Monday, March 28, 2011

பொன்னியின் செல்வன்–நாவல்

வணக்கம் நண்பர்களே! "பொன்னியின் செல்வன்" நாவலின் முதற் பாகம் (புது வெள்ளம்). பலிபீடம் வலைப்பூ நாம் iPhone, iPad போன்ற அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களின் வாசிக்கக்கூடிய வகையில் epub இல் உருவாக்கி வெளியிட்டது.

நான் தற்போது அமரர் கல்கி அவர்கள் எழுதிய ஒப்பற்ற சரித்திரப் புதினமான "பொன்னியின் செல்வன்" நாவலின் இரண்டாம் பாகம் – சுழற்காற்று (மூலம் Project Madurai http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0169_02_02.html)  epub முறையில் மாற்றி பதிவு செய்துள்ளேன் மகிழ்ச்சியுடன் வலையுலக நண்பர்கள் கீழ் உள்ள முகவரியில் பதிவு இறக்கம் செய்து கொள்ளுங்கள்.

IMG_0042IMG_0043

முதற் பாகமேயாகும் (புது வெள்ளம்).

http://cid-d1e9ef060fcd5fa2.office.live.com/self.aspx/Public/Ponniyin%20Selvan%20-%20Volume%201%20-%20Kalki%20Krishnamurthy.epub

பொன்னியின் செல்வன் நாவல் இரண்டாம் பாகம் – சுழற்காற்று பகுதி – 1

http://cid-d1e9ef060fcd5fa2.office.live.com/self.aspx/Public/Poniyin%20Celvn%20Part%202A.epub

பொன்னியின் செல்வன் நாவல் இரண்டாம் பாகம் – சுழற்காற்று பகுதி – 2

http://cid-d1e9ef060fcd5fa2.office.live.com/self.aspx/Public/Poniyin%20Celvn%20Part%202A.epub#resId/D1E9EF060FCD5FA2!258

Wednesday, February 02, 2011

அலர்ஜி

“அலர்ஜி”

நம் மனித உடல் தனி உலகம். இதில் தேவையில்லாத அன்னிய பொருட்கள் {Alien Bodies} நுழையும் போது கடுமையாக எதிர்ப்புக் காட்டி விரட்டிட முயற்சிக்கிறது. இதனால் நம் உடல் பாதுகாக்கப்படுகிறது. இதுவே அலர்ஜி எனப்படுகிறது. பல் வேறு வகையில் அலர்ஜி ஏற்படலாம். அது போல் ஒன்று தான் ஹேபீவர் எனப்படுவதும், இதன் அறிகுறி கண்கள் நீரில் மிதக்கும். மூக்கில் நீர் வடியும், குளிர்காய்சலும் அடிக்கும். இது பொதுவாக கோடை கால ஆரம்ப நிலையில் நம் உடலை தாக்கும். இந்த அலர்ஜிக்கு பூக்கள், புற்கள் வெளியிடும் மகரந்தத் தூள்கள்தான் முக்கிய காரணமாக அமைகிறது. சிலருக்கு மாமிசம் காய்கறிகள் கூட அலர்ஜியை உருவாக்குபவை Amigen ஆகும்.

Thursday, January 13, 2011

NHM Writer selected as 2009-10 Best Tamil Software

என்.எச்.எம். ரைட்டர் 1.5.1.1'' எனும் மென்பொருள் 2009-10-ம் ஆண்டுக்கு சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த மென்பொருளை தயாரித்த சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த
'நியூ ஹொரைசன் மீடியா' நிறுவனத்திற்கும் பரிசுத் தொகை ஒரு லட்சமும், பாராட்டிதழும், வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்

Click Here NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Friday, October 22, 2010

காதில் விழுந்த கலக்கல் மொழிகள்

 

தோல்வி இல்லாமல் வெற்றி இல்லை

தீமை இல்லாமல் நன்மை இல்லை

சுமை இல்லாமல் சுகம் இல்லை

வேதனை இல்லாமல் இன்பம் இல்லை

கண்ணீர் இல்லாமல் வாழ்கை இல்லை

Saturday, October 16, 2010

யானை

தொகுப்பு  (முஹம்மது ஃஜாபீர், தொடக்கநிலை 4)

யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மனிதர்களை தவிர்த்த விலங்குகளிலே இதுவே அதிக நாட்கள் வாழும் நில விலங்கு ஆகும் .

யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், மற்றும் ஆசிய யானைகள் ஆகும். இவைகளுக்கு இடையே சிறப்பான வேறுபாடுகள் உண்டு. பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.

யானைகள் மனிதர்களை ஒத்த வாழ்க்கையைக் கொண்டவை. மனிதன் கருவறைக்குள் 10 மாதம் இருக்கிறான், யானை 20 மாதம் இருக்கிறது. மனித ஆயுள், யானை ஆயுள் கிட்டத்தட்ட ஒன்றுதான். மேலும் யானைகள் தாய் வழி சமூகத்தை பின்பற்றக் கூடியவை. மூத்த பெண் யானைதான் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும். ஆண் யானைகள் தனியாகவே இருக்கும்.

யானையின் வாழ்நாளில் 6 முறை பற்கள் விழுந்து முளைக்கின்றன.

clip_image001

பொருள்கள்

  • யானை முடி மோதிரம்
  • யானைத் தந்தச் சிற்பங்கள்
  • யானைத் தந்தச் செயின்
  • யானைத் தந்தக் கட்டில் (மன்னர்கள் உறங்கும் கட்டில்)
  • யானைத் தந்தக் பல்லக்குகளும் செய்யப்பட்டன

பழமொழிகள்

  • யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
  • யானைக்கும் அடி சறுக்கும்.
  • யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்
  • யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே

சொலவடைகள்

  • யானைப்பசிக்கு சோளப்பொரியா?
  • யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டது போல

Saturday, October 02, 2010

இலட்சிய சிகரம்

இன்று காலை சன் டிவியில் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் வாசித்த கவிதை

இலட்சிய சிகரம்

நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன்,

எங்கு இருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா?

நான் தோண்டிக்கொண்டே இருக்கிறேன்,

எங்கு இருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா?

நான் பெருங்கடலில் நீந்திக்கொண்டே  இருக்கிறேன்,

எங்கு இருக்கிறது அமைதித் தீவு, என்   இறைவா?

இறைவா, நூறு கோடி மக்கள்

இலட்சிய சிகரத்தையும், அறிவுப்  புதையலையும்,

இன்ப அமைதியையும், உழைத்தடைய அருள்வாயாக.

Tuesday, June 29, 2010

ஐபோனில் 4.0 தமிழ் எழுத்துக்கள்

ஐபோனில்3.1 ஒரு பெரிய குறை என்னவென்றால் தமிழ் பாண்ட் சரியாக தெரியாது. எழுத்துக்கள் எல்லாம் ஒன்றன் மீது ஒன்றாக ஒட்டி மிக்ஸியில் போட்டு அடித்ததை போல தெரியும்.

IMG_0157

தற்போது ஐபோனில் 4.0 தமிழ் எழுத்துக்கள் மிக அருமையாக முன்பைவிட நன்றாக படிக்கக்கூடிய அளவில் இருகின்றது. புதிய மென்பொருளை உங்கள்  ஐடியுனில் இறக்குமதி செய்து பயன்படுத்துகள்…

Sunday, October 11, 2009

சத்தமேயில்லாமல்…

சத்தமேயில்லாமல்…

P.S..ஜூஹைனா ஃபைஜல், சீர்காழி.

SHARJAH ISLAMIYA MADRAS ASSOCIATION ஆண்டு விழா மலரில் பதிந்த பதிவு...

வானத்தில் மிளிர்ந்துக் கொண்டுருக்கும் நட்சத்திரங்கள்., இதமாக வருடும் தென்றல்., கரைந்துக் கொண்டிருக்கும் நிலா..! கனைக்கக் கூட கனம் யோசிக்கும் அளவிற்கு நிசப்தம். அந்த ரம்மியமான சூழலில் இருந்த அன்சாரின் அகமோ ரணமாயிருந்தது. மொட்டை மாடியில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து வானத்தை விழியினூடே வெறித்துக் கொண்டிருந்த அன்சாரின் மனம் சிதைந்துப் போயிருந்தது.

ஹும்..! இது என்ன அழகு..? எட்டாத உயரத்தில்..?! அன்சாரின் மனதில் முட்டி மோதிய வார்த்தைகள் கண்ணீராய் திரண்டு கன்னங்களில் உருண்டது. 'என்னங்க மணி 11:30 ஆயிருச்சிங்க..,' என்று ஈனஸ்வரத்தில் கூறிக் கொண்டே கண்ணீரை துடைத்துவிட்டாள் ஆயிஷா. திரும்பி தன் மனைவியைப் பார்த்த அன்சார், மiதை திடப்படுத்திக் கொண்டு, 'நீ இன்னும் தூங்கலையாம்மா?' என்று ஒப்புக்குக் கேட்டார். என் ஒரு கண்ணை துடிக்கத் துடிக்க புடுங்குனதுக்கப்புறம்..எனக்கு எப்படிங்க தூக்கம் வரும்?! அழுது அழுது வற்றிப் போன கண்களும், வரண்டு போன தொண்டையுமாய்.. சோர்ந்து போய் சொல்லிய ஆயிஷாவின் நிலையை கண்ட எவரின் நெஞ்சமும் சுக்கு நூராகி விடுமென்றால், கணவரின் நிலையை என்ன சொல்ல?!

