Tuesday, October 28, 2008

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

  1. NHM Writer மென்பொருள்  Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.
  2. மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.
  3. இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன்  சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.
  4. வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.
  5. தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள்  மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.
  6. ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.
  7. ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.
  8. இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.

NHM Writer எவ்வாறு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி?

NHM Writer என்ற மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.

எவ்வாறு டவுன்லோட் செய்வது திரை விளக்கப்படம்.

Click here to download NHM Writer

image

உங்கள் கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய (NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யவும்.

பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

முதல் படி (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image

2ஆம் படி (Step 2)  இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image 

3ஆம் படி (Step 3) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
image

4ஆம் படி (Step 4)  இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image

5ஆம் படி (Step 5) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image

6ஆம் படி (Step 6) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்

image

பின்னர் மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்படும்.

image

NHM Writer யை எவ்வாறு பயன்படுத்துவது?

NHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar ரில் வலது மூலையில் மணி போன்ற image ஓர் குறியீடு (Icon) தெரிந்தால் NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம்.  இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும். 

தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு தேர்வு செய்வது?

நான் முன்பே கூறியது போல் நீங்கள் விரும்பும் தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்ய மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon)  உங்கள் மவுசை வைத்து இடது (Left) பட்டனை கிளிக் செய்தால், திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும். அதில் நீங்கள் விரும்பிய தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்யவும்.

image

தேர்வு செய்த பின்னர் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யமுடியும்.

மேலும் எளிதாக தமிழில் தட்டச்சு தேர்வு, செய்ய Alt Key மற்றும் 4 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

தமிழ் தட்டச்சுவிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key மற்றும் 0 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

செட்டிங்கை எவ்வாறு மாற்றுவது?

NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.

image

அதில் செட்டிங் என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் தெரியும். அதில் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகைக்கு மாற்ற உதவும் Alt Key மற்றும் எண்னை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம்.

image

தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு அறிந்து கொள்வது?

முதன் முதலில் தமிழில் தட்டச்சு செய்ய எந்தெந்த தமிழ் எழுத்து, தட்டச்சு பலகையில் எந்தெந்த பொத்தானில் உள்ளது? என்பதை அறிவது அவசியம்.

ஆகவே தான் உங்களுக்கு உதவியாக நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்கள் கண் முன் அந்த தட்டச்சு பலகையின் விளக்கப்படம் கொண்டுவர NHM Writer உதவி புரிகின்றது. அதற்கு நீங்கள், மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் போதும். திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.

image

அதில் On-Screen Keyboard என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும். 

image

நீங்கள் இதை வைத்து தட்டச்சு செய்யும் எழுத்து எங்கு உள்ளது என்பதை எளிதில் பார்த்து தட்டச்சு செய்ய முடியும்.

யா,ய்,யூ,யி,யீ போன்ற எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சு செய்வது?

எனக்கு தெரிந்தவரை தமிழில் தட்டச்சு செய்பவர்கள் ஆரம்பத்தில் பிரச்சனையாக கருதுவது மேற் குறிப்பிட்ட தமிழ் எழுத்துக்களை தான். அவற்றை தட்டச்சு செய்ய NHM Writer, Key Preview என்ற எளிய வழியை ஏற்படுத்தி உள்ளது. 

Key Preview என்ற திரையை பார்க்க மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.

image

அதில் Key Preview என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்

image

உதாரணமாக நீங்கள் a என்ற ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் அதற்கு ”ய” என்ற தழிழ் எழுத்து உங்கள் திரையில் விழும். நீங்கள் அந்த ”ய” என்ற தழிழ் எழுத்தை ”ய்” என்றோ, அல்லது ”யா” என்றோ மாற்ற விரும்பினால் "a;" அல்லது ah என்று தட்டச்சு செய்ய வேண்டும். உங்களுக்கு உதவியாக கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.

image

நீங்கள் இதை பார்த்து, எந்த ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் என்ன தமிழ் எழுத்து வரும் என்பதை நன்றாக அறிந்து செய்ய முடியும்.

இனி உங்கள் தமிழ் தட்டச்சு, தமிழை போலவே இனிதாக இருக்கும்! வளர்க இனிய தமிழ் மற்றும் இணைய தமிழ்!!!  

247 comments:

1 – 200 of 247   Newer›   Newest»
- யெஸ்.பாலபாரதி said...

நல்ல பதிவு. பல புதியவர்களுக்கு சிபாரி செய்யலாம். நிச்சயம் பயனுள்ள பதிவு தான்.

வாழ்த்துக்கள்

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

மிக அருமையாக நேர்த்தியாக பதிவிட்டுள்ளீர்கள்.

பயனுள்ள பதிவு.

Unknown said...

பாலபாரதி மற்றும் சுடர்மணி உங்களின் வருகைக்கு நன்றி... உங்களின் ஊக்கம் எனக்கு டானிக் மாதிரி உள்ளது...

HS said...

http://kelvi.net/?p=664

Good citizen said...

நீங்கள் விளையாட்டாக சொன்னது என்னை போன்ற களிமண்டைகளுக்கு உதவும் என்பதை மறந்து விட்டிர்களா?
ஆனால் எனக்கு இன்னும் ஆங்கிலத்தில் தட்டச்சி செய்து தமிழில் toggle செய்யும் முறை தெரியவில்லை கொஞ்சம் விளக்கமாக விளக்குவிர்களா? நான் இந்த கருத்தை சொல்ல வேருதலத்திர்க்கு சென்று டைப் செய்து பின் கோப்பி செய்து பின் இங்கு ஒட்டி உள்ளேன்

Unknown said...

உங்கள் கர்ஸரை நீங்கள் தட்டச்சுசெய் நிணைக்கும் இடத்தில் வைத்து Alt+1 Or Alt+2 or Alt+3 or Alt+4 என்ற எதாவது ஒன்றை அழுத்தி தமிழில் தட்டச்சுசெய்யவும் இன்னும் புரியவில்லை என்றால் மீண்டும் எழுதவும் முடிந்தவைரை உதவுகின்றேன்.

தென்றல் said...

வழ்த்துக்கள்.. பைஷல்.. தன்னலமற்ற சேவைக்கு வாழ்த்துக்கள். தனக்குத்தெரிந்ததை தெரியாதவர்களுக்கு சொல்லித்தருவதும் கூட தானம். கல்விதானம்.. இதற்காக பெரும் பொருட்செலவு ஏதும் இல்லைதான் உங்களுக்கு. ஆனால் இதைச் செய்ய யாரும் இல்லை என்பதே உண்மை. யாரும் இல்லையென்பதைவிட இங்கே சிந்திக்கக்கூட நேரம் இல்லையென்பதே நிசம். ஏனெனில் இங்கே தமிழன்மூளை என்றோ மலுங்கிப்பொய் விட்டது. நீங்கள் எங்கோ இருப்பதால் இதைச் செய்கிறீர்கள்.. நான் எங்கிருந்தோ தமிழகம் வந்து அவதியுருவதால் இதைச்சொல்கிறேன். தொடர்ந்து இப்படிப்பட்ட சேவைசார்ந்த பதிவுகளை அரங்கேற்றுங்கள்.வழிகேட்டுத் தவிப்போர் வழிகாட்டி மரம் பார்த்து அவரவர் இடம் போய்ச்சேரட்டும்.. பதிவுகள் தொடரும்...

top10shares said...

