிந்து கொள்வது?

முதன் முதலில் தமிழில் தட்டச்சு செய்ய எந்தெந்த தமிழ் எழுத்து, தட்டச்சு பலகையில் எந்தெந்த பொத்தானில் உள்ளது? என்பதை அறிவது அவசியம்.

ஆகவே தான் உங்களுக்கு உதவியாக நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்கள் கண் முன் அந்த தட்டச்சு பலகையின் விளக்கப்படம் கொண்டுவர NHM Writer உதவி புரிகின்றது. அதற்கு நீங்கள், மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் போதும். திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.

image

அதில் On-Screen Keyboard என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும். 

image

நீங்கள் இதை வைத்து தட்டச்சு செய்யும் எழுத்து எங்கு உள்ளது என்பதை எளிதில் பார்த்து தட்டச்சு செய்ய முடியும்.

யா,ய்,யூ,யி,யீ போன்ற எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சு செய்வது?

எனக்கு தெரிந்தவரை தமிழில் தட்டச்சு செய்பவர்கள் ஆரம்பத்தில் பிரச்சனையாக கருதுவது மேற் குறிப்பிட்ட தமிழ் எழுத்துக்களை தான். அவற்றை தட்டச்சு செய்ய NHM Writer, Key Preview என்ற எளிய வழியை ஏற்படுத்தி உள்ளது. 

Key Preview என்ற திரையை பார்க்க மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.

image

அதில் Key Preview என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்

image

உதாரணமாக நீங்கள் a என்ற ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் அதற்கு ”ய” என்ற தழிழ் எழுத்து உங்கள் திரையில் விழும். நீங்கள் அந்த ”ய” என்ற தழிழ் எழுத்தை ”ய்” என்றோ, அல்லது ”யா” என்றோ மாற்ற விரும்பினால் "a;" அல்லது ah என்று தட்டச்சு செய்ய வேண்டும். உங்களுக்கு உதவியாக கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.

image

நீங்கள் இதை பார்த்து, எந்த ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் என்ன தமிழ் எழுத்து வரும் என்பதை நன்றாக அறிந்து செய்ய முடியும்.

இனி உங்கள் தமிழ் தட்டச்சு, தமிழை போலவே இனிதாக இருக்கும்! வளர்க இனிய தமிழ் மற்றும் இணைய தமிழ்!!!  

247 comments:

«Oldest   ‹Older   201 – 247 of 247
Shanmugam said...

After installation, while opening the settings from the icon in the system tray, the window appears as blank. Please let me know how to rectify it.

Shanmugam said...

The window appears while opening the icon after installation, as blank under the captions Language, keyboard, encoding, file name & toggle key.
Please guide me to rectify it.

Unknown said...

thanks a lot! helpful information to all! go ahead with some useful informations like this!

Unknown said...

Please I am alredy use Vanavil font
through NHM writer, now OS to My PC WINDOWS 7 32 BIT. Now I download NHM 2 Writer and installed but didn`t work ( can`t create file c/programfiles/NHM WRITER 2 /CONFIG/XTML' access denied. Please rectify my problem. you give some idea.

sukri said...

I need to use Tamil old typewriter vanavil, but i am unable to use it, anything other than unicode is not working, can you please help me

Unknown said...

நான் கம்ப்யூட்டர் துறைக்கு வந்து 8 வருட காலம் ஆனாலும், உங்களுடைய சாப்ட்வேர் மூலமாக தான் முதலில் தமிழ் கற்றுக்கொண்டேன். இது எனக்கு பல இடங்களில் பாராட்டுகளை தந்துள்ளது. என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.

Unknown said...

நான் கம்ப்யூட்டர் துறைக்கு வந்து 8 வருட காலம் ஆனாலும், உங்களுடைய சாப்ட்வேர் மூலமாக தான் முதலில் தமிழ் கற்றுக்கொண்டேன். இது எனக்கு பல இடங்களில் பாராட்டுகளை தந்துள்ளது. என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.

Unknown said...