திடப்பட்ட நெஞ்சம் திரவமாய் கரைய அதற்கு மேல் அடக்க முடியாமல் அருவியாய் கொட்டிய அன்சாரின் கண்ணீரை துடைக்கக்கூட தெம்பில்லாமல், நாற்காலியின் கைப்பிடியில் தலைசாய்த்தவள், இருண்ட வானம் நோக்க ஏனோ? கண்களை இறுக மூடிக்கொண்டாள், தளர்ந்து போன உள்ளத்துடன், தன் மனைவியின் தலையை கோதியவாறே நிமிர்ந்து அமர்ந்த அன்சாருக்கும் அச்சூழலில் இருண்ட வானமும், கனத்த அமைதியும், மிரட்டலாய் தோன்ற 'ஆயிஷா கீழே போலாம் வா' மெதுவாக எழும்பி தன் மனைவிக்கு கைக் கொடுத்தார். எத்தனை நாள் ரசித்த இத்தித்திக்கும் இரவு இன்று இருளாய் தோன்றி திகிலுறச் செய்கிறது. இது விந்தையல்ல..! நியதி..! மனிதனின் மனம் இருக்கும் நிலையைப் பொறுத்துத் தான் அவனது ரசிப்பும்.., சலிப்பும்...!

மெதுவாக படியிறங்கிய அத்தம்பதிகள்.., மகனின் அறையை எட்டிப் பார்க்க, அவன் சுருண்டு போய் படுத்துக் கிடந்தான். சாப்பிட்டு இரு நாட்களாகி விட்டதே! பசி மயக்கத்திலையாவது உறங்கட்டும் என்று வேதனையோடு எண்ணியபடியே படுக்கைக்கு சென்றார்கள். இவர்களின் விழிகளை உறக்கம் தழுவ இன்னும் எத்தனை காலம் பிடிக்குமோ?! அல்லாஹ் போதுமானவன்! ஏன் இவர்களுக்கு இந்நிலை.?! என்ன நேர்ந்து விட்டது..?! நாம் பத்து மாதங்களுக்கு முந்தைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்தேயாக வேண்டும்.

எட்டாத உயரத்தில் இத்தனை அழகா?! என்ற அன்சாரின் விரக்தி வார்த்தைகளில் அர்த்தம் இல்லாமலில்லை! கார் மேகமாய் கூந்தல்... ஒளிரும் நிலவைப் போன்ற முகம்.., அவள் சிரித்தாள் நட்சத்திரங்களை தெளித்தாற் போன்ற.. ஓர் அசாத்திய அழகுப் பதுமையை பெற்றடுத்தவர் தான் அன்சார். ஆணொன்றும், பெணணொன்றுமாய் முத்தாகப் பெற்றெடுத்த இரு செல்வங்கள் தான் ஷமீம் ஷகீனா! ஒரு கொடியில் பூத்த இவ்விரு மலர்களும் இருவயதே வித்தியாசம் கொண்டவர்கள். அன்பு, பாசம், பண்பு, மரியாதை என அனதை;து உயர் குணங்களினாலும் வார்த்து எடுக்கப்பட்ட வண்ணத்து பூச்சிகள்..!

பட்டப்படிப்பு முடிந்து ஷமீமின் மேற்படிப்புக்கான செலவு வருவதற்குள் 18 வயது நிரம்பிய தன் மகளின் திருமணத்தை முடித்து விட தீவிரமாய் இறங்கி விட்டார் அன்சார். மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு திட்ட மிட்ட செலவு அத்தியாவசியமாயிற்றே! பத்தாவது மட்டுமே முடித்திருந்த அந்த அழகுப் பதுமையை பெண்ணெடுக்க உள்ளூரிலேயே பலர் விரும்ப, அன்சாருக்கோ சித்தூரில் இருந்து வந்த வரன் மிகவும் பிடித்திருந்தது அல்லாஹ்வின் நாட்டம்.

'ஷமீம் பொண்ணு பாத்துட்டு போனவங்களோட முடிவ தெரிஞ்சுக்கிட்டு, மாப்பிள்ளையோட ஃபோட்டோவ இன்னைக்கு கொண்டு வர்ரதா அப்துல்லா பாய் சொல்லியிருக்காரு.. நீ இப்ப வெளிய கௌம்பிடாத'

'அத்தா மாப்பிள்ளை ஊர் ரொம்ப தூரமா இருக்கேத்தா..! கார் வச்சு போனாலே ரெண்டு மணி நேரமாகுமாம். 'பஸ்ல' போனா 2½ மணி நேத்துக்கும் கொறையாம போவுமே?! உள்ளூரிலேயே எத்தனை பேரு கேட்டு வர்றாங்க.., நல்லா யோசிச்சி முடிவு செய்யலாமேத்தா?' தங்கை மேல் கொண்ட கொள்ளை பிரியம் அவன் குரலில் தெரிந்தது.

நீ சொல்றது வாஸ்தவம் தாம்ப்பா.., உள்ளூர் மாப்பிள்ளைங்க 'லன்டன'; 'பிரான்ஸ்' னு நம்ம உறவுக்காரங்க இல்லாத நாட்டுலயா இருக்காங்க' பையன் எப்படி., அங்க எப்படி இருக்கான்னு நமக்கெப்படிப்பா தெரியும்?! பொண்ண கொடுக்குறோம்., பையனோட நடத்தை ரொம்ப முக்கியம்பா.., இந்த சித்தூர் மாப்பிள்ளைன்னா 'துபாய்' ல இருக்கார். அங்க இருக்குற உன் மாமனுக்கு இந்தப்பையன நல்லா தெரிஞ்சிருக்கு., ரொம்ப மரியாதை, குணமான ஆளுன்னு சொன்னாரு.., பையனும் ஓரளவு படிச்சிருக்காரு.., அதனால தாம்பா எனக்கு பிரியமாயிக்கு' அன்சார் கூறிக் கொண்டிருக்கும் போதே 'அப்துல்லா பாய்' வந்து விட்டார்.

அன்சாரு.., சந்தோஷமான செய்திதான்! பொண்ணு பார்த்துட்டு போனவகளுக்கு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்காம். மாப்பிள்ளையோட ஃபோட்டோ கொண்டு வந்துருக்கேன். இப்ப நீங்க தான் முடிவ சொல்லனும்' அமர்ந்த அப்துல்லாஹ் பாய் உற்சாகமாய் கேட்டார்.

'மாப்பிள்ளைய பத்தி நாங்க முழுசா விசாரிச்சிட்டோம். எங்களுக்கு முழுத் திருப்தி தான். ஆனா குடும்பத்தப் பத்தி நீங்கதான் நல்லா விசாரிச்சி சொல்லனும். ஏன்னா, தூரத்துல குடுக்குறோம்., நாங்க நிம்மதியா இருக்கனும்ல...!'

'என்ன அன்சாரு.., இப்படி சொல்லிப்புட்டே., விசாரிக்காம சொல்வேனா?! ஒரே பையன்.., பிக்கல், பிடுங்கல் இல்லாத குடும்பம். மாமனார் இல்லாததுனால, இந்தக் குடும்பத்துக்கு எல்லாமா இருந்து செய்யுறது, மாமியாரோட அக்காவும், அக்கா புருஷனுந்தான். இதெல்லாம் ஏற்கனவே உங்க கிட்ட சொன்ன விஷயங்கள் தான். என்ன.., அந்த அக்காவுக்கு தான் கொஞ்சம் வாய் ஜாஸ்தி.., ஒவ்வொரு குடும்பத்திலேயும் இப்படி ஒன்னு இருக்கும் தானே..?! அதான் இந்தக் காலத்து பசங்க., கல்யாணமாகி கொஞ்சு நாள்ல அவங்க இருக்குற நாட்டுக்கே அழைச்சிட்டுப் போயிடுறாங்களே.! நம்ம பொண்ண மாப்பிள்ளை கையோட கூட்டிட்டுப் போவாம இருந்தா சரி!' வெற்றிலை கரையேறிய பற்கள் தெரிய பலமாகச் சிரித்தார் பாய்.

உற்றாரும், ஊராரும் வாழ்த்த இரு மனமும் திருமணத்தில் இணைந்தது. ஜோடிப் பொருத்தம் நல்லாயிருக்குப்பா..,' என்று பெரியவர்கள் ஒரு புறமும் 'ஷாரூக், ஷகீனா' பெயர்ப் பொருத்தமே அசத்தலா இருக்குடா' என்று ஷமீமின் நண்பர்கள் மறுபுறமும், ஆளுக்கொருவிதமாய் பாராட்டப் பாராட்ட., பேராற்றல் நிறைந்த அல்லாஹ்விற்கு நன்றி கூறிய அக்குடும்பம் மகிழ்ச்சிக் கடலில் தத்தளித்தது. மூன்று நாட்கள் இனிதே கழிந்தது.

