Saturday, February 11, 2012

கடி தத்துவங்கள்..

 

  1. நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.
  2. ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.
  3. ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு
  4. என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும்.
  5. காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!
  6. பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா?
  7. இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது.
  8. பாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா?
  9. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?
  10. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.
  11. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது
  12. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.
  13. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.
  14. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.
  15. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?
  16. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.
  17. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.
  18. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.
  19. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.
  20. என்னதான் உயர பறந்தாலும் கொசுவை பறவை லிஸ்டில் சேர்க்கமுடியாது

இணையத்தில் படித்தது

Friday, February 10, 2012

பத்து கட்டளைகள்.


1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.
2.
ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.
3.
இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.
4.
உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.
5.
ஊக்கத்துடன் சுறுசுறுப்பாக செயல்படுங்கள்.
6.
எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.
7.
ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப்படுத்துங்கள்.
8.
ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.
9.
ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.
10.
ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

“வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்”

இணையத்தில் படித்தது

Thursday, February 09, 2012

எதற்கும் யார் பொறுப்பு.....?


நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு.

அன்றாடம் அனேகம் பேரை சந்திக்கிறோம். உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா..?

பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன.

விளைவாக – விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை,ஒத்துப்போக இயலாமை, உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை..?

நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற, பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்து கொள்ள பத்து கட்டளைகள்.

இணையத்தில் படித்தது

Wednesday, February 08, 2012

உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க உங்கள் பங்கு என்ன...?

உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து, இல்லாததை கொண்டு வர வேண்டும்.

1. அன்பாகப் பேசுவது.
2.
பிறர் மீது அக்கறை காட்டுவது.
3.
வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.
4.
குறை கூறாமல் இருப்பது.
5.
சொன்னதை செய்து கொடுப்பது.
6.
இன்முகத்துடன் இருப்பது.
7.
முன் மாதிரியாக நடந்து கொள்வது.
8.
பிறரை நம்புவது.
9.
ஒன்றாக பயணம் போக விரும்புவது.
10.
பணிவு.
11.
எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.
12.
பிறர் வேலைகளில் உதவுவது.
13.
பிறருக்கு விட்டுக் கொடுப்பது.
14.
பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.
15.
சுறுசுறுப்பு.
16.
சிறிய விசயங்களைக் கூட பாராட்டுவது.
17.
புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
18.
நகைச்சுவையாக பேசுவது.
19.
அதிகமாக வேலை செய்ய விரும்புவது.
20.
செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.
21.
நேரம் தவறாமை.
22.
தற்பெருமை பேசாமல் இருப்பது.
23.
தெளிவாகப் பேசுவது.
24.
நேர்மையாய் இருப்பது.
25.
பிறர் மனதை புண்படுத்தாமல் இருப்பது.

இணையத்தில் படித்தது

Tuesday, February 07, 2012

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது.....?


பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால் தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக "டிக்" செய்து கண்டுபிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.


1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2.
ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3.
அவரவர் வாக்கை காப்பாற்ற தவறுதல்.
4.
விரும்பியதை பெற இயலாமை.
5.
ஒருவரையொருவர் நம்பாமை.
6.
ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
7.
உலலாசப் பயணம் போக இயாலாமை.
8.
ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
9.
விருந்தினர் குறைவு.
10.
பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
11.
புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இல்லை.
12.
விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
13.
ஒருவர் மனம் புண்படும்படியாக பேசுதல்.
14.
மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.

இணையத்தில் படித்தது

Monday, February 06, 2012

பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி...?

 

தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்.

1.சுயமாக சிந்திக்க, சுயமாக செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். 2.படிப்பில், அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்கு பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.

3.குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டு விடவும் கூடாது.

4.குழந்தைகளுக்கு அன்புப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப்படுத்தவேண்டும்.

5.’நீ ராசா அல்லவா..? ராசாத்தி அல்லவா..?’ என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும்.

6.“மக்கு,மண்டு,மண்டூகம்போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.

7.பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள்மேற்கொள்ள வேண்டும்.

இணையத்தில் படித்தது

Sunday, February 05, 2012

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன...?

