சும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது அதன் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ!
Friday, October 11, 2013
அது என்ன வாழ்வின் அர்த்தம்?
Monday, October 07, 2013
படித்ததில் பிடித்தது
Wednesday, May 09, 2012
சாதனையின் ஊற்றுக்கண்
தனது அறியாமை என்னவென்று ஒரு மனிதன் அறிந்துக் கொள்வதிலும், புரிந்துக் கொள்வதிலும் தானே அவனது அறிவு பளிச்சிடுகிறது. விடா முயற்சி + கடின உழைப்பு + நுண்ணறிவு + தன்னம்பிக்கை = I.A.S, I.P.S எனும் வெற்றிக் கனியை ஒருவருக்கு கொடுக்கும்.
சாதிப்பதற்கு உங்களுக்கு தூண்டுகோலாக, ஊன்றுகோலாக இருக்கும் இந்த பழமொழி, பழுத்த மொழி.
If not me, then who?
If not now, then when?
சாதனையின் ஊற்றுக்கண் - இவ்வாக்கியத்தில் அடங்கியுள்ளது. இதை படிக்கும் போது உங்களுக்குள் ஒரு அபார ஆற்றல் கொண்ட சக்தி பிறந்திருக்குமே!
“இது சிந்தனை துளி மட்டுமல்ல. உங்கள் வாழ்க்கையை செதுக்கும் உளியும் கூட”.
துயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் உயரங்களை எட்டி பிடிக்க முடியும். எல்லையற்ற வானமே எனது எல்லை என்று வாழ்க்கைக் கூட்டைக் கட்டுங்கள். உயர் சிந்தனைகளை சிந்தைக்குள் செலுத்தினால், வாழ்க்கை வளப்படும். உங்கள் வசப்படும்.
தீபந்தத்தைத் தலைகீழாக கவிழ்த்தாலும், மேல் நோக்கி தான் சுடர் விட்டு பிரகாசிக்கும். அதுபோல மேலே மேலே முன்னேறி சென்றால் தான் வாழ்க்கையும் பிரகாசிக்கும்.
“படுத்து கிடப்பவனுக்கு பகல் கூட இரவு தான். எழுந்து நடப்பவனுக்கு திரும்பும் திசையெங்கும் கிழக்கு தான்” – என்று எண்ணி எண்ணி ஏறுங்கள் மேலே… சிகரம் பிறகு சின்னதாகி விடும் உங்களுக்கு...
அன்பின் அலாவுதீன்
Tuesday, May 08, 2012
வாழ்க்கை நேரத்தால் ஆனது
கண்கள் தூக்கத்திற்கு சொந்தமானவை
கனவுகள் நம் வாழ்க்கைக்கு சொர்க்கமானவை...
“ஒரு பவுண்ட் தேனை சேகரிக்க, தேனீ இருபது லட்சம் மலர்களைத் தேடிச்செல்கிறது”. அது போல காலத்தால் அழிக்க முடியாத கனவு சுவடுகளைப் பதிக்க நினைக்கின்ற
வாழ்க்கையை நேசிப்பவர்கள், நேரத்தை நிச்சயமாக நேசிப்பார்கள். ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் ஆனது. நேரத்தின் மதிப்பு தெரியுமா? அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும். இதோ! நேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய ஒன்பது வழிகள்...
ஒரு மில்லி செகண்டின் மதிப்பு என்னவென்று
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.
ஒரு வினாடியின் மதிப்பு என்னவென்று
விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.
ஒரு நிமிடத்தின் மதிப்பு என்னவென்று
தூக்கிலிடப்படும் கைதியிடம் கேளுங்கள்.
ஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று
உயிர் காக்க போராடும் மருத்துவரிடம் கேளுங்கள்.
ஒரு நாளின் மதிப்பு என்னவென்று - அன்று வேலை
கிடைக்காமல் போன தின கூலி தொழிலாளரைக் கேளுங்கள்.
ஒரு வாரத்தின் மதிப்பை அறிய ஒரு வார
பத்திரிக்கையின் ஆசிரியரைக் கேளுங்கள்.
ஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்று
குறை பிரசவமான ஒரு தாயைக் கேளுங்கள்.
ஒரு வருடத்தின் மதிப்பு என்னவென்று
தேர்வில் தோல்வியடைந்த மாணவனைக் கேளுங்கள்.
ஒரு வாழ்வின் மதிப்பு என்னவென்று
உலக சாதனையாளரிடம் கேளுங்கள்.
அன்பின் அலாவுதீன்
Monday, May 07, 2012
வாழ்க்கை கணக்கு
முகம் - வீட்டு முகவரியை காட்டும்,
செயல்கள் - வாழ்க்கைக்கு முகவரி காட்டும்
ஒருவன் உயர்ந்தால் அது அவனுடைய பெற்றோருக்கு மட்டும் பெருமை அல்ல; அந்த அளவிற்கு உயர, கல்வி எனும் அறிவு கண்ணை திறந்து வைத்த ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இளமைப்பருவம் வாழ்வின் வசந்த காலம். எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பது இந்த பருவம் தான்.
உழைப்பால் வெற்றியை உருவாக்கு.
முயற்சியை அதற்கு எருவாக்கு.
வாழ்க்கை ஒரு கணிதம்...
“கணிதம் ஒரு புதிர் – வாழ்க்கையும் ஒரு புதிர்”.
சிலருக்கு விடை கிடைத்து விடுகிறது. சிலருக்கு விடை கிடைக்காமலேயே போகிறது. அதற்காக ஒரு போதும் சோர்ந்து விடாதீர்கள். கீழ்கண்ட குறியீட்டை பயன்படுத்திப் பாருங்கள்.
நல்லனவற்றைக் கூட்டிக் கொள் --------> +
தீயவற்றைக் கழித்துக் கொள் ----------> -
அறிவைப் பெருக்கிக் கொள் -----------> x
நேரத்தை வகுத்துக் கொள் ------------> /
வெற்றி, தோல்வியை சமமாக கொள் --> =
வெற்றியை எவ்வாறு சாதனையாக்குவது? தோல்வியை எப்படி தோற்கடிப்பது என்பதை நூலகத்தில் உள்ள நூல்களைப் படித்தால் ஆயிரக்கணக்கான நுட்பம் நிறைந்த வழிகள் புதையலாக புதைந்திருக்கின்றன. நல்ல புத்தகங்களை நேசித்து வாசிப்பதற்கு ஆகும் நேரத்தை விட, அதை யோசித்து தேர்ந்தெடுப்பதற்கு ஆகும் நேரத்தை நீட்டிக் கொள்ளுங்கள். “
எட்டு மணி நேரத்தில் ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என எனக்கு கட்டளையிடப்பட்டால், அதில், ஆறு மணி நேரத்தை கோடாரியை கூராக்குவதிலேயே செலவிடுவேன்” என்றார் சரித்திர நாயகன் ஆபிரகாம் லிங்கன்.
அன்பின் அலாவுதீன்
Saturday, May 05, 2012
உங்களின் ஆற்றல்
வாழ்க்கையின் சரியான முன்னேற்றப்பாதையில் பயன்படுத்தி பயணித்தால் – அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம்மனிதனை கொண்டுபோய் சேர்க்கும் என்பது நிதர்சனம்.
உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள். என்னால் இது முடியுமா? என்று எடுத்த எடுப்பிலேயே எதைக் கண்டும் அச்சப்படாதீர்கள். தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கி கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது. போட்டியில் தோற்றாலும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவன்தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன்.
பல்வேறு உலகப் புகழ்பெற்ற அறிஞர் பெருமக்கள் எல்லாம் ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கி தம்மை அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கள் என கருதி உழைத்தனர். இறுதியில் ஜெயித்தனர். தாமஸ் ஆல்வா எடிசன் சந்தித்த தோல்விகள் ஏராளம்; அனால் அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞான மேதையானார்
---- அன்பின் அலாவுதீன்
Tuesday, March 27, 2012
Monday, March 26, 2012
மன அழுத்தத்தை தவிர்க்க பத்து கட்டளைகள்.