'இந்தப்பாரும்மா ஆயிஷா.., மாப்புள ஒரு மாசத்துல பயணம் கௌம்பிடுவாரு.., அதனால இப்ப பொண்ண அழைச்சுட்டு போறதோட தங்க வச்சிக்கவோம். நீங்க தம்பிய பயணம் அனுப்ப வர்றதோட பொண்ண அழைச்சுட்டு வந்துக்களாம்., இப்ப பொண்ண சீக்கிரம் கௌம்பச் சொல்லுங்க.., அஸருக்கு முன்னாடி நாங்க கௌம்பனும்' அதிகாரத் தோணையோடு உத்தரவிட்டள் மாமியாரின் அக்காள் ஜைனப்.

ஆயிஷா ஏதோ சொல்ல வாயெடுக்க வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக் கொண்டது. தன் வார்த்தகைகள் எடுபடாது என்பதை அவளால் உணர முடிந்தது. தன் மகளிடம், 'இடையில நீயும், தம்பியும், நாலு நாளு இங்க வந்து தங்கிட்டு போற மாதிரி நான் சம்மந்தியம்மாகிட்ட பிறவு ஃபோனு போட்டு சொல்றேம்மா.., நீ தைரியமா இருக்கனும'; தன் கலங்கிய மனதை கட்டுப் படுத்திக் கொண்டு மகளுக்கு தைரிய மூட்டினாள்.

ஷகீனாவிற்கு பதற்றமாய் இருந்தது.18 வருடங்களாக வாழ்ந்த சூழலிருந்து.., பெற்றவரை, பிறந்தவரை, பிரிந்து அறிமுகமில்லா அந்நியக் குடும்பத்தில் அடியெடுத்த வைக்கப்போகும், எப்பொண்ணுக்குமே இருக்கக் கூடிய இனம் புரியாத பயம் ஷகீனாவின் மனம் முழுக்க பரவிக் கிடந்தது. ஒரு வழியாகக் கிளம்பி, விடை பெறும் வேளையிலே.., ஷகீனாவால் முடியவில்லை.., அவளது அகன்ற விழிகள் உடைந்த அனணக்கட்டானது...! பெற்ற நெஞ்சங்களாலும் அடக்க முடியாமல் அழுதுவிட, கட்டுப்படுத்திக் கொண்ட ஷமீம் கண்ணில் நீர் மல்க தங்கையை ஆறுதல்படுத்தினான்.

ஜைனப் தொண்டையை கனைத்தவளாக., 'ஏம்மா நாமளும் மனுஷ, மக்க இருக்கிற இடத்துக்குத் தாம்மா போறோம். கண்ண தொடச்சிட்டு கௌம்பி வாம்மா.' என்று எகத்தாளமாகக் கூற, அச்சூழலில் ஷமீமிற்கு பற்றிக் கொண்டு வந்தது. அவன் சமாளித்துக் கொண்டு, 'ஏன் மாமி, நீங்க கல்யாணம் பண்ணிட்டு போகும் போது, உங்க வீட்ல எல்லாருக்கும் 'டாட்டா' சொல்லிட்டு கௌம்பிடீங்களோ.?! என்று நக்கலாக நகைத்தான்.

'நான் எப்படியோப்பா.., ஆனா நீங்க நெனச்ச மாதிரி குடுத்துட்டு, உசத்தியான மாப்பிளைய புடிச்சதுக்கு உங்க தங்கச்சி தாராளமா 'டாட்டா' காட்டிட்டு வரலாம்' பட்டென்று கூறிய ஜைனப் விறு, விறுவென்று வாசற்படியை நோக்கிப் போனாள். சுற்றியிருந்நதவர்கள் இப்படியொரு பதிலை எதிர்பாரததால் திகைத்துப் போய் நின்றனர். சுதாரித்துக் கொண்ட மாப்பிள்ளை ஷாரூக்.., 'மச்சினப்புள்ள, மாமா, மாமிக்கு சட்டுனு கௌம்ப முடியாட்டியும், நீங்க வந்து உங்க தங்கச்சிய பார்த்துட்டு போங்க.' என்று ஷமீமின் தோளில் கைப் போட்டு கூறி, நிலைமையின் இறுக்கத்தைத் தளர்த்தினான். அனைவருடனும் விடைப்பெற்று தன் மனைவியை அழைத்துக் கொண்டு காரில் ஏறியதும், கார் புறப்பட்டது.

அன்சாரின் குடும்பத்தில் நாள்கள் நகர்ந்துக் கொண்டிருந்தன. 'அன்சாரு கூப்பிட்டு அனுப்புனியளா..?' கேட்டுக் கொண்டே நுழைந்தார் அப்துல்லாஹ் பாய்.

'ஆமா பாய் உக்காருங்க., புள்ளய போயி ஒரு எட்டு பாத்துட்டு வரச் சொல்லத்தான் கூப்பிட்டனுப்புனேன். போயி 15 நாளாச்சு, இடையில வந்துட்டு போகச் சொல்லுங்கன்னு என் வூட்டுக்காரம்மா ஃபோன்ல கேட்டதுக்கு, 'தம்பிக்கு அலைச்சலா இருக்கு, முடியாதுன்னு' சம்மதியம்மா சொல்லிட்டாங்க.., ஷமீம அனுப்ப தயக்கமா இருக்கு அதான்..,

'புள்ளைட்ட ஃபோன்ல பேசினீங்களா?' அப்துல்லாஹ் கேட்கும் போதே ஷமீம் இடைமறித்தான்.

'பேசினா., அளந்து அளந்து பேசுறா..! பேசுறது என் தங்கச்சி தானேன்னு எனக்கு சந்தேகமே வருது நல்ல குடும்பத்துல போயி நீங்க..,'

'ஷமீம்.. வாயை மூடு! அன்சார் சத்தமாக அதட்டினார் அல்லாவோட நாட்டமில்லாம, மனுஷனால எந்த ஒரு ஜோடியையும் சேர்க்கவும் முடியாது பிரிக்கவும் முடியாது.! அத மறந்துட்டுப் பேசாத!! என்று மகனை கண்டித்தார்.

சின்ன, சின்ன விஷயங்களை பெரிது படுத்தி குறைக்கூறும் கூட்டத்துக்கிடையை., அன்சாரை எண்ணி நெகிழ்ந்துப் போனார் அப்துல்லாஹ் பாய். அன்று மதியமே சித்தூருக்குப் புறப்பட்டார்.

'ஜெய்தூனம்மா., ஜெய்தூனம்மா..!'

'அட, அப்துல்லான்ணே..! வாங்க, என்ன இந்த சாயங்கால நேரத்துல..?'

'சும்மா எல்லாரையும் பாத்துட்டு போவாம்னு தாம்மா வந்தேன்'

'ஷகீனா ஒங்க ஊரு காரங் வந்துருக்காக பாரு.! என்ற மாமியாரின் குரல் கேட்டதும், காப்பிக் கலக்கிக் கொண்டிருந்த ஷகீனா' கதவிற்கு பின் நின்று 'வாங்க மாமா' என்றழைத்தாள்.

'வர்ரேம்மா நல்லாயிருக்கியா?'

'நல்லாத் தான் வச்சிருக்கோம்.' கூறிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தாள் ஜைனப்.

'கண்டிப்பா..! நீங்க நல்லா தான் வச்சிருப்பீங்க... பொண்ணும் உங்கள நல்லா தான் கவனிச்சிட்டுருக்கும்!' சூனியக்கார அம்மாவுக்கு சூசகமாக பதிலளித்தார் பாய்.

'அப்படி சொல்லித் தானே எங்க தலையில கட்டியிருக்கீங்க., அத போகப் போகத் தான் பார்க்கனும்!'

'என்னம்மா., இப்படி பேசுறீங்க' அதிர்ந்துப் போனார் அப்துல்லாஹ். 'இல்லையா பின்னே..! 80, 100 ன்னு வந்த இடத்தை பார்த்தோம் அதிலேயும் 10 கொறச்சி, இது பொண்னும் தங்கம், அது குணமும் தங்கம், ஒரே பொண்ணு அத்தாவும், அண்ணனும் நெனச்சப்ப யெல்லாம் இந்தப் பொண்னுக்கு செய்ய மாட்டாங்களா.., அது, இதுன்னு சொல்லி கட்டி வச்சீங்களே அத சொன்னேன்' தன் வாயிலிருந்து வந்த யதார்த்த வார்த்தைகளை, இங்கு கோர்வையாக்கி, கோர்த்து வாங்கும் ஜைனப்பைக் கண்டு மனதிற்குள் மிரண்டு தான் போனார் அப்துல்லாஹ் பாய்.