ஐயகோ நண்பரே நான் உஙளுக்கு எப்படி
எனது நன்றியை தெரிவிப்பது என்று எனக்கு தெரியவில்லை, என்னிடம் நான் உருவாக்கிய தமிழ் எழுத்துக்கள் உள்ளன அவற்றை எப்படி இந்த மென்பொருளில் சேர்ப்பது. மிக அருமையான மென்பொருள்....தமிழ் கணிணி பயணாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்..... மிக்க நன்றி

JK said...

இந்த வலைதளத்தைப் பாா்த்தோம். மிகவும் பயனுள்ளதாக செய்திருக்கிறீ்ா்கள். தமிழ் ஆா்வலா்கள் மிகவும் நேசிக்கக்கூடியதாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், இது போன்ற வலைதளங்கள் பல மொழிகளிலும் வந்திருப்பது பலதரப்பட்ட மக்களின் மொழி ஆா்வ்த்திற்கு சிறந்த வலை என்பது எம்முடைய கருத்தாகும். தொடரட்டும் இந்த சிறந்த பணி. வாழ்த்துக்கள்.

Unknown said...

படியுங்கள், சுவையுங்கள்... ளை, படித்தேன, சுவைத்தேன். மிகவும் சுவை மிகுந்த பகுதி. ஆனால் திகட்டாத சுவை. இது போன்ற சுவையை இப்போது தான் சுவைக்கின்றேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வலை மூலம், அநேக தமிழ் நண்பா்களையும். அன்பா்களையும் சந்தித்து உறவாடக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறீா்கள். உங்களது இந்தப் பணி மென்மேலும் சிறந்தோங்க வாழ்த்துகின்றேன். வாழ்க! வளா்க!! வளங்கள் பெருக!!!

Muthu said...

can we use this NHM with some online editor as I am not able to download this to my office machine...

Umapathy (உமாபதி) said...

வணக்கம்,
Access Violation பிழைச்செய்தி குறித்து விருத்தியாளருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். அவர்கள் அதற்கான தீர்வைக்கண்டுபிடிக்கும் வரை தற்காலிகத் தீர்வாக விண்டேஸ் ரெஜிஸ்ரியில் அணுகி (Start -> Run -> regedit) KEY_CURRENT_USER\Software\NHM இற்குச் சென்று NHMWriter ஐ rightclick செய்து delete பண்ணிவிடவும். இந்தக்கீயும் கீழ்வரும் தகவல் இருக்கும்
Windows Registry Editor Version 5.00

[HKEY_CURRENT_USER\Software\NHM]

[HKEY_CURRENT_USER\Software\NHM\Writer]
"Locales"="12"
"Path"="C:\\Program Files\\NHM Writer 2.0\\"
"0409"="16843250"
"0439"="16847106"
"0445"="16847122"
"0446"="16847138"
"0447"="16847154"
"0449"="16847170"
"044a"="16847186"
"044b"="16847202"
"044c"="16847218"
"044e"="16847234"
"044f"="16847250"
"0457"="16847298"

இது எனக்கு விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி3 பெப்ரவரி 2014 வரையிலான மேம்படுத்தலுக்கு வேலைசெய்கிறது. கணினியில் ஒன்றுக்கு மேற்பட்ட பயனர் இருந்தால் அவர்களின் கணக்கில் உள்நுழைந்து ஒவ்வொரு பயனருக்கும் இவ்வாறு செய்தல் வேண்டும்.

thiyaga,, said...

எனக்கு தேவையான அனைத்தும் கிடைத்தது.. நன்றி..

chidambaranathan said...

க் மற்றும் ஷ டைப் செய்தால் க்ஷ என்று வருகிறது. இதை எப்படித் தவிர்ப்பது?

அதே போல் வாலிபப் பருவம் என்று அடிக்க நினைத்தால் வாலிப்ப் என்று தானாக மாறிவிடுகிறது.
ரர என்று அடித்தாலும் ர்ர என்று மாறிவிடுகிறது.

Word ல் ஆட்டோ கரெக்ட் ஆப்ஷனில் அனைத்தையும் செயலிழக்கச் செய்துவிட்டேன் அப்படியிருந்தும் இந்த பிரச்சினை.

Unknown said...

ந‌ன்றி மிகவும் அருமையான பதிவு..

Unknown said...

i have downloaded nhm n installed bt m nt getting tamil words instead m getting english oly m trying tis 4 long time plz anyone help me

Unknown said...