1. பள்ளி, அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2.
காலையில் முன் எழுந்திருத்தல்.
3.
எப்போதும் சிரித்த முகம்.
4.
நேரம் பாராது உபசரித்தல்.
5.
மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6.
கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7.
எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக்கூடாது.
8.
அதிகாரம் பண்ணக்கூடாது.
9.
குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10.
கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11.
கணவனை சந்தேகப்படக்கூடாது.
12.
குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக்கூடாது.
13.
பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14.
வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்து பேசக்கூடாது.
15.
கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16.
இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17.
அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18.
குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19.
கொடுக்கும் பணத்தில் சீராக குடும்பம் நடத்த வேண்டும்.
20.
கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது.
21.
தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22.
எதிர்காலத் திட்டங்களை சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23.
தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24.
தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேசவேண்டும்.
25.
அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26.
குழந்தையை கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27.
சுவையாக சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28.
கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29.
பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30.
உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31.
தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32.
உடம்பை சிலிம் ஆக வைத்து கொள்ள வேண்டும்.

இணையத்தில் படித்தது

Saturday, February 04, 2012

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?

 

1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
2.
மனது புண்படும்படி பேசக்கூடாது.
3.
கோபப்படக்கூடாது.
4.
சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.
5.
பலர் முன் திட்டக்கூடாது.
6.
எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.
7.
முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8.
மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9.
சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
10.
மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11.
வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12.
பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13.
வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14.
மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15.
ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16.
பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17.
ஒளிவு, மறைவு கூடாது.
18.
மனைவியை நம்ப வேண்டும்.
19.
முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20.
மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.
21.
அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.
22.
தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23.
உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24.
சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25.
சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26.
குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் இது உன் குழந்தைஎன்று ஒதுங்கக்கூடாது.
27.
அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28.
நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29.
சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30.
எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டு, சொல்ல வேண்டும்.
31.
சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32.
எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33.
மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34.
மனைவிக்குப் பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35.
பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36.
மனைவி வீட்டாரை குறை சொல்லக்கூடாது.
37.
கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

இணையத்தில் படித்தது

Friday, February 03, 2012

குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை....?


1. வருமானம்.
2.
ஒத்துழைப்பு.
3.
மனித நேயம்.
4.
பொழுதுபோக்கு.
5.
ரசனை.
6.
ஆரோக்கியம்.
7.
மனப்பக்குவம்.
8.
சேமிப்பு.
9.
கூட்டு முயற்சி.
10.
குழந்தைகள்.

இவை இணையத்தில் படித்தது

Thursday, February 02, 2012

கிழக்கு பாட்காஸ்ட்

கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை நீங்கள் இங்கே ஆன்லைனில் கேட்கலாம்.

அம்பானி   சொக்கன், சித்ரா   Download

சீனா   ராமன் ராஜா, மருதன், பிரசன்னா  Download

டயட் உணவு  அருணா ஷ்யாம், சித்ரா   Download

மார்க்கெட்டிங்  சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, சத்யநாராயண் Download

திருநங்கைகள்  லிவிங் ஸ்மைல் வித்யா, சித்ரா   Download

சர்க்கரை நோய்  டாக்டர். முத்து செல்லக்குமார்  Download

தீவிரவாத இயக்கங்கள்  பா.ராகவன், சித்ரா, சந்திரமௌளி  Download

ஏ.ஆர்.ரஹ்மான்  சொக்கன், தீனதயாளன்  Download

பங்குச் சந்தை  சோம.வள்ளியப்பன், பத்ரி சேஷாத்ரி Download

Thursday, December 29, 2011

பொன்னான நிகழ்காலம்

ஒருவரை துன்புறுத்தி மகிழ்ச்சியடைய நினைப்பவா்கள் எத்தனை தான் முயற்சி செய்தாலும் வெற்றி பெற மாட்டார்கள். டாம் & ஜெர்ரி பாருங்கள் 30 வருமடமாக அந்த பூனை எலியைத் துரத்திக் கொண்டிருக்கிறது. ஒருமுறை கூட வெற்றி பெற்றது இல்லை. இது குழந்தைகளுக்கான கதைதான். ஆனால் பெரியவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

Friday, September 16, 2011

படித்ததில் பிடித்தது - பாதுகாப்பு

நம்மில், நல்ல அமல்களை எத்தி வைப்பவரும், அதன் விவரம் புரியாநிலையில் விளக்கம் கேட்பவரும் ஆகிய இரு தரப்பாருமே... ஜன்ம எதிரிகளாய் எண்ணி, தகாத வார்த்தைகளால் ஒருவரையொருவர் இழிவுபடுத்திக்கொள்ளவே முனைகின்றோம்.