இப்ப அது கிட்ட இருக்கிறது 50 பவுனான்னே நிறுத்துப் பார்த்தாத் தான் தெரியும்!' தொடர்ந்து அங்கலாய்த்துக் கொண்டிருந்த ஜைனப்பின் வார்த்தைகளை, வெளியில் சென்று விட்டு திரும்பிய ஷாரூக் காதில் வாங்கி விட்டான். அவனுக்கு அசிங்கமாக இருந்தது.

'பெரியம்மா., என்ன பேசுறீங்க..? அவ இனிமே நம்ம வீட்டுப் பொண்ணு, அவளுக்கு தேவையானதை நாமதான் செய்யனும். என்ன 10 பவுனு கொறையுதா? கவலைய விடுங்க., நான் போயி 20 பவுனா அனுப்பி வைக்கிறேன், போட்டு விடுங்க.., அத விட்டுட்டு., வந்தவர்ட்ட போயி..' எரிச்சலை வார்த்தைகளில் கொட்டி விட்டு., 'ஷகீனா, வந்தவர்க்கு காபி கொடுத்தியா?' என்று மனைவிக்குக் குரல் கொடுத்தான் ஷாரூக்.

அனைத்தும் காதில் விழ அமைதியாய் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த ஷகீனா, 'இதோ ரெடியா இருக்குங்க' என்று குரல் கொடுத்தாள். சற்று நேரத்தில் விடைப் பெற்றுக் கொண்ட அப்துல்லாஹ் பாய் 'பால் முகம் மாறா அப்பெண்ணின் வாழ்வை நல்வாழ்வாக்கி குட்றா அல்லாஹ்' என்று மனதில் பிரார்த்தித்துக் கொண்டார்.

ஒரு மாதம் கழிந்தது. மருமகனை பயணம் அனுப்பி வைத்து விட்டு வரும் போது மகளையும் அழைத்து வந்த அக்குடும்பத்திற்கு மகிழ்ச்சி தாளவில்லை. மகளுக்கு வித விதமாக சமைத்துப் போட்டாள் ஆயிஷா. காலேஜ் போகும் நேரத்தைத் தவிர்த்து.., ஊர் கதை, உலக கதையை தங்கையோடுப் பேசி உற்சாகமாக பொழுதைக் கழித்தான் ஷமீம்.அவ்வப்போது மகளை அனுசரனையாக பக்கத்தில் அமர வைத்து பக்குவமாக புகுந்த வீட்டைப் பற்றி அலசிலார் அன்சார். ஷகீனா மிகவும் கவனமாகவே பேசினாள். 'பெத்தவங்க இவ்வளவு செலவு செய்து கஷ்டப்பட்டு, கல்யாணம் செய்து கொடுத்திருக்காங்க., 'நான் நல்லாயிருக்கேன்னு' சொல்ற அந்த வார்த்தை தான் அவங்க மனசுக்கு சந்தோஷத்தையும், நிம்மதியையும் கொடுக்கும், அது தான் எனக்கு வேணும்.' என்று மனசுக்குள்ளேயே அடிக்கடி கூறிக் கொண்டாள்.

ஷாருக் மாமியார் வீட்டுக்கு அழைத்து அனைவரிடமும் பேசினான், மனைவியோடு அடிக்கடி பேசினான். பெற்றவர்கள் மகள் நல்லாயிருக்கா என்றெண்ணி எண்ணி பூரித்துப் போயினர். 10 நாட்கள் பறந்தோடிப் போனது. சித்தூரிலிருந்து ஃபோன்! 'ஏம்மா ஷகீனா, அடிக்கடி ஃபோன்ல விசாரிக்கிற சரி., மாமியா ஒண்டியாத் தானே கெடக்கிறா, கிளம்பி வருவோம்னு ஒனக்கு தோணலையாம்மா!' என்று ஜெய்தூன் குரலில் ஒரு நொடிப்பைக் காட்ட, ஷகீனா பெட்டியைக் கட்டி விட்டாள். இன்னும் ஓரிரு நாள் தங்கிட்டுப் போம்மா என்ற பெற்றவர்களின் கெஞ்சலை சமாதானம் சொல்லி சமாளித்து விட்டு, அண்ணனை விட்டு வரச் சொல்லி அழைக்க, அரை மனதோடு சித்தூரில் கொண்டு விட்டு வந்தான் ஷமீம்.

'சொன்னவுடனே வந்துட்டாக்கா., பரவாயில்லை தான்!'

'ம்கூம்..அவுக வீட்டுல என்னத்த செஞ்சிட்டாக., 50 பவுனு நகைக்கும், 50 ஆயிரத்துக்கும் இப்படி ஒரு இடம் கெடச்சதுக்கு அவுங்க நம்ம கால்ல விழுந்து கெடக்கனும்டி.. பைத்தியக்காரி., அவுக கிட்ட கொஞ்சம் கறக்குற வரைக்கும் கறாராவே இருக்கனும் புரியுதா?' அதற்கு மகுடி ஊதிய பாம்பாய் ஜெய்தூன் தலையை ஆட்டினாள்.

ஷகீனா வலிய வலிய நெருங்கினாலும் அவர்கள் ஓர் அளவோடு வைத்துக் கொண்டனர்.ஷாருக் அடிக்கடி பேசினால், 'அவள் வெளியே போயிருக்கா, அங்க போயிருக்கா' என்று அவள் கண் முன்னேயே காரணம் கூறப்பட்டது. கணவனிடம் பேசும் போதும் இங்கிதமேயில்லாமல் கண்காணிக்கப் பட்டாள். அம்மா வீட்டிற்கும் இதே நிலை தான். அக்கம்,பக்கத்தாரிடம் அவளை நெருங்க விடுவதில்லை.அவள் அந்த வீட்டின் ஓர் அடிமையாகவே நடத்தப்பட்டாள்.

'ஜைனபு, கடைவீதியில ஒர் இடம் வெலைக்கு வந்திருக்கிறதா உன் மச்சான் சொன்னாக..வாங்கிப் போட்டுருவோமா?'

இப்பத்தானேக்கா கலியாணம் முடிஞசிருக்கு, அதுக்குள்ளே எங்கேக்கா அவ்வளவு பணத்துக்கு போறது?!'

'ஒனக்கு வாழப்பழத்த உரிச்சி வாயிலயில வைக்கனும்.. பொழைக்கத் தெரியாதவளா இருக்கியே? ஒங்காத குடு சொல்றேன்.' என்று ஜெய்தூனின் காதில் ரகசியமாய் முனு முனுத்தாள் ஜைனப்.

இரண்டு நாள் கெடுவோடு ஷகீனா ஊர் வந்து சேர்ந்தாள். ஷமீம் இன்னும் காலேஜிலிருந்து வந்திருக்கவில்லை. ஷகீனாவின் உள்ளம் வெந்து, நொந்துப் போயிருந்தாலும் அவள் அவ்வளவாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. 'நான் படுற கஷ்டத்த என்னால தாங்கிக்க முடியும்.. ஆனா நானிருக்கிற நெலமை என் குடும்பத்து தெரிஞ்சு அவங்க துடிச்சுப் போறத என்னால தாங்கிக்கவே முடியாது.' என்று மனதிற்குள்ளேயே போட்டு புதைத்துக் கொண்டு வார்த்தைகளை தடுமாறாமல் உதிர்த்தாள்.

'இப்ப வாங்கிப் போட்டா வசதியா இருக்கும்னு நெனக்கிறாகத்தா.. ஆனா இவுகளுக்குத் தெரியக் கூடாதாம்., நீங்களே வலிய குடுக்கற மாதிரி கொடுத்தா நல்லாயிருக்கும்னு சொல்றாகத்தா.' அத்தாவை நிமிர்ந்துப் பார்க்காமல் கூறினாள் ஷகீனா.

அன்சார் நொறுங்கிப் போனார்.'3 லட்சத்துக்கு நான் எங்க போவேன்' அவரின் மனம் ஆளாய் பறந்தது. அந்நேரம் ஃபோன் மணி அடிக்க, அன்சாரும், ஆயிஷாவும் உணர்வற்றுப் போய் அமர்ந்திருந்தனர். ஷகீனா சென்று ஃபோனை எடுக்க எதிர் முனையில் ஷாருக். மாமனாரை குசலம் விசாரிக்க யதார்த்தமாய் பண்ணியவன், மனைவியின் குரல் கேட்டு ஏகமாய் குழம்பி விட்டான். 'நான் இப்ப தான் வீட்டுக்கு ஃபோன் போட்டேன்.. நீ பெரியம்மா வீட்டுக்கு போயிருக்கிறதா அம்மா சொன்னாங்க.. ஆனா.,' என்று ஷாருக் கேட்க, ஷகீனா அதிர்ந்துப் போய் உளற, ஷாருக் நிதானித்து ஏதோ கணித்தவனாய் மனைவியிடம் குடைந்தெடுத்து விட்டான். அன்சாரும், ஆயிஷாவும் பேசுவது மருமகப்பிள்ளை என்றுணர்ந்து நாசூக்காய் நகன்று விட, ஷகீனா இருந்த மனநிலையில் கணவனிடம் கொட்டித் தீர்த்து விட்டாள்.