NHM writer-ல் phonetic முறையில் வானவில் அவ்வையார் fontஐ பயன்படுத்தும் போது "ர்" ஆனது "ர" என்றே வருகிறது. எப்படி "ர்" டைப் செய்வது?

Unknown said...

I am also having same problem as Madhura N and others. Now I am not able to access NHM Writer and my Computer system shows the following error message "access violation at adress 004DA693 in module 'NhmWriter. exe. ' Read a address 00000043. ".
Recently an author of Delphi Software offered a solution for a similar problem of "Access Violation". He suggested running "Regedit" as follows:
Open up the Registry Editor from the Windows Start Run menu with regedit.

2) Navigate to the registry key, HKEY_CLASSES_ROOT\AppID\dexplore.exe

3) Replace the string value data of the key named 'AppID' with the value of {4A79114D-19E4-11d3-B86B-00C04F79F802}.
Can any one offer me such a solution so that I can use NHM Writer.
N. SRINIVASAN

Unknown said...

I downloaded NHM writer ver 2.0.1 I got error message of "Access violation..." But I soon resolved it thanks to a suggestion offered in a blogger - I clicked Start, then ran regedit and under H_KEY\CURRENT USER\SOFTWARE, I deleted "NHM Writer" appearing therein. Now the "access violation" message does not appear.

But I still am not able to use NHM writer because, as soon as I type two or three letters in Unicode "Latha font" (Tamil Old typewriter font), the font automatically changes to default font "Calibri" and I get small squares in the place of two to three tamil characters which appeared earlier.

I have added "Tamil" under Language settings - Editing Languages in MS Word. I have also disabled "Auto Correct" "Auto Format" options there. But I am still not able to type in tamil using NHM Writer.

Can any one offer me a solution for this?

N. SRINIVASAN
nsrinivasan6@gmail.com

Unknown said...

very well used this software

Unknown said...

bamini font converted to other fonts.
(Example. Bamini to tam-kavi)

Unknown said...

ஐயா நான் ரொம்ப சிரமத்தில் இருக்கேன், நான் வைத்திருப்பது வின்டோஸ் 8.1 NHM writer வேலை செய்ய வில்லை,

Prakash said...

தங்களுக்கு மிக்க நன்றி! இது மிக மிக இலகுவாக இருக்கிறது.
மீண்டும் தங்களுக்கு மனமார்ந்த நன்றி!!

அன்புடன்,
இரா.பிரகாஷ்.

Gopalan said...

நான nhm writer என்னுடைய லாப டாப்பில வைத்துள்ளேன்.
ஆனால் wordல டைப செய்யும் போது எந்த விதமான லெட்டரும வருவதில்லை. ஏன் எனத்தெரியவில்லை.
தயவு செய்து நான் என்ன செய்ய வேண்டும்
நன்றியுடன்.
கிருஷ்ணமூர்த்தி.சீ
Krishnalakshmi48@gmail.com

Unknown said...

Wow! Great post! The content is very rich, and I really like it.

Tally Services

Unknown said...

நன்றி

Unknown said...

Kubundu OSல் Unicode Fontல் New Typewriting டைப்பில் தமிழ் தட்டச்சு செய்வது

Unknown said...

sir how to use in windows7 nhm writer

Unknown said...

கடந்த நான்கு ஆண்டுகளாக உபயோகித்து வருகிரேன்... விண்டோ எளுள் இருந்து விண்டோ பத்துக்கு மாறியபின் சரியாக சப்போட் செய்யவில்லை... என்ன செய்வது... அன் இன்ஸ்டால் செய்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்தபின் பழைய சாப்ட்வேர் சில அன் இன்ஸ்டால் ஆகவில்லை.. என்ன செய்ய வீண்டும் சிபாரிசு செய்யவும்....

முகுந்த் ரத்னம் said...

vanakkam faizel. im mugunth. naan ethuvarai windos 8 il nhm writer i payanpaduthi vanthen. tharpothu windos 10 laptop vangi ullaen. athil nhm writer 2.o i install seithaal bell pondra symbol varukirathu. aanaal yellow color il varavillai. alt+3 koduththum varavillai. ennaal tamil il type seiya mudiyaaml siramappadukiren. enna kaaranam? konjam uthava mudiyuma? My mobile no 95788 96633.or aazhicinema2015@gmail.com endra mugavarikku sethi auppavum. nandri.