மடியும் நொடிவரை - கற்பவராகவே சுவாசித்தபடி இருக்கவேண்டிய நாமெல்லாம்... இப்பெருந்தவறிலிருந்து நம் மூச்சைப் பாதுகாத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

Wednesday, July 13, 2011

படித்ததில் பிடித்தது - கற்றவன்

 

வயதில் மூத்தவன் வீட்டில் மதிக்கப்படுவான்,

தலைவன், அவனது ஊரில் மதிக்கப்படுவான்,

அரசன் அவனது நாட்டில் மதிக்கப்படுவான் – ஆனால்,

கற்றவனுக்கோ செல்லும் இடத்தில் எல்லாம் மதிப்பு.

சமஸ்கிருத ஸ்லோகம் @  புதிய கனவுகள் புதிய இந்தியா. என்.ஆர் நாராயண மூர்த்தி.

Monday, March 28, 2011

பொன்னியின் செல்வன்–நாவல்

வணக்கம் நண்பர்களே! "பொன்னியின் செல்வன்" நாவலின் முதற் பாகம் (புது வெள்ளம்). பலிபீடம் வலைப்பூ நாம் iPhone, iPad போன்ற அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களின் வாசிக்கக்கூடிய வகையில் epub இல் உருவாக்கி வெளியிட்டது.

நான் தற்போது அமரர் கல்கி அவர்கள் எழுதிய ஒப்பற்ற சரித்திரப் புதினமான "பொன்னியின் செல்வன்" நாவலின் இரண்டாம் பாகம் – சுழற்காற்று (மூலம் Project Madurai http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0169_02_02.html)  epub முறையில் மாற்றி பதிவு செய்துள்ளேன் மகிழ்ச்சியுடன் வலையுலக நண்பர்கள் கீழ் உள்ள முகவரியில் பதிவு இறக்கம் செய்து கொள்ளுங்கள்.

IMG_0042IMG_0043

முதற் பாகமேயாகும் (புது வெள்ளம்).

http://cid-d1e9ef060fcd5fa2.office.live.com/self.aspx/Public/Ponniyin%20Selvan%20-%20Volume%201%20-%20Kalki%20Krishnamurthy.epub

பொன்னியின் செல்வன் நாவல் இரண்டாம் பாகம் – சுழற்காற்று பகுதி – 1

http://cid-d1e9ef060fcd5fa2.office.live.com/self.aspx/Public/Poniyin%20Celvn%20Part%202A.epub

பொன்னியின் செல்வன் நாவல் இரண்டாம் பாகம் – சுழற்காற்று பகுதி – 2

http://cid-d1e9ef060fcd5fa2.office.live.com/self.aspx/Public/Poniyin%20Celvn%20Part%202A.epub#resId/D1E9EF060FCD5FA2!258

Wednesday, February 02, 2011

அலர்ஜி

“அலர்ஜி”

நம் மனித உடல் தனி உலகம். இதில் தேவையில்லாத அன்னிய பொருட்கள் {Alien Bodies} நுழையும் போது கடுமையாக எதிர்ப்புக் காட்டி விரட்டிட முயற்சிக்கிறது. இதனால் நம் உடல் பாதுகாக்கப்படுகிறது. இதுவே அலர்ஜி எனப்படுகிறது. பல் வேறு வகையில் அலர்ஜி ஏற்படலாம். அது போல் ஒன்று தான் ஹேபீவர் எனப்படுவதும், இதன் அறிகுறி கண்கள் நீரில் மிதக்கும். மூக்கில் நீர் வடியும், குளிர்காய்சலும் அடிக்கும். இது பொதுவாக கோடை கால ஆரம்ப நிலையில் நம் உடலை தாக்கும். இந்த அலர்ஜிக்கு பூக்கள், புற்கள் வெளியிடும் மகரந்தத் தூள்கள்தான் முக்கிய காரணமாக அமைகிறது. சிலருக்கு மாமிசம் காய்கறிகள் கூட அலர்ஜியை உருவாக்குபவை Amigen ஆகும்.