அருமையான பதிவு... கலக்கிட்டிங்க....

top10shares said...

அருமையான பதிவு... கலக்கிட்டிங்க....

pOSTmAN said...

ிரமாதம் FAISAL SIR. நன்றி.

"ICICI Direct மூலம் எவ்வாறு தின வர்த்தகம் செய்வது?"

மாதிரி...

வாழ்த்துக்கள்...

Google Transiteration is much better than this NHM for TYPING but it has some technical defect of something in terms of UTF-8, ANSI formats and POSTING on to WEBSITES.

Tech Shankar said...

thanks boss

Ram said...

மிகவும் அருமை. தொடரட்டும் உங்கள் தமிழ் தொண்டு ...

ஷண்முகப்ரியன் said...

Thank you MR.FAIZAL for your demonstrative NHM blog.I downloaded NHM WRITER but still I DONT KNOW HOW TO USE IT.Anyway வாழ்க உங்கள் தமிழ்த் தொண்டு.

Anonymous said...

அருமையான நல்ல பதிவு என்னை
போன்ற தமிழ் மட்டும் தெரிந்தவர்களுக்கு இது ஒரு வரபிசாதம்
புரியதவர்களுக்கும் சுலபமாக புரியும்
பதிவு
வாழ்க அவர்கள் அனைவரும்
வளர்க அவர்கள் சேவை

K.S.Nagarajan said...

அருமையான வழிகாட்டி.
நன்றி.

NHM Writer பக்கத்தில் உங்களின் இந்த பதிவிற்கான தொடுப்பை கொடுத்துள்ளேன். இதை PDF கோப்பாக எங்கள் தளத்தில் பதிவிறக்கிக்கொள்ள அனுமதி வேண்டும்.

K.S.Nagarajan
New Horizon Media.

Unknown said...

வருகைக்கு நன்றி திரு நாகராஜன்... PDF கோப்பாக வைத்து உங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கிக்கொள்ள எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.

riz said...

என்னுடைய்ய நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியதற்க்கு மிக்க நன்றி.....

தமிழ் ஆர்வமுள்ளவற்களுக்கு இந்தப் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....

வாழ்த்துக்கள்:)

Unknown said...

நண்பரே... நானும் NHM பற்றி என் தளத்தில் என் நடையில் ஒரு பதிவிட்டிருக்கிறேன். அதற்கு உங்கள் படங்களைப் பயன்படுத்தினேன். உங்கள் தளத்துக்கு இணைப்புக் கொடுத்து நன்றியும் செலுத்தியுள்ளேன். முன் அனுமதி கேளாமல் விட்டதுக்கு மன்னித்து விடுங்கள்

jhon3447 said...

ந‌ன்றி மிகவும் அருமையான பதிவு..

Unknown said...

திரு ரிஷ், ஜான், கீத் குமாரசாமி, வருகைக்கு நன்றி...

கீத் குமாரசாமி பரவாயில்லை மக்களுக்கு பயன்படதானே...

ரிஷி said...

மிக்க நன்றி சார்.
ஒரு சின்ன சந்தேகம். on screen keyboard நான் ரைட் கிளிக் செய்தேன் மானிட்டரில் தமிழில் வரவேண்டிய எழுத்துக்களெல்லாம் கட்டம் கட்டமாக வருகிறதே ஏன் கொஞ்சம் உதவ முடியுமா தயவு செய்து...காத்திருக்கிறேன்.

தொடர்புக்கு...
p.krishnan
yahoo pkrishnan143@yahoo.co.in
gmail pkrishnan143@gmail.com

BAVA said...

மிக்க நன்றி ...உங்கள் சேவை தொடரட்டும்..

ஹக் said...

தமிழை எளிமையாக உள்ளீடு செய்ய உபயோகமான மற்றும் உண்ணதமான பதிவு. நன்றி நன்பர்களே.

சம்மா said...

நல்ல பதிவு.. நிறைய நன்பர்களுக்கு சிபாரிசு செய்தேன்.. ரொம்ப நன்றி..

Unknown said...

hello sir,
is it possible to integrate NHM writer with any windows based application

thanks a lot

Ravi VS said...

When I type in word with Tamil Phonetic Unicode keymap I am getting squre boxes

Unknown said...

very beautiful work.thank u.

மரா said...

நல்ல பதிவு.சிறப்பாக செய்துள்ளீர்கள்.
நன்றி.

Unknown said...

மிக்க நன்றி ஃபைஜல். மிகவும் உபயோகம இருந்தது.

Unknown said...

SAN79 : NHM Writer எல்லா Windows Application உடன் இணைந்து பயன்படுத்த முடியும்.

VSR : if you are "getting squre boxes" Please enable regional language on your computer.

Krishnamurthi Balaji said...

எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை ! அருமையான மிகவும் உபயோகமான பதிப்பு ! உங்கள் அனுமதியின்றி ஃபேஸ்புக் இல் சேர்த்துள்ளேன் !

S B Ravi said...

மிக அருமையான மென்பொருள்....தமிழ் கணிணி பயணாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்..... மிக்க நன்றி...
இதில் எப்படி ஃபாண்ட் ஸ்டைல் மாற்றுவது?

ELANGO T said...

வணக்கம்!நாமும் தமிழில் எழுதி பார்ப்போம் என்று e-kalappai-யை தரவிறக்கம் செய்து எழுதிப் பார்த்தேன்.என்னவென்று தெரியவில்லை,திடீரென்று ஒரு வாரத்திற்குள்ளாக எனது கணிணியில் அது செயல் இழந்துவிட்டது.கூகிள் மூலம் இந்த கட்டுரையை படித்து NHM Writerஐ தரவிறக்கம் செய்து கொண்டேன்.இப்போது தமிழில் என்னால் தட்டச்சு செய்ய முடிகிறது.தங்களுக்கு மிக்க ந்ன்றி!

மஸ்தூக்கா said...

இவ்வளவு காலமாக எ கலப்பை தான் பயன்படுத்தி வந்தேன். இன்று தங்கள் பதிவு கண்டேன். உடனடியாக மாறிவிட்டேன். படிப்படியாக தாங்கள் விளக்கியுள்ள விதம் மிக அருமை. எமது தமிழ் இணைய நண்பனில் நன்றியுடன் தங்கள் பதிவுக்கு தொடுப்பு கொடுத்துள்ளேன்.
தமிழ் பதிவுலகில் தங்கள் தொண்டு பலருக்கும் பயனாக இருக்கும். பயன் பெற்ற தமிழ் நெஞ்சங்கள் தங்களை வாழ்த்தும். எம்மைப்போல்.

Punithan said...

நான் கடந்த பல மாதங்களாக Alt+4 உபயோகித்துத் பாமினியில் தட்டச்சுத் தமிழில் செய்து வருகிறேன். Office 2007ஐக் கணணியில் சேர்த்தபின் புதிதாக மெய் எழுத்துக்களுக்குப் புள்ளி போடும் பொழுது எழுத்துக்கள் சதுரங்களாக மாறுகின்றன. இதை எப்படி நிற்பாட்டுவது?

அல்லது MS Word Template யாரிடமாவது இருந்தால் தயவு செய்து தந்து உதவவும். நன்றி.

mathileo said...

நான் பல காலமாக தமிழைக் கணணியில் எவ்வாறு கையாள்வது என்று சிரமப்பட்டேன்
எனது பிள்ளைகளோ நான் கெஞ்சினாலும் கண்டு கொள்வது இல்லை. ஆனால் இன்று நான் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளேன்!

vengada said...