ஷாருக்கின் கோபத்தை அவளால் அவனது குரலிலேயே உணர முடிந்தது. 'நீ அத்தாவிடம் ஒரு பைசா வாங்கக் கூடாது. 3 நாள் தங்கிட்டு வீட்டுக்குப் போ..

' என்னங்க, எனக்கு பயமா இருக்குங்க., நீங்க இதக் காட்டிக்க வேணாம்'

உனக்கு அந்த கவலை வேணாம், நான் பார்த்துக்குறேன்.. நீ தைரியமாப் போ புரியுதா'

கணவனிடம் மனம் விட்டுப் பேசிய பிறகு ஷகீனாவின் மனசு லேசாகியிருந்தது. தந்தைக்கு வந்த நெருக்கடி போய் விட்டது என்றெண்ணும் போதே அவள் உள்ளம் மகிழ்ந்துப் போனாள். 'இப்ப படுற கஷ்டத்தோட இன்னும் கொஞ்சம் கூடப் படனும் பரவாயில்லை.. என்னை உயிராய் நினைக்கும் என் உயிர்கள் நிம்மதியாயிருக்கனும்' என்று மனதிற்குள் சாந்தியடைந்தாள். குடும்பத்தோடு கல கலவென்று இருந்து விட்டு, 3 நாட்கள் கழித்து ஊர் கிளம்பிய தங்கையை ஷமீம் கொண்டு போய் விட்டு வந்தான்.

பத்து நாட்கள் கழிந்திருக்கும். இரவு மணி 11:00.. ஃபோன் மணி அடிக்க, ஷமீம் கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்தெடுத்தான். எடுத்தவன், 'யா அல்லாஹ்.. யா அல்லாஹ்..' என்று தன்னை மறந்துக் கத்தினான். அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த பெரிய ஊரின் அரசாங்க ஆஸ்பத்திரியில் அன்சாரின் குடும்பமே நிலைக் குலைந்துப் போய் சேர்ந்தது.

'சம்மந்தி' என்று புடவையை வாயில் வைத்துக் கேவினாள் ஜெய்தூன். 'பூரி சுட்டுட்டு இருந்த புள்ள மேல எண்ணை சட்டி சாய்ஞ்சி.. இல்ல.. அடுப்புல சாய்ஞ்சி அப்படியே பத்திக்கிச்சும்மா' என்று திக்கித் திணறி கூறிய ஜைனப் அப்படியே மயக்கமாவது போல் சுவற்றில் சாய்ந்து விட்டாள். ஜைனப்பின் கணவர் தள்ளாடிய அன்சாரைப் பிடித்துக் கொண்டார்.

ஒரே நாள்! அதற்குள் எத்தனைப் போராட்டம்!! பெற்ற தாய் ஒர் புறம் நீர்த்துக் கிடக்க, நினைவு விட்டு விட்டு திம்பிய ஷகீனாவை ஏகமாய் கஷ்டப்பட்டு, தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றி, பணத்தை தண்ணீராய் கரைத்து, ஊசலாடிக் கொண்டிருந்த அவள் உயிர் காக்க அத்தாவும், அண்ணனும் முடிந்தவரைப் போராடியும்..?! இன்னா லில்லாஹி... எல்லாம் முடிந்து இரண்டு நாட்களாகி விட்டது!

இதோ இன்னும் தூக்கம் விழிகளைத் தழுவ மறுக்க, படுக்கை நெருஞ்சி முள்ளாக உறுத்த, புரண்டுக் கொண்டிருந்தனர் பெற்ற நெஞ்சங்கள்! இவர்களின் விழிகளை உறக்கம் தழுவ இன்னும் எத்தனை காலம் பிடிக்குமோ?!

இப்படித் தான், வரசட்சணை எனும் கொடுமை பல கோணங்களில் பல 'ஷகீனாக்களை' சத்தமில்லாமல் சமாதியாக்கிக் கொண்டுதான் இருக்கிறது..!

முற்றும்.

Wednesday, July 01, 2009

வாரன் பஃபட் ”பணக் கடவுள்”

”வாரன் பஃபட்” டின் ”பணக்கடவுள்” என்ற இந்த புத்தகத்தை தங்களுக்கு நான் படித்து விமர்சனம் வழங்குவதின் நோக்கம்… பங்கு சந்தையில் நீங்கள் எவ்வாறு ஈடுபடுவது என்பதை அறிந்து கொள்ள அல்ல! ”வாரன் பஃபட்” 100 ரூபாயை எவ்வாறு 100 கோடியாக மாற்றினார்? என்ற ”டெக்னிக்கை” தெரிந்து கொள்ளவும், அதை நாம் எவ்வாறு செயல்படுத்துவது? என்பதை அறிந்துகொள்ளவுமே இந்த புத்தகம்!.

சரி… எத்தனையோ எழுத்தாளர்கள் இது போன்று எத்தனையோ நூல்களை வெளியிட்டிருப்பினும், நான் குறிப்பாக இப்புத்தகத்தை தேர்ந்த்தெடுத்து தங்களுக்கு விமர்சனம் வழங்குவதினும் ஓர் நோக்கம் இருக்கின்றது. அதையும் நீங்கள் தெரிந்துக்கொண்டால் உங்களுக்கு இந்நூலின் மீது பிடிப்பு ஏற்படும். அப்படியே உங்களை தொழில் களத்தில் தன்முனைப்போடு இறங்கத்தூண்டும். அதுவே உங்களது வாழ்க்கைத் தடத்தை மாற்றியமைக்காலம்… வரும் காலத்தில் நிலாவில் தங்கி இளைப்பாறும் பில்லியனராக உங்களை மாற்றலாம்… யாருக்கு தெரியும்? நான் தடம் மாறாமல் கூற விரும்பும் விஷயத்திற்கு வருகிறேன்.

நாம் ஒரு விஷயத்தை நம்பினால் தான் அதை செயல்படுத்த துணிவோம்! இது அனைவரும் அறிந்து கூற்று ஒரு காரியத்தை அரை குரை மனதோடு செயல்படுத்தினோமென்றால் அக்காரியம் முழுமையும் பெறாது வெற்றியும் கிடைக்காது. எனக்கு இந்நூலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது அப்படிப்பட்ட நம்பிக்கையை கொடுத்ததின் தாக்கம் தான். விமர்சனம் வழங்குவதின் நோக்கம்.

கி.பி. 1930 ம் வருடத்தில் பிறந்த இந்நூலின் கதாநாயகன் ”வாரன் பஃபட்” டின் வியாரபார அணுகு முறைகள், வணிக செயல்பாடுகள், தொழிலின் தொலைநோக்கு சிந்தனைகள், இவையனைத்தும் அதே வருடத்தில் பிறந்த எனது தாத்தா K.P.R. அப்துல் ஹையூம் அவர்கள் வாழ்வில் பிரதிபலித்ததை, நான் இந்நூலை பிடிக்கும் பொழுது உணர்ந்தேன். தொழில் முனைவர்களின் பெரும்பாலோர். தொழிலில் வெற்றியடையும் பொழுது, தன் வியாபார ஸ்தாபனத்தை பல கிளைகளாக விஸ்திரப்படுத்திக் கொள்வதிலும், அது சார்ந்த தொழில்களை உருவாக்குவாதிலுமே முனைப்போடு செயல்படுவார்கள். அது வெளிப்பார்வைக்கு மிகப்பெரிய வெற்றியாளர்களாக, உறுதியான, நிலையான வியாபார ஸ்தாபனமாக காட்சியை தந்தாலும் காலம், மாற, மாற காட்சியும் மாறும்! இதுதான் முற்றிலும் உண்மை.

அதற்கு தான், ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாத பல்வேறு தொழில்களில் தொலைநேக்கு பார்வையுடன் தன்னம்பிக்கையோடு செயல்படுத்த முன்வரவேண்டும். இது வணிக வாழ்வின் ஏற்ற இறக்கத்தை ஈடுசெய்ய கற்றுக்கொடுக்கும்.

”வாரன் பஃட்டின்” தொழில் ”டெக்னிக்கை” நான் முற்றிலும் நம்புவதின் நோக்கம் எனது தாத்தா இது போன்று ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாத மளிகை, பொழுது போக்கு துறை, ரைஸ் மில், மொத்த வியாபாரம், ரியல் எஸ்டேட், விவசாயம், முதலிடூ, உற்பத்தி, நூகர்வோர் பொருள் விநியோகம், சிமெண்ட், பஞ்சு போன்ற பல தொழில்களை சீரான முறையில் திட்டமிட்டு, தெளிவாக நடைமுறை படுத்தி வெற்றியும் கண்டார்கள். ஆக இவ்வளவு பிந்தைய காலத்திலே, ஒரு சிறு கிராமத்திலே சம காலத்தவரான எனது தாத்தா, வாரன் பஃபட்டின் சிந்தைனையிலும் ஒத்தவராக தன் புதிய வணிக சிந்தனையை தைரியமாக நடைமுறைபடுத்தி, தன் சுற்று வட்டாரத்தில் சிறந்த தொழிலதிபராக வெற்றி பெற முடிந்த்து என்றால், இந்த நவீன காலத்தில் ஏன் நம்மால் புதிய சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வெற்றி காண முடியாது? ஆக நம்பிக்கையோடு படியுங்கள் கருத்தை சுவையுங்கள். காலம் தாழ்த்தாமல் களம் இறங்குங்கள்… !!!!