1.கடைசி நிமிடப் பரபரப்பைத் தவிருங்கள்.
எங்காவது செல்ல வேண்டுமென்றால் ஓர் அரை மணி நேரம் முன்பாகவே கிளம்புவது, காலையில் ஒரு பதினைந்து நிமிடம் முன்னதாகவே எழுந்து விடுதல், பயணத்திற்குத் தேவையானவற்றை முந்தின நாளே எடுத்து வைத்துக்கொள்வது, போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
2.ஒரு நேரம் ஒரு வேலையை மட்டுமே செய்யுங்கள்.
எட்டு வேலைகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டு ஒன்பதாவது வேலையைச் செய்துகொண்டிருந்தால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். என்ன செய்யவேண்டும் என்பதைப் பட்டியலிடுங்கள். மிக முக்கியமான விஷயங்களை முதலில் செய்யுங்கள். எல்லா வேலைகளையும் செய்ய வேண்டுமென்ற கட்டாயமில்லை. போதுமான ஓய்வு நேரம் உங்கள் பட்டியலில் நிச்சயம் இருக்கட்டும்.
3.உங்களுக்கு மன அழுத்தம் தரக்கூடிய விஷயங்களை ஒதுக்குங்கள்.
இரைச்சல், வெளிச்சம், தாமதம், சிலவகை வாசனைகள், சில நபர்கள்………. இத்தியாதி….. இத்தியாதி என இந்தப்பட்டியல் எவ்வளவு பெரிதாக வேண்டுமானால் இருக்கலாம். முடிந்தவரை ஒதுக்குங்கள். ஒதுக்க முடியாத சூழல்களில் நீங்களே கொஞ்சம் ஒதுங்கிப் போய் விடுங்கள்.
4.உடற்பயிற்சி செய்யுங்கள்.
ஆரோக்யமான உடல், மன அழுத்தத்தின் எதிரி. உடலில் ரத்த ஓட்டமும், ஆக்சிஜன் விநியோகமும் சீராக இருக்கும்போது மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே மூச்சுப் பயிற்சி போன்றவையும், வாக்கிங், ஜாகிங், போன்றவையும் உங்கள் தினசரி அட்டவணையில் இடம் பெறட்டும்.
5.தீய பழக்கங்களை கை கழுவி விடுங்கள்.
புகை, மது, போதை போன்றவைகள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் காரணிகள்.
6.எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
திருப்தியடையும் மனநிலை இருந்தால் வாழ்க்கை அழகாகும். குழந்தைகளுக்கு மன அழுத்தம் வருவதில்லை. காரணம் அவர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை.
7.ஒரு நல்ல பொழுதுபோக்கை கைவசம் வைத்திருங்கள்.
உங்களுக்கு ரொம்பவே பிடித்த விஷயமாய் அது இருக்கட்டும். உங்களுடைய மனதை உற்சாகமாகவும், ஆனந்தமாகவும் வைத்திருக்க அது உதவும். குழந்தைகளுடன் பொழுதைக் கழிப்பது, செல்லப் பிராணிகளுடன் விளையாடுவது என தினமும் கொஞ்ச நேரம் செலவிடுங்கள்.
8.பாசிடிவ் சிந்தனைகளை மனதில் கொண்டிருங்கள்.
நடந்து முடிந்த நிகழ்வுகளின் மோசமான பக்கங்களை அடிக்கடி நினைத்துக் கொண்டிருக்காதீர்கள்.
9.சின்னச்சின்ன வெற்றிகளைக்கூட கொண்டாடுங்கள்.
சின்னச் சின்ன வெற்றிகளின் கூட்டுத்தொகையே பெரிய வெற்றி என்பதை மனதில் எழுதுங்கள்.
10. பிறருடன் நம்மை ஒப்பிடாதீர்கள்.
பிறருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது தேவையற்ற மன அழுத்தத்தை கொண்டு வந்து சேர்க்கும். அவர்களுடைய வெற்றி, தோற்றம், அந்தஸ்து, பணம் என எதை ஒப்பிட்டாலும் அது உங்களுக்கு மன அழுத்தத்தையே தரும்.
Sunday, March 25, 2012
சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா?
நம் வாழ்வில் பல நேரங்களில் 'எனக்கு ஏன் வாய்ப்புக்கள் அமையவில்லை?' என நாம் ஆதங்கப்படுவது உண்டு, என்ன சரிதானே? ஆனால், உண்மையில் அதற்கு யார் காரணம் என்று என்றாவது எண்ணிப்பார்த்தது உண்டா? சந்தர்ப்பங்களை எதிநோக்குவதில் மூன்றுவகை மனிதர்கள் உண்டு.
- முதலாவது, சந்தர்ப்பம் நம் வாயில் கதவை தட்டும் என்று எண்ணுபவர்கள்
- இரண்டாவது வகை, சந்தர்ப்பங்கள் எதுவுமே இல்லை என்று நினைப்பவர்கள்
- மூன்றாவது ரகம், யாராவது சந்தர்ப்பங்களை உருவாக்கி, நமக்கு தங்கத்தட்டில் வைத்து அளிப்பார்கள் என்று கனவு காண்பவர்கள்
நம்மில் பெரும்பாலோர் மூன்றாவது ரகத்தைசார்ந்தவர்கள் என்றால் மிகையில்லை! இது எதிர்மறை எண்ணங்களின் வெளிப்பாடு. நம் திறமை மீதான நமது நம்பிக்கையின்மையின் செயல்பாடு.
for more visit http://rsurajkumar.blogspot.com/2012/03/blog-post_1631.html
Saturday, February 11, 2012
கடி தத்துவங்கள்..
- நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.
- ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.
- ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு
- என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும்.
- காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!
- பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா?
- இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது.
- பாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா?
- இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?
- பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.
- சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது
- டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.
- என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.
- நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.
- க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?
- ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.
- குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.
- செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.
- ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.
- என்னதான் உயர பறந்தாலும் கொசுவை பறவை லிஸ்டில் சேர்க்கமுடியாது
இணையத்தில் படித்தது
Friday, February 10, 2012
பத்து கட்டளைகள்.
1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.
2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.
3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.
4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.
5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாக செயல்படுங்கள்.
6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.
7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப்படுத்துங்கள்.
8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.
9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.
10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.
“வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்”
இணையத்தில் படித்தது
Thursday, February 09, 2012
எதற்கும் யார் பொறுப்பு.....?
நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு.
அன்றாடம் அனேகம் பேரை சந்திக்கிறோம். உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா..?
பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன.
விளைவாக – விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை,ஒத்துப்போக இயலாமை, உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை..?
நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற, பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்து கொள்ள பத்து கட்டளைகள்.
இணையத்தில் படித்தது
Wednesday, February 08, 2012
உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க உங்கள் பங்கு என்ன...?
உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து, இல்லாததை கொண்டு வர வேண்டும்.
1. அன்பாகப் பேசுவது.
2. பிறர் மீது அக்கறை காட்டுவது.
3.வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.
4. குறை கூறாமல் இருப்பது.
5.சொன்னதை செய்து கொடுப்பது.
6. இன்முகத்துடன் இருப்பது.
7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.
8. பிறரை நம்புவது.
9.ஒன்றாக பயணம் போக விரும்புவது.
10. பணிவு.
11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.
12. பிறர் வேலைகளில் உதவுவது.
13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.
14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.
15. சுறுசுறுப்பு.
16. சிறிய விசயங்களைக் கூட பாராட்டுவது.
17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
18. நகைச்சுவையாக பேசுவது.
19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.
20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.
21. நேரம் தவறாமை.
22. தற்பெருமை பேசாமல் இருப்பது.