உங்கள் தமிழ்தொண்டிற்க்கு மிக்க நன்றி.கடவுள் என்ரும் உங்களுக்கு துனையிருக்கட்டும்.

Unknown said...

while typing I see ???? symbol instead of letters
, why whats the reason ?

Unknown said...

புள்ளி போடும் பொழுது எழுத்துக்கள் சதுரங்களாக மாறுகின்றன.

if you are "getting squre boxes" Please enable regional language on your computer.

நீங்கள் இவற்றை சரி செய்ய லாங்வேச் பாரில் தமிழ் என்று உள்ளதா என்று பார்க்கவும். இல்லை என்றால் லாங்வேச் பாரில் தமிழை தேர்வு செய்யவும். அப்படி உங்கள் கணினியில் லாங்வேச் பாரில் இல்லை என்றால் கீழ் தரப்பட்டுள்ள முறையில் சரி செய்து கொள்ளவும்.


Method 1:
Right click on the Taskbar and go to toolbars. If Language Bar option is there check it by clicking it. and you will get Language Toolbar.

Method 2:
Go to Start menu > Control Panel > Regional and Language Options > Languages Tab > Text Services and Input Languages Box> Details… > Settings Tab > Preferences Box > Language Bar…
Now tick the option “Show Language bar on desktop” and you will get Language bar on your task bar.

http://blog.vishalon.net/index.php/how-to-enable-windows-xp-language-toolbar/

hussain said...

உங்களின் முயற்சியைப் பாராட்டுகிறோம் ஆனால் சில குறைபாடுகள் இருக்கின்றன அவற்றையும் நிறைவேற்றினால் நன்றாக இருக்கும் அதாவது

பாமினி யில் து, தூ, நு, நூ, இவற்றை டைப்பிங் செய்ய முடியவில்லை இவ்வளவெல்லாம் செய்த உங்களுக்கு ஏன் அந்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய முடியவி்ல்லை அவற்றையும் நிவர்த்தி செய்தால் நன்றாக இருக்கும்.

அதிரை தங்க செல்வராஜன் said...

நன்றி, உபயோகமான உதவி.

அன்புடன்
அதிரை தங்க செல்வராஜன்

Ravi VS said...

Thanks. I am still having the problems. I am still getting the square boxes. I could not able to resolve this issue. How to "enable regional language on my computer"

Please explain clearly

Veejay said...

மிகவும் பயனுள்ள பயன்பாடு. இதை தயாரித்த குழு உறுப்பினர்களுக்கும், நிறுவனத்திற்கும், இதை இலவச பதிப்பாக்கிய எல்லா நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

இதை லினக்ஸ் உபயோகத்திற்கும் தயார் செய்வீர்களா?

Gowri said...

மிக்க நன்றி. நேர்த்தியான விளக்கங்களுக்கு எனது பாரட்டுக்கள். ஒரு சந்தேகம் - Srinagar, Srirangam - இவற்றில் உள்ள ‘Sri'க்கு இணை என்ன? ஏதேனும் உள்ளதா ?? மீண்டும் எனது பணிவான நன்றிகள்.

கௌரி ஷங்கர்

Pragash said...

வணக்கம் ஃபைசல்! நானும் புதிதாக சமீபநாட்களாக தான் இந்த எழுதியை பயன்படுத்தி வருகின்றேன். சில சமயங்களில் தமிழ் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் பொழுது சில எழுத்துக்கள் அல்லது புள்ளிகள் வைக்கும் பொழுது அந்த இடங்களில் வட்டம் தோன்றுகிறது. சாிபண்ண முடியுமா? தாங்கள் ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று லாங்வேஜ் பாாில் தமிழை தொிவு செய்த பின்னரும் இந்த நிலை தொடா்கின்றது. இந்த பின்னுாட்டத்திலும் இந்த பிரச்சனையை அவதானிக்கலாம். மற்ற படி எந்த குறைகளுமற்ற அற்புதமான எழுதி இது. மிகவும் வசதியாக உள்ளது.

Unknown said...

மிக்க நன்றி.

Unknown said...

மறைந்த்து

என்று டைப் செய்தால் “ த் ” புள்ளியோடு வருகிறது இதை சரியாக எப்படி டைப் செய்ய வேண்டும்

Unknown said...

Gowri


To USe ஸ்ரீ = sri
ஸ்ரீரங்கம் = sriraGkam ( use ShiftG For ங் )

ஸ்ரீநகர் =sriwakar (use w for ந் )

Unknown said...

To Prakash ( Answer)
தாங்கள் பயன் படுத்திய வார்த்தைகள்
ஏற்கனவே ஒரு முறை டைப் செய்ததாக இருக்கும் ஆகவே வட்டம் தோன்றுகிறது . நீங்கள் திரும்ப அதே வார்த்தையினை பயன் படுத்த ஆரம்பிக்கும் போது Space bar தட்டி விட்டு ஆரம்பியுங்கள்
தங்கள் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும்
சந்தேகங்கள் இருந்தால் என்னுடன் தொடர்பு கொள்ளவும் fairyebi@gmail.com

Unknown said...

Faizal

மறைந்தது என்று Excel ல் டைப் செய்யும் போது அது மறைந்த்து என்று காட்டுகிறது ” த் “ புள்ளியோடு உள்ளது. இதை எப்படி சரி செய்ய ???
தயவாய் இதற்கு பதில் அளிக்கவும்
இப்படிக்கு
fairy

Unknown said...

Fizal

மிக்க நன்றி
மறைந்தது என்று டைப் செய்ய
Latha என்ற font ஐ உபயோகப் படுத்த வேண்டி உள்ளது .
Latha Font பயன் படுத்தினால் இதல் பிரச்சனைகள் தீர்கிறது .

Unknown said...

ஒளவையார்

என்பதில்
ஒள
எவ்வாறு டைப் செய்ய வேண்டும் .

pathykv said...

Is this usable to type Devanagari with short e and short o ?
Pathy

Vediyappan M said...

vanakkam. nanraaka iyangki kondiruntha nhm ippothu iyanka marukkirathu. icon varamarukkirathu. puthithaaka download seithalum retrai enru varukirathu. enna seivathu?

Vediyappan M said...

vanakkam. nanraaka iyangki kondiruntha nhm ippothu iyanka marukkirathu. icon varamarukkirathu. puthithaaka download seithalum retrai enru varukirathu. enna seivathu?

karthik15 said...

ICICI Direct மூலம் எவ்வாறு தின வர்த்தகம் செய்வது?"

karthik15 said...

ICICIDirectமூலம்எவ்வாறுதின வர்த்தகம் செய்வது?"

Saamy said...

How can we make NHM writer compatiable with chrome browser? Please suggest.

Unknown said...

Mr.Kumarasamy I am using with chrome browser do have any problem... use Alt+F4 key when you are in the browser....

Saamy said...

மிகக நனறி. திரு. பாசல.

Saamy said...

மிகக நனறி. திரு. பாசல.

Unknown said...

Very good job and thanks. If you can develep a program to learn how to type some thing like typing tuter that will be great.

சிறியவன் said...

அருமையான உதவிகரமான பதிவு. நன்றி பல.

Jaleela Kamal said...