Thursday, January 13, 2011

NHM Writer selected as 2009-10 Best Tamil Software

என்.எச்.எம். ரைட்டர் 1.5.1.1'' எனும் மென்பொருள் 2009-10-ம் ஆண்டுக்கு சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த மென்பொருளை தயாரித்த சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த
'நியூ ஹொரைசன் மீடியா' நிறுவனத்திற்கும் பரிசுத் தொகை ஒரு லட்சமும், பாராட்டிதழும், வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்

Click Here NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Friday, October 22, 2010

காதில் விழுந்த கலக்கல் மொழிகள்

 

தோல்வி இல்லாமல் வெற்றி இல்லை

தீமை இல்லாமல் நன்மை இல்லை

சுமை இல்லாமல் சுகம் இல்லை

வேதனை இல்லாமல் இன்பம் இல்லை

கண்ணீர் இல்லாமல் வாழ்கை இல்லை

Saturday, October 16, 2010

யானை

தொகுப்பு  (முஹம்மது ஃஜாபீர், தொடக்கநிலை 4)

யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மனிதர்களை தவிர்த்த விலங்குகளிலே இதுவே அதிக நாட்கள் வாழும் நில விலங்கு ஆகும் .

யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், மற்றும் ஆசிய யானைகள் ஆகும். இவைகளுக்கு இடையே சிறப்பான வேறுபாடுகள் உண்டு. பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.

யானைகள் மனிதர்களை ஒத்த வாழ்க்கையைக் கொண்டவை. மனிதன் கருவறைக்குள் 10 மாதம் இருக்கிறான், யானை 20 மாதம் இருக்கிறது. மனித ஆயுள், யானை ஆயுள் கிட்டத்தட்ட ஒன்றுதான். மேலும் யானைகள் தாய் வழி சமூகத்தை பின்பற்றக் கூடியவை. மூத்த பெண் யானைதான் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும். ஆண் யானைகள் தனியாகவே இருக்கும்.

யானையின் வாழ்நாளில் 6 முறை பற்கள் விழுந்து முளைக்கின்றன.

clip_image001

பொருள்கள்

  • யானை முடி மோதிரம்
  • யானைத் தந்தச் சிற்பங்கள்
  • யானைத் தந்தச் செயின்
  • யானைத் தந்தக் கட்டில் (மன்னர்கள் உறங்கும் கட்டில்)
  • யானைத் தந்தக் பல்லக்குகளும் செய்யப்பட்டன

பழமொழிகள்

  • யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
  • யானைக்கும் அடி சறுக்கும்.
  • யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்
  • யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே

சொலவடைகள்

  • யானைப்பசிக்கு சோளப்பொரியா?
  • யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டது போல

Saturday, October 02, 2010

இலட்சிய சிகரம்

இன்று காலை சன் டிவியில் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் வாசித்த கவிதை

இலட்சிய சிகரம்

நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன்,

எங்கு இருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா?

நான் தோண்டிக்கொண்டே இருக்கிறேன்,

எங்கு இருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா?

நான் பெருங்கடலில் நீந்திக்கொண்டே  இருக்கிறேன்,

எங்கு இருக்கிறது அமைதித் தீவு, என்   இறைவா?

இறைவா, நூறு கோடி மக்கள்

இலட்சிய சிகரத்தையும், அறிவுப்  புதையலையும்,

இன்ப அமைதியையும், உழைத்தடைய அருள்வாயாக.

Tuesday, June 29, 2010

ஐபோனில் 4.0 தமிழ் எழுத்துக்கள்

ஐபோனில்3.1 ஒரு பெரிய குறை என்னவென்றால் தமிழ் பாண்ட் சரியாக தெரியாது. எழுத்துக்கள் எல்லாம் ஒன்றன் மீது ஒன்றாக ஒட்டி மிக்ஸியில் போட்டு அடித்ததை போல தெரியும்.

IMG_0157

தற்போது ஐபோனில் 4.0 தமிழ் எழுத்துக்கள் மிக அருமையாக முன்பைவிட நன்றாக படிக்கக்கூடிய அளவில் இருகின்றது. புதிய மென்பொருளை உங்கள்  ஐடியுனில் இறக்குமதி செய்து பயன்படுத்துகள்…