23. தெளிவாகப் பேசுவது.
24. நேர்மையாய் இருப்பது.
25. பிறர் மனதை புண்படுத்தாமல் இருப்பது.
இணையத்தில் படித்தது
Tuesday, February 07, 2012
மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது.....?
பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால் தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக "டிக்" செய்து கண்டுபிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.
1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3. அவரவர் வாக்கை காப்பாற்ற தவறுதல்.
4. விரும்பியதை பெற இயலாமை.
5. ஒருவரையொருவர் நம்பாமை.
6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
9. விருந்தினர் குறைவு.
10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இல்லை.
12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
13. ஒருவர் மனம் புண்படும்படியாக பேசுதல்.
14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.
இணையத்தில் படித்தது
Monday, February 06, 2012
பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி...?
தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்.
1.சுயமாக சிந்திக்க, சுயமாக செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். 2.படிப்பில், அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்கு பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.
3.குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டு விடவும் கூடாது.
4.குழந்தைகளுக்கு அன்புப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப்படுத்தவேண்டும்.
5.’நீ ராசா அல்லவா..? ராசாத்தி அல்லவா..?’ என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும்.
6.“மக்கு,மண்டு,மண்டூகம்” போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.
7.பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள்மேற்கொள்ள வேண்டும்.
இணையத்தில் படித்தது
Sunday, February 05, 2012
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன...?
1. பள்ளி, அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2. காலையில் முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக்கூடாது.
8. அதிகாரம் பண்ணக்கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக்கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக்கூடாது.
13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்து பேசக்கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராக குடும்பம் நடத்த வேண்டும்.
20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களை சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேசவேண்டும்.
25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையை கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாக சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. உடம்பை சிலிம் ஆக வைத்து கொள்ள வேண்டும்.
இணையத்தில் படித்தது
Saturday, February 04, 2012
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக்கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு, மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டு, சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரை குறை சொல்லக்கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
இணையத்தில் படித்தது
Friday, February 03, 2012
குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை....?
1. வருமானம்.
2. ஒத்துழைப்பு.
3. மனித நேயம்.
4. பொழுதுபோக்கு.
5. ரசனை.
6. ஆரோக்கியம்.
7. மனப்பக்குவம்.
8. சேமிப்பு.
9. கூட்டு முயற்சி.
10.குழந்தைகள்.
இவை இணையத்தில் படித்தது
Thursday, February 02, 2012
கிழக்கு பாட்காஸ்ட்
கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை நீங்கள் இங்கே ஆன்லைனில் கேட்கலாம்.
அம்பானி சொக்கன், சித்ரா Download
சீனா ராமன் ராஜா, மருதன், பிரசன்னா Download
டயட் உணவு அருணா ஷ்யாம், சித்ரா Download
மார்க்கெட்டிங் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, சத்யநாராயண் Download
திருநங்கைகள் லிவிங் ஸ்மைல் வித்யா, சித்ரா Download
சர்க்கரை நோய் டாக்டர். முத்து செல்லக்குமார் Download
தீவிரவாத இயக்கங்கள் பா.ராகவன், சித்ரா, சந்திரமௌளி Download
ஏ.ஆர்.ரஹ்மான் சொக்கன், தீனதயாளன் Download
பங்குச் சந்தை சோம.வள்ளியப்பன், பத்ரி சேஷாத்ரி Download
Thursday, December 29, 2011
பொன்னான நிகழ்காலம்
ஒருவரை துன்புறுத்தி மகிழ்ச்சியடைய நினைப்பவா்கள் எத்தனை தான் முயற்சி செய்தாலும் வெற்றி பெற மாட்டார்கள். டாம் & ஜெர்ரி பாருங்கள் 30 வருமடமாக அந்த பூனை எலியைத் துரத்திக் கொண்டிருக்கிறது. ஒருமுறை கூட வெற்றி பெற்றது இல்லை. இது குழந்தைகளுக்கான கதைதான். ஆனால் பெரியவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