ரொம்ப நன்றி,

நன்றிகள் பல

டைப்பிங் ரொம்ப சிரமப்ப்ட்டு பல குறிப்புகள் கொடுத்து கொண்டு இருந்தேன், ஆனால் இபப் பத்து நாட்களுக்கு முன் தான் இந்த பிளாக் என் கண்ணில் தென்பட்டது,

டவுண்ட் லோடு செய்வதை சுலபமான முறையில் ஈசியாக போட்டு இருகீங்க.

மிக்க நன்றி

Selvam said...

Some time when i type only ? marks is shown in the screen. I uninstall the NHM and reinstall to get out of this problem. Why this is happening?
ow to solve this problem?
R.Selvam.
organicerode@gmail.com

Anonymous said...

மிக்க நன்றி ஃபைஜல். இன்று நான் உய்வுற்றேன்.

அன்புடன் சுந்தரவேல்

Gokul nath said...

நல்ல பதிவு தமிழில் தட்டச்சு செய்யத்தெரியாதவர்களுக்கு மிகவும் உதவும்.....

Fawzdeen said...

அருமை நன்பரே ...
வாழ்த்துக்கள்.தொடரட்டும் உமது பனி..

Muhammadhu Saabir said...

இவ்வளவு காலமாக இப்படி ஒரு எழுதியைத் தான் தேடிக் கொண்டிருந்தேன். இனி இணையத்தில் தமிழ் ஆக்கங்கள் நிறைய எதிர்பார்க்கலாம். என்னடமிருந்தல்ல... நிறைய எழுத ஆவலுள்ள, தமிழில் தட்டசசு செய்துகொள்ள முடியாமலிருந்தவர்களிடமிருந்து...
அருமையான எழுதி.
இதைப் பயன்படுத்தும் போது ஒரு குறையினைக் கண்டேன். தயவு செய்து அவசரமாகத் திருத்தி தரவும்.
அதாவது... வந்தது என வேர்ட்2007 டைப் பண்னும் போது ”து” அடித்ததும் ”வந்த்து” என மாறுகிறது.
திருத்தித் தந்தால் அதிகம் பயன் பெறலாம்.
நன்றிகள் கோடி.....

Unknown said...

this is very very useful page to all.

ꢦ꣄ꢬꢨꢸ பிரபு.. said...

Faizal,
இந்த எழுதி மிக எளிதாக உள்ளது. ஒவ்வொருமுறை Copy&Paste செய்வதை தவிர்க்க முடிகிறது. சில பயன்பாடுகளுக்காக நான் NHM Writer இல் சௌராஷ்டிரா மொழியினை இணைக்கும் முயற்சியில் உள்ளேன். முயற்சிக்கையில் சில இடர்பாடுகளைச் சந்தித்து வருகிறேன். அவை பின்வருவன. உங்களுக்கு இவை தீர்ப்பது எப்படி எனத் தெரியுமா?
1. ஒரு முறை நான் Import செய்த key-map நீக்க முடியவில்லை. எழுதியை uninstall/re-install செய்தும் பார்த்தேன். எப்படி நீக்குவது என்று தெரியவில்லை.
2. key-map import செய்யும் பொழுது 'integrity check failed" என்ற பிழை வருகிறது. விவரம் என்ன என்று தெரியவில்லை. முதல் இடர்பாடால் இந்த பிழையா என்று தெரியவில்லை.

விவரம் தெரிந்தால் தெரிவிக்கவும் அல்லது mooreprabu@gmail.com என்ற எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
நன்றிகள்

Venkatesan said...

Sir, Has this got any incompatibility with Windows 7? Because, even after installing, I have not got the Bell symbol on the task bar. Any suggestions? Thanks. Venkatesh.

Unknown said...

Hi Venkatesh,

Well I test on windows 7 on 32bit and 64bit both working good

Will you find the NHM folder there in programs file if yes pls click and run your program and then giro setting check the option for run when windows start is checked.

If not pls. let me know...

Unknown said...

Hi Muhammadhu Saabir,

1. To Remove key-map go to C:\Program Files\NHM Writer\Data and delete/move your key-map file which will not appear anymore on keymap list

2. Please sent me your key map file i will try and let you know how to resolve....

Unknown said...

Hi Faizal,
You are doing yeomen service to Tamil and Tamil community, God Bless you.
I am unable to access your ''on line NHM converter''

This is the message I get.....

''Access denied
You are not authorized to access this page.''

Will you pl clarify?

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

Hi Jasmin love,

Not sure which page you access to download the converter given below the link i just tested it working fine.... please try to access the direct link and let me know

http://software.nhm.in/sites/default/files/NHMConverterSetup.exe

http://software.nhm.in/products/converter

By the way most of them miss understand that i was the one created the software Please note that the software created by New Horizon Media i just only provide help document

Unknown said...

Hi Faizal,

Thanks for the prompt reply. I admire and appreciate your simplicity especially when you do not take credit for what you are doing.
This is the link I used to tap to convert texts to desired Fonts 'on line' till as late as last week- - from which even now I get this message "Access denied
You are not authorized to access this page."
Will you kindly check?

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

The link was left out.....here is the link through which I was getting texts converted 'on line'....
http://software.nhm.in/services/converter

akkuraan tamil said...

அருமை ஃபைசல்,
அழகி சாஃப்ட்வேர் பயன்படுத்தி கொண்டிருந்தேன் திடீரென்று ஏனோ இயலவில்லை இந்த சமயத்தில் இன்று இதனை கண்ணுற்று உடனே டவுன்லோடு செய்தேன். பயன்படுத்த எளிமையாக இருக்கிரது. நன்றி! ஆனால் MS Office word excel, powerpoint போன்றவைகளுக்கு எவ்வாறு போவது என புரியவில்லை. விளக்குவீர்களா?
அன்புடன்
ஆக்கூர் நிஜாமுதீன்

Unknown said...

அன்புள்ள நிஜாமுதீன்,

இப்பக்கத்திற்கு முதலுள்ள பக்கத்தைப் பார்க்கவும்;6 ஆவது படி உதவிக் கூற்றுகளைப் பார்கவும். அதற்குப்பிறகுமுள்ள உதவிக் கூற்றுகளைப் படித்துப் பயன் பெறவும். நான் இச்செய்தியினை இந்தப் பதிவினைப் பயன்படுத்தியே எழுதியுள்ளேன்

RAJA srirangam trichy said...

thank you

MR said...

நண்பர் Faisal அவர்களே! உங்கள் மென்பொருள் மிகவும் பயனுள்ள ஒன்று. நான் முரசு, கூகிள் பொன்ற பல மென்பொருள்களை உபயோகித்திருக்கிறேண். உங்கள்து மிகவும் தலை சிறந்த ஒன்று. உங்களது தன்னலமற்ற சேவைக்கு, உலகத் தமிழ் மக்கல் சார்பில் என் நன்றி. தமிழ்த்தாய் உங்களுக்கு நோயற்ற ர வாழ்வும் நிரைந்த செல்வமும் அருள்வாள்.

dualplanet said...