Friday, March 13, 2009

படித்ததில் பிடித்தது!

கறுப்பரினத்தைச் சேர்ந்த பெண்மனி ஒருவர் நூறு வயது வரை வாழ்ந்தார். அவரது நீண்ட நாள் வாழ்க்கையின் ரகசியம் என்னவென்று கேட்ட போது,

“வேலை செய்யும் போது நான் கடினமாக வேலை செய்கிறேன்..

சும்மா இருக்கும் போது சுகமாக - சாதாரணமாக, இருக்கிறேன்..

கவலை தோன்றும் போது நான் தூங்கச் செல்வேன்!”

என்று அந்த அம்மையார் கூறினார்.

அந்த அம்மையாரின் அருமையான வாழ்க்கையைப் பின்பற்றி அனைவரும் வாழ்ந்தால் நாமும் நூறு வயது வரை வாழலாம்.

                                               நூல் KILL FEAR BEFORE FEAR KILLS YOU

Monday, March 09, 2009

படித்ததில் பிடித்தது...

ஒரு தொழிலதிபர் பசிபிக் கடலின் குறுக்கே நீண்ட தூரம் பறந்து கொண்டிருந்தார். விடுமுறை நாட்களுக்காக வீட்டிற்குச் செல்லும் ஒரு பையன் அவருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தான். சுவைமிக்க மதிய உணவுக்குப் பிறகு பயணிகள் சிறு துயில் கொள்ளும் நேரம்! கடும் புயலும் காற்றும் வீசும் இடத்தைக் கடந்துக் கொண்டிருப்பதால் அனைவரையும் இடுப்பில் வார் மாட்டிக் கொள்ளுமாறு விமான ஓட்டுனர் ஆணையிட்டார். விமானம் மிகப் பெரிதாக இருந்த போதிலும் அது மோசமாக ஆடியது.

அந்தப் பையன் வேதனையுடன் அஞ்சி நடுங்கி அவருடைய தோளில் சாய்ந்து கொண்டான். அவரோ அவனுடைய தலையை அன்புடன் நீவி விட்டார். அஞ்சாதிருக்கும்படி அவர் ஆறுதல் ஊட்டினார்.

திடீரென விமானம் சாய்ந்ததால் சிறுவன்,“உங்களுக்குப் பயமாக இல்லையா?” என்று கேட்டான்.

இல்லை... இது உண்மையான வேடிக்கை, உனக்கு இது ரசிக்கத்தக்கதாக - அனுபவிக்கத்தக்கதாகத் தோன்றவில்லையா? என்றார்.

சிறுவனிடத்தில் ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டது. அவனுடைய பயமும் பீதியும் அகன்றன. விமானம் சாயும் போதும், தள்ளாடும் போதும் அதை ரசித்துக் கீச்சொலியுடன் சிரித்து மகிழத் தொடங்கினான்.

தொழிலதிபர் அந்தச் சிறுவனுக்கு வாழ்க்கைக்கலையில் ஓர் அரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்துவிட்டார்!

கோழைகள் பலமுறை சாகின்றனர்.வீரனோ ஒரு முறை தான் சாகிறான்.” நமக்குக் கிடைத்திருப்பது ஒரே ஒரு வாழ்க்கை என்பது தான் உண்மை. ஆனால் அச்சத்தாலும், நடுக்கத்தாலும் ஆயிரம் முறைகளுக்கும் மேலல்லவா சாகிறோம்!

                                                       KILL FEAR BEFORE FEAR KILLS YOU

Tuesday, March 03, 2009

குழந்தைகள் கணினி விளையாட்டு - உலக கணித தினம் மார்ச் 4ம் தேதி

உலக கணித தினம் 4ம் தேதி மார்ச் மாதம் நடைபெற இருக்கின்றது. இதற்காக ஒர் இணையத்தளம். அதில் பள்ளி குழந்தைகள் கணினி மூலம் கணித விளையாட்டு விளையாடி வெற்றி பெற ஓர் அறிய வாய்ப்பு காத்திருக்கின்றது.

நீங்கள் இதில் பங்கு பெற ரிஜிஸ்டர் செய்யவேண்டும். அதற்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

எவ்வாறு ரிஜிஸ்டர் செய்வது ?

http://www.worldmathday.com/ என்ற இணையத்தளத்திற்கு சென்று மெனு பாரில் உள்ள ரிஜிஸ்டர் என்ற பட்டனை கிளிக் செய்யவும். பின்னர் நீங்கள் பள்ளி ஆசிரியராக இருந்து பள்ளிக்கூடம் சார்பாக உங்கள் மாணவர்களுக்கு ரிஜிஸ்டர் செய்ய ஸ்கூல் ரிஜிஸ்டரேஸன் என்ற பட்டணை கிளிக் செய்யவும். நீங்கள் தனி நபராக ரிஜிஸ்டர் செய்ய ஹோம் ரிஜிஸ்டரேஸன் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

clip_image002

பின்னர் உங்களுடைய நாடு, வயது, பெயர், மின் அஞ்சல் முகவரி, மற்றும் கடவுச்சொல் (பாஸ்வேட்) விபரத்தை பூர்த்தி செய்யவும் பின்னர் நீங்கள் 13 வயதுக்கு மேற்பட்டவரா அல்லது கீழ் பட்டவரா என்பதை தேர்வு செய்து சப்மிட் பட்டனை கிளிக் செய்யவும்.

clip_image004

எவ்வாறு லாகின் செய்வது?

பின்னர் நீங்கள் குறிப்பிட்ட மின்அஞ்சல் முகவரிக்கு உங்களுடைய விபரத்தை சரிபார்க்க மின்அஞ்சல் வரும். மின்அஞ்சலில் உள்ள கிளிக்ஹியர் என்ற லிங்கை கிளிக் செய்யவும். கணினி http://www.worldmathday.com/ சென்று உங்கள் அக்கௌன்ட்டை ஆக்டிவேட் செய்யும். அவ்வளவுதான் உங்கள் அக்கௌன்ட் ரெடி. உங்கள் கணினி திரையில் உங்களுடைய யூஸர் நேம் மற்றும் பாஸ்வேட் தெரியும். அதைவைத்து clip_image006வளைப்பக்கத்தில் உள்ள சைன் இன் என்ற பட்டனை கிளிக் செய்து யூஸர் நேம் மற்றும் பாஸ்வேட் தந்து நீங்கள் விளையாட வேண்டியது தான்.

கன்ரோல் போடின் பயன்பாடு?

நீங்கள் லாக்கின் செய்தவுடன் உங்களுடைய விபரம். அதாவது, நீங்கள் (முன்பு விளையாடி இருந்தால்) அதிகம் பெற்ற மதிப்பெண், சரியான பதில்கள் எத்தனை, சரியாக கணக்கிடும் திறன் எவ்வளவு, வேகமாக மற்றும் சரியாக கணக்கிடும் திறன் எவ்வளவு மற்றும் இதுவரை விளையாடிய விளையாட்டுக்கள் எத்தனை என்ற விபரம் தெரியும்.

clip_image008

எவ்வாறு விளையாடுவது?

clip_image010வளைத்தளத்தின் வலது பக்கத்தில் (கீழ் விளக்கப்படம்) உள்ள என்டர் கேம் என்ற அய்கானை கிளிக் செய்யவும்.

கிளிக் செய்தவுடன் கணினி தற்போது உலகின் மற்ற பகுதியில் உள்ள  விளையாட்டு நண்பர்களை தானாக (ரேண்டம் முறையில்) தேர்வு செய்து (நான்கு நபர்கள்) உங்கள் கண் முன் நிறுத்தி உங்களுடன் விளையாட வைக்கும்.

clip_image012

சரியாக ஒரு நிமிடத்தில் நீங்கள் எத்தனை கணக்குக்கு சரியாக விடை செய்கின்றீர்கள் என்பது தான் போட்டி…

குறிப்பு- சில சமயம் கணக்கில் கூட்டல், கழித்தல் அல்லது இரண்டும் சேர்ந்து இருக்கும். கவனம் தேவை.

clip_image014

இதில் கவனிக்க வேண்டியது, நீங்கள் மூன்று (3) தவறான விடை தந்தால் விளையாட்டை விட்டு நீக்கப்படுவீர்கள்.

clip_image016

ஆட்டம் முடிந்தவுடன் உங்களுடைய வெற்றி விபரம் தரப்படும் .

நன்றாக இருக்கின்றதே என்று நீங்கள் மீண்டும் விளையாட நினைத்தால் பிளே எகைன் என்ற இடத்தில் கிளிக் செய்யவும்.

சரி இதனால் என்ன பயன் ?