Unknown said...

ENATHU COMPUTER L INSTALL SEITHU OPENE PANNUM POTHU EPPADI VARUKIRATHU

"ACCESS VIOLATION AT ADRESS 0052388F IN MODULE 'NHM WRITER EXE' READ OF ADDRESS 00000047"

Unknown said...

Dear Sir,

Kindly inform me that how to type the following method with the help of your software.
ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.
Kindly inform me to my mail ID: srgopalan_80@rediffmail.com
S. RAJAGOPALAN
MOB:9176321619.

Unknown said...

நான் 234 வாிசையை தட்டச்சு(suntommy) font -ல் செய்துள்ளேன். அவற்றை NHM Writer - format- க்கு மாற்ற வேண்டும். வழிமுறையைக் கூறுங்கள்

Unknown said...

I have typed around 250 line of content in (Suntommy) format. I would like convert all to Tamil Alphabetical order( தமிழ்அகர வரிசை). Kindly give ideas to change in NHM writer format. and also Tamil Alphabetical order


Thank You

A JANARTHANAM said...


I have installed NHM writer but it could not be opened. If i click the following message appears. Please tell me proper installation of NHM writer.
access violation at address 0052388f in module "nhm writer .exe. read of address 00000047
annasamyjanarthanam@gmail.com
Thanking you.
janarthanam.a



iWEB TECHNOLOGIES said...

Appreciative for such brilliant blog yours...!
Mobile App Development Company

சூ.ம.ஜெயசீலன் ( Su.Ma.Jeyaseelan) said...

I used NHM in Dell. Now I am using MacBook Air, I am not able to install. Is it possible to use in Mac. 'You can’t open the application “NHMWriterSetup2902.exe” because Microsoft Windows applications are not supported on macOS.'

Unknown said...

Greetings. After the installation the bell is shown in the mentioned place. But as soon as i kept the mouse on the bell, the bell icon is removed or disappeared. I do not know the reason. Please help me. Our OS is windows XP. with service pack 3. Thank you.

Unknown said...

sir I am downloaded the NHM 2.9 and installed it. I selected Tamil font also. After opening office word programme, I enabled the bell to golden colour by selecting tamil,and toggle alt+1 old type writer, vanavil old typewriter. but i am unable to type vanavil font.when type letters, no letter typed in word document. please give advice. i installed NHM writer i windows7 ultimate. my email address is shanthiramasamy1958@gmail.com

Unknown said...

Wonder

Unknown said...

Access violation at address 004E331E module WHM utiler exc Read of address oo000047 Rectfication method

Philip Zachariah said...

tamil99 பழகுவதற்க்கு பாடதிட்டங்கள் ஏதேனும் இருந்தால் எப்படி பெறுவது,நன்றி

Unknown said...

இது நல்லதொரு மென்பொருள். இருந்தாலும் சில தவறுகள் (நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தும்) இந்தப் பதிப்பிலும் திருத்தப்படவில்லை. சில சொற்கள் தட்டச்சு செய்யும்போது மெய் எழுத்த்க்களின் மேலுள்ள புள்ளிகள் “அ” வுடன் சேரும்போது உயிர் எழுத்தாக மாறுவதில்லை (உதாரணம்: நன்றாக்க்கேட்டேன், அடிக்க்டி, இட்த்தில்). இது போல வேறு சில bugsம் உள்ளன. சோதித்துச் சரி செய்யும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். நன்றி.

ஸ்ரீநிவாஸன்

Unknown said...

Please read 4 times slowly. Then you will try.

ாாாாா said...

சிவக்குமாா் சிவக்கு000மாா் இவ்வாறு வருகிறது என்ன செய்வது என்று தொிவில்லை 9789526411

najimudeen said...

பேஜ் மேக்கரில் nhm பயன் படுத்த முடியுமா தயவு செய்து கூறவும்

najimudeen said...

பேஜ் மேக்கரில் இந்த NHM ஐ பயன்படுத்த முடியுமா விளக்கம் தரவும்

«Oldest ‹Older   201 – 247 of 247   Newer› Newest»