மிகவும் பயனுள்ளதாக இருந்தது.... உங்களுக்கு மனமார்ந்த மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...... நான் இவ்வளவு காலமாக கற்ற தமிழ் தட்டச்சு பயனளிக்கவில்லை என்ற கவலையில் இருந்த போது, உங்கள் வலைப்பூவைப் படிக்க நேரிட்டது...... மற்றவர்களின் கவனத்திற்கு, இந்த NHM WRITTER/ல் பல யூனிகோட்டை கொண்டுள்ளது..... இப்பொழுதைய புதிய பதிப்பில் ஐந்து முறையான யூனிக்கோட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது....... இதனை தட்டச்சு தெரிந்தவர்கள், தெரியாதவர்களும் கூட பயன்படுத்தலாம்..... இதில் தமிழ் 99(Tamil 99 Unicode)என்ற தட்டச்சு விசைப் பலகை,ஆங்கிலம் மூலம் தமிழ் தட்டச்சு செய்தல்(Tamil Phonetic Unicode), பழைய தட்டச்சுப் பொறி விசைப் பலகை(Tamil Old Typewriter Unicode),புதிய தட்டச்சுப் பொறி விசைப் பலகை(Tamil Bimini Unicode),விண்டோஸ்/7 ல் உள்ள தமிழ் தட்டச்சு பொறி(Tamil Inscript Unicode)என ஐந்து வகையான விசைப் பலகைகள் உள்ளன..... தேவையானதை பயன்படுத்திக் கொள்ளலாம்......

வேலன். said...

நண்பருக்கு,
நலம்.நலமறிய ஆவல். உங்கள் ரைட்டரை சமீபகாலமாக பயன்படுத்திவருகின்றேன்.தற்போது எனக்கு பு -கீழே கொம்பு வர மாட்டேன்என்கின்றது.ய உடன் + அழுத்தினாலும் வரவில்லை.என்ன செய்வது? பதிலை எதிர்பார்த்து.
வாழ்க வளமுடன்,
வேலன்.

Myspace Marketings said...

நன்றி

subadra18 said...

Mr Faizal,

I have some comments for your response.
1) There is no contact details for me to communicate with you.
2) Visual keyboard option not
in the option list when Right Click the software. When I open word or any other document the keyboade is hidden. The keyboard has to remain when I perform other actions until I disable/close.

subadra18 said...

Mr Faizal,

I have posted my comments for your response. My email address is elephant18@gmail.com. Kindly repond with details

TY

Suba

Unknown said...

Dear Readers, Any software related issues / bug / upgrade / suggestion please contact software@nhm.in

Mathivanan said...

வணக்கம். நானும் இந்த nhm writer ஐ பல நாட்களாக உபயோகித்து வருகிறேன். ஆனால் FINAL DRAFT போன்றவற்றில் இந்த மென்பொருள் சப்போர்ட் பண்ண மாட்டேன் என அடம் பிடிக்கிறது. உங்களுக்குத் தெரிந்த வேறு ஏதாவது மென்பொருள் FINAL DRAFT SCREEN WRITER ஐ சப்போர் பண்ணுமா.. இருந்தால் எனக்கு உதவுங்களேன்

Unknown said...

i cannot download it...plz temme.. silverhorn_7blade@yahoo.com is ma id...

rithikaprinters said...

வாழ்த்துக்கள்....

rithikaprinters said...

வாழ்த்துக்கள்....

இந்தியன் said...

இது போன்ற ஒரு மென்பொருளைதான் தேடி கொண்டிருந்தேன். இதை உருவக்கிய கைக்கு தங்க காப்பு போட வேண்டும்.

K.S.Nagarajan said...

//Allwin said...

இது போன்ற ஒரு மென்பொருளைதான் தேடி கொண்டிருந்தேன். இதை உருவக்கிய கைக்கு தங்க காப்பு போட வேண்டும்.//

Please send the "தங்க காப்பு" to me :-)

K.S.Nagarajan
Manager - Software Products

New Horizon Media Private Limited
33/15 Eldams Road, 2nd Floor
Alwarpet, Chennai 600 018
Ph: +91-44-4200-9601/03/04
Mail : software@nhm.in

varagan said...

நான் இது போன்ற மென் பொருளைத் தான் இவ்வளவு நாளாய் தேடிவந்தேன்

(இரண்டு வருடங்களாய்)
பல தமிழ் வலைமனை சென்று அலைந்தது தான் மிச்சம் பலன் இல்லை.

இன்று எனது ஆசை நிறைவேறி விட்டது.

பதிவேற்ற வேறு தலங்கள் சென்று பாமினியில் தட்டச்சு செய்து பின் copy செய்து பின் paste செய்து பயன்படுத்தி வந்தேன்.

நல்ல பதிவு

தங்களுக்கு என் போன்ற கம்யுட்டர் அறிவு இலலாதவர்களுக்க இது ஒரு வரபிரசாதம.

நன்றி

வராகன்.

rithikaprinters said...

ந‌ன்றி

தகப்பன்பிள்ளை said...

windows 7இல் பயன்படுத்த இயலாதா?

Unknown said...

தகப்பன்பிள்ளை நான் வின்டோஸ் 7 (32 bit/62bit) இரண்டிலும் பயன்படுத்துகின்றேன் (I reply using Windows 7) மேலும் Office 2010 வேலை செய்கின்றது.

K.S.Nagarajan : தங்க காப்பு போட வேண்டும் என்றவுடன் பதறியடித்து ஓடிவந்து பதில் பதில் மொழி தந்த நீங்கள் கேள்விகளுக்கும் பதில் தந்தால் நன்றாக இருக்கும்

Allwin / Balaji / Varagan Thanks for your comments the credit goes to New Horizon Media Private Limited i just come up with article how to use it.

K.S.Nagarajan said...

Faizal : That was just a kidding comment. :-) I hope you are taking it sportively. As far as we are concerned, you are doing an excellent job by having written this post and continuing to guide the users of NHM Writer. Thanks

dualplanet said...

// நண்பருக்கு,
நலம்.நலமறிய ஆவல். உங்கள் ரைட்டரை சமீபகாலமாக பயன்படுத்திவருகின்றேன்.தற்போது எனக்கு பு -கீழே கொம்பு வர மாட்டேன்என்கின்றது.ய உடன் + அழுத்தினாலும் வரவில்லை.என்ன செய்வது? பதிலை எதிர்பார்த்து.
வாழ்க வளமுடன்,
வேலன். //


வணக்கம் திரு. வேலன் வலைப்பூவாளரே தன் உங்களின் உடைய வலைப்பூ வாசகர் தினம் தினம் உங்களின் வலைப்பூவிற்கு வந்து செல்வேன். சரி, விடயத்திற்கு வருகிறேன்..... நீங்கள் இந்த மென்பொருளில் பாமினி யூனிகோட் உபயோகிக்கிறீர்கள் என நினைக்கிறேன்.... நீங்கள் shift+plus sign keyயை அழுத்தவும்..... இப்பொழுது யூ என சரியாக வரும். பூ-என தட்டச்சு செய்ய அதே போல் முயற்சிக்கவும்..... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.... வேலன் அவர்களே

dualplanet said...