பரிசு மற்றும் சர்ட்டிபிகேட் வழங்கப்படுகின்றது….. இவை மட்டுமா?

இந்த போட்டியின் மூலம் உங்கள் குழந்தைக்கு மனிதனுக்கே உரித்தான தொடு உணர்ச்சி, பார்வை, கேட்டல் மற்றும் பகுத்தறிவு என அனைத்து பாகங்களும் ஒன்று இணைந்து வேகமாக செயல்படுவதால், இந்த அவசர உலகத்தில் ஈடு கொடுத்து வருங்காலத்தில் வெற்றி பெற இப்பயிற்சி உதவியாக இருக்கும். மேலும் பள்ளி கணக்கு பாடத்தை மிக வேகமாக தப்பு இல்லாமல் செய்ய உதவும், மேலும் கணினியின் மீது ஆர்வம் எற்படும் என்பதில் ஐயமில்லை…

உங்களுக்கு இச்செய்தி பயனுள்ளதாக கருதினால் உங்கள் கருத்துகளை பின்னூட்டம் இடுங்கள்.

Monday, January 12, 2009

உடல் பயிற்சி வாச் டிஸ்ட் (PDF பைலாக)

வாழ்கையில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அது போல் உடல் பயிற்சி மிகவும் அவசியம். நாம் தினம் தினம் எவ்வாறு பங்குசந்தை எற்ற இறக்கம் மற்றும் வனிக வர்த்தக எற்ற இறக்கங்களை தவறாமல் கவனிக்கின்றோமே அது போல், நாம் உடல் நிலை பற்றி கவனிப்பதில்லை (என்னையும் சேர்த்துதான்). நாம் உடல் நிலை நன்றாக இருந்தால் தான் நம்மால் சுரு சுருப்பாக இயங்க முடியும் என்று நமக்கு தெரிந்திருந்தும் நாம் கவணத்தில் கொள்ளதது தான் இதில் வருந்தக்கது.

நாம் பங்குசந்தையில் எவ்வாறு போட்போலியோ அல்லது வாச் டிஸ்ட் வைத்து நாம் பங்கின் இலக்கை கவனிக்கின்றோமோ அதுபோல் நாம் உடற்பயிற்சி குறிக்கோள் மற்றும் அடைந்த இலக்கு பற்றி அறிய கீழ் தரப்பட்டுள்ள படிவம் உங்களுக்கு உதவுலாம். தேவையுடையவர்கள்

டவுன் லேட் செய்து கொள்ளவும்.

free_printable_workout_log

இந்த படிவத்தின் மூலம் நீங்கள் கீழ்கன்ட பயன்களை அடையமுடியும்.

  • Stay frugal by tracking your fitness for free.
  • Easily track weekly and daily workouts.
  • Monitor fitness goals and achievements.
  • Get trim, slim, and fit by honestly logging your exercise sessions.
  • Keep a pulse on weight fluctuations, heart rates, and energy levels.
  • Plan daily workout schedules.
  • Track time spent exercising, distance traveled, and workout intensity.
  • Have fun with fitness by using an attractive exercise log sheet.

Sunday, December 28, 2008

2008 ஆம் ஆண்டிலில் மிகச்சிறந்த மற்றும் அதிக அளவில் டவுன்லோட் செய்யபட்ட மென்பொருள் பற்றிய விபரம்

2008 ஆம் ஆண்டிலில் மிகச்சிறந்த மற்றும் அதிக அளவில் டவுன்லோட் செய்யபட்ட மென்பொருள் பற்றிய விபரம் லைப்ஹேக்கர்.காம் மற்றும் எனது சொந்த பயன்பாட்டு அடிப்படையில் இருந்து வெளியிடுள்ளேன். (விண்டோஸ் தொழில்நுட்பம்)

logofirefox 1.FireFox 3 ஒரு டஜன்க்கு மேற்பட்ட (Smart Location Bar, Add-ons manager,intuitive interface, Malware protection,Improved download manager,Native looks for every system,Remember pas  sword,Smart bookmarks,Bookmark Manager) என புதிய வழிமுறைகளையும், சிறப்பு அம்சங்களையும் கொண்டு வெளியிடபட்ட இந்த மென்பொருள் இணையபயன்பாட்டை மிகவும் எழிதாக ஆக்கியுள்ளது.

pdftoword_cropped2. PDF to Word converter,  இதுவரை நாம் வேட் டாக்குமெண்டை பிடிஎப் ஆக மாற்றும் மென்பொருளை தான் அதிகம் பார்த்து இருக்கின்றோம், ஆதுவும் தற்போது தனிமென்பொருளாக இல்லாமல் வேட்வுடன் இவ்வசதி இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மென்பொருள் சற்று வித்தியாசமாக பிடிஎப் டாக்குமெண்டை வேட் டாக்குமெண்டகா மிகச் சுலோபமாக மாற்றி தருகின்றது. (குறிப்பு மிகப்பெரிய வேட் டாக்குமெண்டை மாற்ற இந்த மொன்பொருள் சிறந்தது அல்ல)

ccleanerthumb3. CCleaner என்று அழைக்கப்படும் Crap Cleaner மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள தேவையில்லாத அனைத்து விதமான டெம்பரவரி பைல்ஸ், குக்கிஸ், மொரி டாப், மற்றும் சிஸ்டம் லாக் ஆகியவற்றை ஸ்கேன் செய்து ஆகற்ற உதவுகின்றது. என்னுடைய கணினியில் தேவையில்லாமல் இருந்தவற்றை அகற்றி எனக்கு 1.6 GB  இடத்தை தந்துள்ளது.

image 4. இதுவரை காசு கொடுத்து வாங்கிய ஆன்டி-வைரஸ் மென்பொருளை இலவசமாக வெளியிட்டு கலக்கிய நிறுவனம் AVG அது தனது 2008ம் வருடத்தில் புதிய இட்டர்பேஸ், பாஸ்ட் பர்பாமன்ஸ் மற்றும் இணையதள பாதுகாப்பு அப்டேட் என பல புதிய விசயங்கைளை அறிமுகப்படுத்தியுள்ளது.

image 5. Quick Media Converter எந்த ஒரு ஆடியோ மற்றும் வீடியோ கோப்பை ஒரு பார்மெட்டில் இருந்து மற்றெரு பார்மெட்டிர்க்கு எழிதாக மாற்ற உதவுகின்றது மேலும் டிரக் அன்ட் டிராப் முறையில் உங்கள் ஆடியோ மற்றும் வீடியோ கோப்பை எழிதாக இலுத்து போட்டு DivX and Xvid to Xbox and iPhone output என சிறப்பாக மாற்ற உதவுகின்றது.

image 6. Google Chrome கூகிலின் மற்றும் ஒரு வெளியிடு, அருமை என்று மட்டும் சொல்லி நிறுத்தி விடமுடியாது. பயர்பாக்ஸ் பயன்படுத்தியவர்கள் அவ்வளவு எழிதாக எற்றுகொள்ள மாட்டர்கள். இருந்தாலும் இது நால்ல போட்டியை உண்டாக்கும். இதில் எனக்கு பிடித்தது வேகமாக இணையா பக்கங்களை இறக்கம் செய்வது மற்றும் கூகில் சர்ச் உடன் இணைந்து வேகமாக தேட உதவுவது. நாம் பார்த்த இணைய பக்கங்களை தம்புநையிலாக படம் இட்டு காட்டுவது.

image 7. EverNote நீங்கள் கல்லுரியில் பிராஜக்ட் செய்பவர? அல்லது எதுவும் ஆராச்சியில் இடுபடுபவரா? ஆம் என்றால் இந்த மென்பொருள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் பார்த்த பக்கங்ளை சேகரித்து வைக்க உதவுவது மட்டும் இல்லாமல் வளைத்தள விபரம் போன்றவற்றையும் சேகரித்து வைப்பதால் மேல் விபரம் தேவைப்படும் போது விரைவாக சென்று பார்க்க உதவுகின்றது.

image 8. ChartNexus சார்ட்டிங் மெண்பொருள் பங்குச்சந்தை வனிகர்களுக்கு ஒர் வரப்பிரசாதம் மிகவும் பயன் உள்ளது. மேலும் இதன் சிறப்பு அம்சங்கள் 3 வருட ஈ.ஓ.டி டேட்டாவும் கிடைக்கிறது. கையாளுவது மிக எளிதாக உள்ளது. இலவசமாகவும் கிடைக்கின்றது வேறு என்ன வேண்டும்.

 

image 9. Windows Live Writer வின்டோஸ் லைவ் ரைட்டர் மென்பொருள் வைத்து நேரடியா உங்கள் வலைபக்கத்தில் பதிவு செய்ய முடியும். வின்டோஸ் லைவ் ரைட்டர் பயன்படுத்தி வாரஇறுதி நாட்களில் எழுதியதை வார நாட்களில் பதிவு செய்ய விரும்பினால், நீங்கள் பதிவு செய்ய விரும்பும் தேதியை குறிப்பிட்டு பதிவு (Publish) செய்து விடுங்கள். அது சரியாக நீங்கள் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் வலைதளத்தில் பதிவு செய்து விடும்.