// நண்பருக்கு,
நலம்.நலமறிய ஆவல். உங்கள் ரைட்டரை சமீபகாலமாக பயன்படுத்திவருகின்றேன்.தற்போது எனக்கு பு -கீழே கொம்பு வர மாட்டேன்என்கின்றது.ய உடன் + அழுத்தினாலும் வரவில்லை.என்ன செய்வது? பதிலை எதிர்பார்த்து.
வாழ்க வளமுடன்,
வேலன். //


வணக்கம் திரு. வேலன் வலைப்பூவாளரே, நான் உங்களினுடைய வலைப்பூ வாசகர் தினந்தோறும் உங்களின் வலைப்பூவிற்கு வந்து செல்லாமல் இருக்கவேமாட்டேன். மேலும் உங்களின் வலைப்பூவில் இருந்து நான் உபயோகப்படுத்தும் மென்பொருள்கள் மற்றும் சில நற்கருத்து கட்டுரைகளை நான் பார்த்து படித்து தெரிந்து கொண்ட விடயங்கள் நிறையவே இருக்கின்றன..... சரி, விடயத்திற்கு வருகிறேன்..... நீங்கள் இம் மென்பொருளில் பாமினி யூனிகோட் உபயோகிக்கிறீர்கள் என நினைக்கிறேன்.... நீங்கள் shift+plus sign keyயை அழுத்தவும்..... இப்பொழுது யூ என சரியாக வரும். பூ-என தட்டச்சு செய்ய அதே போல் முயற்சிக்கவும்..... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.... வேலன் அவர்களே...... அப்புறம் ஒரு செய்தியை மறந்துவிட்டேன். நான் அன்றுமட்டும் இம்மென்பொருளை பார்க்கவில்லையெனில், மேலும் பற்பல தமிழ் தளங்கள் பார்வையிட நேராமல் போயிருக்கும். அதற்காக nhm-writer குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...... மன்னிக்கவும், nhm-writer குழுவினர் அவர்களே, என்னால் தங்க காப்பு எல்லாம் வாங்கி போட முடியாது அதற்காக......

rithikaprinters said...

வாழ்க வளமுடன்............நன்றி வேலன் அவர்களே ...

Unknown said...

அருமையான படைப்பு

வலையுகம் said...

மனிதனுக்கு நன்றி செலுத்ததவன்
இறைவனுக்கு நன்றி செலுத்துவதில்லை
(முஹம்மது நபி ஸல்)
நன்றி நண்பர் பைசல்

வலையுகம் said...

மனிதனுக்கு நன்றி செலுத்ததவன்
இறைவனுக்கு நன்றி செலுத்துவதில்லை
(முஹம்மது நபி ஸல்)
நன்றி நண்பர் பைசல்

வலையுகம் said...

மனிதனுக்கு நன்றி செலுத்ததவன்
இறைவனுக்கு நன்றி செலுத்துவதில்லை
(முஹம்மது நபி ஸல்)
நன்றி நண்பர் பைசல்

Anonymous said...

I Use regularly this software an excellent experience. Thx for instructions.

kalai said...

மிக்க நன்றி மிகவும் பயனுள்ள தகவல்,எனக்கு இந்த தகவலை என் நண்பன் தந்தான். நன்றி நன்றி!

prakashkumar said...

மிக்க நன்றி மிகவும் பயனுள்ள தகவல்,எனக்கு இந்த தகவலை என் நண்பர் தந்தார். நன்றி நன்றி நன்றி!

அ மயில்சாமி said...

மிகவும் நல்ல மென்மொருளாக உள்ளது.சிறப்பான செயல்பாட்டிற்கு நமது நன்றிகள்

mahesh said...

நீங்கள் கொடுத்த தகவலை வைத்து இந்த வாழ்த்து. மிக்க நன்றி மிகவும் பயனுள்ள தகவல்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அன்பு ஃபைசல்,
தங்களின் விளக்கம், விரிவாக, சுலபமாக
உள்ளதுடன் மிக்க பயன் தரும்வகையில்
இருக்கின்றது.
உங்களுக்கும் NHM குழுவினருக்கும்
நன்றிகள்!

Unknown said...

அருமையான பதிவு. மிகவும் மகிழ்ச்சி.

அன்புடன்.
கீழை முஹம்மது இபுனு

Unknown said...

nalla muyarcchi, thodarattum ungal pani. ennudaiya santhegam ennavenil,
nann type seidha pakkangalai, thannudaiya computeril tamil font load seyyadhavargal, paddippadhu mudiyuma, enakku type seivadhu oru problemaga theriavillai. aanal, avatrai mattravargalai, padikka seivadhuthan siramamaga irrukkiradhu. idharku enna seiya vendum?...R.Kumaraswamy, Avadi,Chennai

ம.தி.சுதா said...
This comment has been removed by the author.
மலர்விழி பாஸ்கரன் said...

I am already using a transliteration software but recently I lost my regional settings options during formatting my system.
Now I cannot use it. Luckily I got to know about NHM and it did take the unicode without even asking for a windows cd.
Now I am stuck with a doubt on how to do the usual transliteration in MSword.

When I type 'amma' in english with 'latha' as font, i am not getting amma in tamil but arraa o something like that.
Can you fix my problem. please???

Unknown said...

Hi Malarvizhi,

Thanks for dropping me note. Yes you can do that by pressing Alt+2 keys or Left click your mouse on Bell icon and select the options (Alt+2 Phonetic ) which will help you type ammaa system will display அம்மா

Unknown said...

Dear Ramu Kumaraswamy,

This reply is to respect your interest on Tamil and keeping your learning sprint at this age.

If I understand correctly your questions. Yes, you can type Tamil without adding any additional fonts in to your computer. The same things happen when other read your text.

Hopes this clear doubt.

Venkatesh subramanian said...

Nhm வசதியை தான் பயன்படுத்தி வருகிறேன் அதற்கு முதலில் எனது நன்றி. ஆனால் ஒரு பெரிய பிரச்சனை நான் வேலை செய்யும் இடத்தில் தமிழில் டைப் செய்தபிறகு Font மாற்ற சொல்கிறார்கள் அதை மாற்ற இயலவில்லை. அதற்கு ஏதேனும் தீர்வு உள்ளதா.

Unknown said...

Hello Mr. Faizal, At the outset i really appreciate your sincere effort in bringing up such a useful application.

I am not very familiar in typing Tamil letters..as such i just want to type the tamil words in english keys which is to be appeared on the screen in tamil letters

e.g) tying "eppadi irkinga" should come in Tamil words exaclty as we normlaly type in mobile sms.

Please help. it would be very great favor for me.

thanks in advance

Augustin5 said...

நன்றி.

Unknown said...

மிக்க நன்றி நண்பரே!
உங்கள் சேவைக்கு..!

அப்துல் நசீர் said...

I would like to instal NHM writer on my Mac mini. Highly appreciate if you could provide the link in .dmg format of your NHM writer to install on my mac mini.

Abdul Naseer
Kuwait

அனுஷா said...

வணக்கம்,

நான் NHM writer phonetic Unicodeஐ பல நாட்களாக பயன்படுத்தி வருகிறேன். ஆனால் yahoo groups postல் தமிழில் தட்டச்சு செய்து post செய்தால் ஏதேதோ weird characters தான் வருகிறது. என்ன பிரச்சினை என்று விளக்க முடியுமா..

Bhupathi said...

மிக்க நன்றி.

Unknown said...

நன்றி நன்றி தகவலுக்கு.

ginglee said...

அருமை....மிக்க நன்றி

peak said...

மிக்க நன்றி

தாராபுரத்தான் said...

நானும் இதைத்தான் பயன்படுத்தி வருகிறேன்ங்க.

Mathi said...

அன்புடையீர்,

தங்கள் NHM எழுத்துருவை, எனது கணினியில் பதிவு இறக்கம் செய்து கொள்ள என்ன வ்ழி முறைகள்? இது "யூனிகோடு" முறையில் நேரிடையாக, மின்-அஞ்சல் அனுப்பவோ, MS WORD வழியே நண்பர்களுக்கும் அரசுத்துறைக்கும் தமிழ் வழிக் கடிதம் அனுப்ப இயலுமா?
அக்கடிதம், அவர்கள் படிக்க வசதியாக தோற்றம் தருமா?
எனக்கு விளக்கமாக தெரிவிக்கவும். நன்றி.
எல்.கே.மதி,
mathiniraichelvan@gmail.com
September 4, 2011

Mathi said...
This comment has been removed by the author.
Unknown said...

1. தங்கள் NHM எழுத்துருவை, எனது கணினியில் பதிவு இறக்கம் செய்து கொள்ள என்ன வ்ழி முறைகள்?
http://software.nhm.in/products/writer Please click this link and download the software, follow the steps based on my blog post.

2. இது "யூனிகோடு" முறையில் நேரிடையாக, மின்-அஞ்சல் அனுப்பவோ, MS WORD வழியே நண்பர்களுக்கும் அரசுத்துறைக்கும் தமிழ் வழிக் கடிதம் அனுப்ப இயலுமா?

Yes, This is based on Unicode. You can type and send email also you can you Word, Excel and PowerPoint. (Please note that other system must support Unicode) what i knew that, Windows 7, XP, 2008 R2, Mac OS, iOS, iPhone, iPad, iPod Touch and Samsung, LG Smart TV supported Unicode and you can view the this Tamil Text, (Android OS not supported yet).

Hope above info. Helps you.

Regards
Faizal

Ashokan S said...

நல்லது நண்பரே. அருமையான முயற்சி. மிகவும் சிரத்தை எடுத்து படத்துடன் விளக்கியுள்ளீர்கள். உங்கள் அக்கறை பாராட்டுதலுக்குரியது.
நான் ஆக்கூரில் (திருக்கடையூர் அருகில்) பிறந்தவன்.

S. Chandrasekar said...

kapaliswarar - ithil rar eppadi type sevathu. please help.

reka said...

நல்ல முயற்சி.பாராட்டுக்கள்

siva said...

ஸ்ரீ என்ற எழுத்து தழ்மி போனடிக் யுனிகோடில் எப்படி டைப் செய்வது என கூறவும். பதிலை ஒரு நகல்
sivakumar.shivakumar@gmail.com என்ற முகவரிக்கு தயவு செய்து அனுப்பவும்.

Unknown said...

Hi Siva,

Please type "sri" in order to get ஸ்ரீ for help use key preview which helps you to type fast and easy.

semban said...

இவ்வளவு நாள் இகலப்பை பயன்படுத்ஹ்டி வந்ததால் டைப் செய்ய எளிதாக உள்ளது.நன்றி

lossstvmalai said...

Goodmng,

I am K.Raja, O/o Labour Officer (SSS) Tiruvannamali

How to install NHM Writer in my Linux -os give me an idea to install

thanking you

Warm regards,
Raja.K

immadisetti arun said...
This comment has been removed by the author.
immadisetti arun said...

can we type tamil in pagemaker, indesign, and corel draw....?...please let me know

Dr. Thay Soma said...

Hello,

I have been using NHM Writer 1.5.1.1 for at least two years (WinXP/Win7) with Word (2003/2007). Since last week it stopped working and I am unable to get the Tamil characters in Word or browser. I restarted the computers, reinstalled the program to avail. It is likely an upgrade to Windows s/w may have crated some problems. Any suggestion will greatly be appreciated. Thanks.

பிரகாஷ் said...

நல்ல பதிவு. பல புதியவர்களுக்கு சிபாரி செய்யலாம். நிச்சயம் பயனுள்ள பதிவு தான்.

வாழ்த்துக்கள்

பிரகாஷ் said...

நல்ல பதிவு. பல புதியவர்களுக்கு சிபாரி செய்யலாம். நிச்சயம் பயனுள்ள பதிவு தான்.

வாழ்த்துக்கள்

pasupasu said...

my best wishes

pasupasu said...

my best wishes

Shanmugam said...

msword ல் எவ்வாறு பயண்படுத்துவது

3S4U said...

Dear Mohd. Faizal,

First of all I wish to convey my BIG thanks to you. I am a story/script writer. I am searching for a Tamil writer with which I can write and "just" upload straightaway in UNICODE without having to convert it as the text contains some English characters also. Till now I am using a free CD containing Indian language fonts, but as it asked for WINDOWS XP INSTALLER CD I was about to buy it. I've downloaded and yet to install and my next post will be in TAMIL.

My doubt is "Is there any other Tamil UNICODE font available other than Latha?"

If you know and post the website address it will be of great help.

Thanx again,

$ridhar $rinivasan
ssrrii@gmail.com

Unknown said...

$ridhar $rinivasan

எனக்கு தெரிந்த வரை லதா மட்டுமே Unicode font.

shanmugam R : To use in MSWORD just goto word and press Alt +4 which help you to type in tamil, when want to type English, Press Alt+4 again.

Messhvina said...

அனைவருக்கும் ஏற்ற சிறப்பான மென்பொருள்.


வாழ்த்துகள்!

Messhvina said...
This comment has been removed by the author.
Bharani said...

இந்த சாப்ட்வேர் விண்டோஸ் 98 ல் செயல்படுத்த முடியுமா அல்லது வேறு சாப்ட்வேர் உள்ளதா ????

Ashokan S said...

ka paa lii shift+s wa ra r = கபாலீஸ்வரர் Or ka p Shift+a shift+l shift+s va ra r.This comment for Mr.S. Chandrasekaran- Dr. S Ashokan

BLESSON said...

அருமை....மிக்க நன்றி

MURUKESAN said...

super

Balu said...

என்.எச்.எம் ரைட்டர் யூனிகோட் எழுத்துரு டைப் செய்ய நன்றாக இருக்கிறது. எனக்கு 2 சந்தேகங்கள் உடன் தீர்த்துவைத்தால் நன்றிகள்.

1. நான் டைப்ரைட்டர் விசைப்பலகையை பயன்படுத்துகிறேன். இதில் து, லு, போன்றவற்றின் நெடில் எழுத்துக்களை டைப் செய்ய இயலவில்லை.
2. பக்கம், மச்சம் போன்ற பதங்களை டைப்செய்யும் போது பக்க்ம், மச்ச்ம் என்று வருகிறது ,
இரண்டும் சரி செய்ய என்ன செய்யவேண்டும்.

பாலமுருகன். திருவண்ணாமலை

rifasil said...

ஆகா...........நல்ல விருந்து ....நல்ல விருந்து...எனக்கு இவ்வளவு காலமாக இருந்த பிரச்சினைக்கு இன்றுதான் கிடைத்தது முடிவு.. ரொம்ப ரொம்ப நன்றி....மிக்க அருமை...

rifasil said...

ஆகா...........நல்ல விருந்து ....நல்ல விருந்து...எனக்கு இவ்வளவு காலமாக இருந்த பிரச்சினைக்கு இன்றுதான் கிடைத்தது முடிவு.. ரொம்ப ரொம்ப நன்றி....மிக்க அருமை...

rifasil said...

ஆகா...........நல்ல விருந்து ....நல்ல விருந்து...எனக்கு இவ்வளவு காலமாக இருந்த பிரச்சினைக்கு இன்றுதான் கிடைத்தது முடிவு.. ரொம்ப ரொம்ப நன்றி....மிக்க அருமை...

K.S.Nagarajan said...
This comment has been removed by the author.
K.S.Nagarajan said...

1) Open MS Word 2007
2) Word Options -> Popular -> Language Settings -> Editing Languages
3) Add Tamil to  "Enabled Editing Languages" list 
4) Restart MS Word
5) Try typing words that contain a consonant followed by a respective consonantal vowel. 
For example try these words...    வீரர், மன்னன், தொடர்ந்தது
6) Unfortunately we get this... வீர்ர், மன்ன்ன், தொடர்ந்த்து
7) Now remove Tamil from "Enabled Editing Languages" list
8) Restart MS Word
9) Repeat step 5)
10) We will get the desired... வீரர், மன்னன், தொடர்ந்தது

Doves Park said...