10. NHM Writer தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும். ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி. Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது. மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது. இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.

Tuesday, December 23, 2008

ரூபாய் நோட்டுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Rupees1000    Rupees500

ரூபாய் 1000/- நோட்டு                            ரூபாய் 500/- நோட்டு

 Rupees50Rupees100

ரூபாய் 50/- நோட்டு                                       ரூபாய் 100/- நோட்டு

தீம் பார்க்….

இந்த தடவை ஊருக்கு வரும் போது தமிழ்நாட்டில் உள்ள தீம் பார்க்கில் குடும்பத்தோடு விளையாடி மகிழ்ந்தால் என்ன என்று தோன்றியது.

எனக்கு எங்கு எங்கு தீம் பார்க் உள்ளது? அவற்றின் நுழைவுக்கட்டணம் எவ்வளவு? என்ற தகவல் தேவை தெரிந்தவர்கள். தயவு செய்து பின்னுடம் இடவும்… நன்றி…

Friday, December 19, 2008

நிறுவனங்களின் நிலையை...

இன்றயா நிதிச்சந்தையின் மற்றும் பொருளாதார பாதிப்பால் நிறுவனங்களின் நிலையை அவர்களின் லோகே முலம் சிறப்பாக விளக்கியுள்ளனர் பாருங்கள் உங்கள் கற்பனைக்கு ஓட விட்டு சிரியுங்கள்...  சிந்தியுங்கள்... (ஏன் இந்த நிலை இதானால் பாதிப்பு என்ன. நாம் என் செய்யவேண்டும் நம்மை பாதுகாக்கா?)

clip_image001

3M ஆக இருந்தது இப்படி தேய்ந்து... 2M ஆக மாறியுள்ளது...

clip_image003clip_image002

clip_image004

clip_image005

clip_image006

clip_image007

clip_image008

clip_image009

clip_image010

image011

clip_image011 

clip_image012

clip_image013

clip_image014

Thursday, December 11, 2008

ஆக்சிஸ் வங்கி கணக்கு பற்றிய இமெயில் (ஏமாந்து போகதீர்கள்).

ஆக்சிஸ் வங்கியில் எனக்கு கணக்கு இல்லை  அப்படி இருக்கும் போது உங்கள் கணக்குகை நீங்கள் பயன்படுத்தால் உங்கள் வங்கி கணக்கு சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்ன இன்று ஒரு இமெயில் பார்த்ததோன். இது பிரபல திருட்டு கும்பலின் கைவரிசை. உங்கள் கணக்கு விபரத்தை அவர்களிடம் தந்து ஏமாந்து போகதீர்கள்.

 

Irregular Account Activity, Account Locked.

Subject To: INTERNET BANKING

Date: 12/11/2008

______________________________________________________________________

Dear Valued Customer,

We detected irregular activity on your Axis Bank Account on 12/11/2008. For your protection, you must verify this activity before you can continue using your card. This means your ATM card was not swiped in a machine for this transaction. Please note that this transaction was not billed and was placed under review upon your verifications. Either your information has been modify by a third party or incomplete, as a result your access to use our Internet services has been limited. Please update your online account information to help us validate your identity.

To fully restore the acess to online services, kindly update your information. You can update your online banking details by clicking following the link below. We will review the activity on your account with you and upon verification, we will remove any restrictions placed on your account.

For your security, access to Internet Banking has been locked. To regain access, you must update and Confirm your online banking account details.

Please click here to Update and Confirm Your Internet Banking Account Details

At Axis Bank, it has been our constant endeavour to bring a sharper focus to the requirements of our customers and we strive to leverage cutting-edge technology to provide the highest levels of security and service to you. We are one of the few banks in India which has built up a fully integrated centralised banking architecture to offer you banking services anywhere, anytime

Wednesday, December 10, 2008

மணிமேனேஜர் (உங்கள் சேமிப்புக்கு வழிகாட்டி)

  1. 1. என் பணம் எங்கிருந்து வருகிறது விபரம் அறிய?
  2. 2. எங்கு போகின்றது, யாருக்கு போகின்றது என்ற விபரம் அறிய?
  3. 3. காலம் கடத்தாமல், அபராதம் இல்லாமல் பில் கட்டவேண்டுமா?
  4. 4. வங்கிக் கணக்கில் பணம் எவ்வளவு உள்ளது, செக் கொடுத்தால் பாஸ் ஆகுமா?
  5. 5. என்றைக்கு எந்த செலவை எவ்வளவு செய்தேன் என்ற விபரம் பார்க்க வேண்டுமா?
  6. 6. ஆண்டு மற்றும் மாத வரவு செலவு திட்டமிடல்?
  7. 7. உங்கள் சொத்து விபரங்கள் அவற்றின் மதிப்புகள் அறிய?
  8. 8. பங்கு சந்தையில் உங்கள் பங்கின் விலை என்ன அவற்றின் மதிப்பு எவ்வளவு?
  9. 9.ஆண்டுஅறிக்கை... ஃ
  10. 10. வீட்டு மின்கட்டணம், தொலைபேசிக் கட்டணம், பால் பில், மளிகை பில் என சகலமும் பராமரிக்க... ?

இந்த மணிமேனேஜர் உங்களுக்கு உதவலாம்?

(தினசரி அல்லது வாரம் ஒரு முறையாவது நீங்கள் உங்கள்  வரவு செலவு விபரத்தை டேட்டா என்டர் செய்யவேண்டும்)

மணிமேனேஜர் இன்ஸ்டால் செய்யும் முறை...

image image image image image

மேல் உள்ள திரைவிளக்கபடத்தில் அடிகளை நீங்கள் கடந்து விட்டால் உங்கள் கணினியில் மணிமேனேஜர் வெற்றிகரமாக இன்ஸ்டால் ஆகிவிட்டது.

முதன் முதலாக மணிமேனேஜரை இயக்கும் போது எந்த மொழில் மொன்பொருள் மெனு (Menu) வேண்டும் என்று தேர்வு செய்ய வேண்டும். இதில் மகிழ்சியான செய்தி என்னவென்றால் மெனுக்கள் அனைத்தும் தமிழில் மாற்றி கொள்ளும் வசதி இதன் மூலம் மெனுக்கள் தமிழில் உங்கள் கண் முன்...

image

முதன் முதலாக மணிமேனேஜரை இயக்கும் போது உங்கள் கணக்கை துவங்க புதிய கோப்பை திறக்கவேண்டும் (New Database)

image

உங்கள் நாணய பரிவர்த்தனை விபரம் மற்றும் யுஸர் நேம் விபரங்களை பூர்த்திசெய்ய வேண்டும்.

image

image

image

புதிய கோப்பு திறந்த பின்பு நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் விபரம் (உதரணமாக இந்தியன் வங்கி, ஜசிஜசிஜ வங்கி, இந்திய இன்போ லையன், மற்றும் ஷேர்கான்) பெயர் மட்டும் தரவேண்டும்.

image

உங்கள் கணக்கு வகை என்ன என்பதை தேர்வு செய்யவும். வங்கி கணக்காக இருந்தால் காசோலை சேமிப்பு, பங்கு வர்த்தக கணக்காக இருந்தால் முதலீடு என்ற வகையை தேர்வு செய்யவும்.

image

உங்களுடைய கணக்கு எண், வைத்திருப்பு, கையிருப்பு விபரம் மற்றும் ஆரம்பத் தொகை பேன்ற விபரங்களை தரவும்.

image

உங்களுடை கணக்கு விபரம் தந்தவுடன் உங்கள் இல்லப்பக்கம் ரெடி.

image

மணிமேனேஜர் மெனுவை ஆங்கிலத்தில் மாற்ற கீழ் உள்ள திரைவிளக்கபடத்தை பார்க்கவும்.

image

image

மணிமேனேஜர் ஆங்கிலத்தில்....

image

இந்த மென்பொருளில் உள்ள சிறப்பு அம்சம் உங்கள் பங்கு பற்றி விபரம் பராமரிக்க முடியும் அது மட்டும் இன்றி இந்த மென்பொருள் தினசரி பங்கு வர்த்தக விலையை அப்டேட் செய்யவும் முடியும்.

image

இந்த மென்பொருள் முலம் நீங்கள் உங்க வங்கி கணக்கு மற்றும் முதலீடு விபரங்களை பதிவு செய்து உங்கள் சேமிப்பு மற்றும் செலவு விபரங்களை பராமரிக்க முடிவதுடன் திட்டமிட்டு வாழ உதவும்.

சரி சரி இந்த மென்பொருள் இலவசமா என்று கேட்டால் ஆம் என்பதே எனது பதில் எங்கு டவுன்லேட் செய்யால்....

image

For Windows 2000/XP/2003 Installer  Download from SourceForge.net

For Linux SuSE  Download rpm from PackMan repository

For Linux Ubuntu DEB i386-32bit Package (0.9.3.0)
Download from SourceForge.net

The File size is 2.38 MB.