Your service is a boon to people like me.
Further I have already downloaded NHM Writer for Tamil.
Is there any possibility to change languages (use of different languages)with a single download. I have the ability to type Hindi letters also. So it will be more helpful if possible.
OR should we download for each and every language?
sathananthan.

Atpu said...

ஐயா,
இந்த் மென்பொருளைக் கைத்தொலைபேசிகளில் பயன்படுத்தலாமா? (SMARTPHONES)

நன்றி!

ந.சுந்தரராசன் மூவர்கோட்டை said...
This comment has been removed by the author.
ந.சுந்தரராசன் மூவர்கோட்டை said...

வணக்கம் தமிழ் தட்டச்சு தெரிந்த எனக்கு இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.... இப்படி ஒரு மென்பொருளைத்தான் நீண்ட நாள்களாக தேடிக்கொண்டிருந்தேன்.... NHM Writer for Tamil. கிடைத்ததில் அளவற்ற மகிழ்ச்சி நன்றி வணக்கம்.... அன்புடன் சுந்தர்

Unknown said...

NHM எழுத்துருவை tested on Windows 8 (Release Preview)working fine

(வின்டோஸ் 8 வேலை செய்கின்றது)

Need to test on Office 15 soon will test and let you know.

K.S.Nagarajan said...

NHM எழுத்துரு அல்ல! அது ஒரு மென்பொருள்.

Unknown said...

மிக்க நன்றி

FREEMIND SOLUTIONS said...

நல்ல தகவல்.

Unknown said...

enaku migavum uthaviyaga irunthathu ungalin intha pathivu

Sivakamasundari said...

the software is good. But when I create a file in Tamil and send it to others, they can see the font properly but all the words are coming as one string with no space between words. How do we tackle this problem? I have already typed good number of chapters. Please help me. This is urgent. My mobile number is 9820008201.
Thanks,
Uma

Asalamsmt said...

அன்புள்ள ஃபைஸல் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

எல்லா விதத்திலும் உங்கள் தமிழ் ஃபோண்ட் எனக்கு மிக்க உதவிகரமாக இருக்கிறது. மிக்க நன்றி. இப்பொழுது அடுத்ததாக உங்கள் NHM writer font யை ANTROID MOBILE ல் டவுண்லோட் செய்ய முடியுமா? முடியும் என்றால் சொல்லி தந்தால் நல்லது. என்னுடைய சாம்சங் மொபைலில் உங்கள் தமிழ் போண்ட் கிடைத்தால் தமிழ் அடிக்க மிக்க வசதியாகவும், இலகுவாகவும் இருக்கும். பதில் தரவும் இன்ஷா அல்லாஹ்!
asalamsmt@gmail.com

regards:
asalam

Asalamsmt said...

என்னிடம் SAMSUNG NOTE தற்பொழுது உள்ளது. தமிழ் போண்ட் பலதும் டவுன்லோடு செய்து பார்த்தும், முறையாக தமிழ் அடிக்க முடியல்லை. எனக்கு உங்கள் தமிழ் டைப் தான் அடிக்க ஈஸியாக உள்ளது.

அன்புடன்
அசலம்

MURUKESAN said...

https://www.facebook.com/notes/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/268759403171521

MURUKESAN said...

வணக்கம் தமிழ் தட்டச்சு தெரிந்த எனக்கு இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.... இப்படி ஒரு மென்பொருளைத்தான் நீண்ட நாள்களாக தேடிக்கொண்டிருந்தேன்.... NHM Writer for Tamil. கிடைத்ததில் அளவற்ற மகிழ்ச்சி நன்றி வணக்கம்.... அன்புடன் Murukesan

கலாகுமரன் said...

tally உபயோகப்படுத்தும் போது இந்த புரோக்ராமை எக்ஸிட் செய்வது நல்லது என நினைக்கிறேன். இது சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஏனெனில் ஆல்டர் சார்ட் கட் கீகள் டேலி புரோக்ராமிமும் உள்ளது. என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

Unknown said...

Hello,

I have been using NHM Writer 1.5.1.1 for more than three years (Win7) with Word (2007). Since last week it stopped working and I am unable to get the Tamil characters in Word or browser. I restarted the computers, reinstalled the program still can not able to make it work.My task bar nhm bell icon is there and when I try to click it just disappear. I browsed in your blog unfortunate i cannot locate the answer. Any suggestion will greatly be appreciated. Thanks.

Unknown said...

Nice one! like it! Thanks la vinci hotel dhaka

Vijay's Sketches said...
This comment has been removed by the author.
Vijay's Sketches said...

மிக அருமையாக நேர்த்தியாக பதிவிட்டுள்ளீர்கள்.

பயனுள்ள பதிவு

Unknown said...

nhm writer எனக்கு ஒரு நாள் மட்டும்தான் உபயோகப்படுது அதன் பிறகு உபயோக படவில்லை ,இப்படி வருகிறது access violation at adress 00405364 in moudle nhm writer.exe write of adress 00000000 என்று தோன்றுகிறது,ஆன்லைன்ல அப்ட்டே பண்ணனுமா ,நிரந்தரமா படுத்த என்ன வழி எனது செல் நம்பர் 9962443057 ப்ளீஸ் உதவி பண்ணுங்க ,சென்னையருந்த நேரில் சந்திக்க முடியுமா?nhm writer எனக்கு ஒரு நாள் மட்டும்தான் உபயோகப்படுது அதன் பிறகு உபயோக படவில்லை ,இப்படி வருகிறது access violation at adress 00405364 in moudle nhm writer.exe write of adress 00000000 என்று தோன்றுகிறது,ஆன்லைன்ல அப்ட்டே பண்ணனுமா ,நிரந்தரமா படுத்த என்ன வழி எனது செல் நம்பர் , ப்ளீஸ் உதவி பண்ணுங்க ,சென்னையருந்த நேரில் சந்திக்க முடியுமா? அது மட்டுமில்லாம ஒரு பைலில் சேர்த்து வைத்த ஐ ரேமொவே பண்ண முடியல ,அன் இன்ஸ்டால் செய்த பிறகும் pls yaaraarundhalum help pannunga udhavi seynga

msekar70 said...

திரு.ஃபைசல். அவர்களுக்கு வணக்கம். உங்களது என்.எச்.எம். எழுதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ’தமிழ் ஃபொனிட்டிக் வானவில்’ -ல் அரியலூர் என எழுதும்போது கடைசி எழுத்தான ‘ர்’ -க்கு புள்ளி வரவில்லை. இதற்கான தீர்வை வழங்கும்படி கனிவோடு வேண்டுகிறேன்.
நன்றி.
மா.சேகர்.

Unknown said...

Dear Faizal, I am also having same problem as Madhura N, I cannott access the NHM Writer more than one day, i.e, each time i boot the system I am having the following error message "access violation at adress 004DA693 in moudle 'NhmWriter.exe.' Read a address 00000043."

Please do help ASAP. Thank You

Unknown said...

Dear Faizal, I am also having same problem as Madhura N, I cannott access the NHM Writer more than one day, i.e, each time i boot the system I am having the following error message "access violation at adress 004DA693 in moudle 'NhmWriter.exe.' Read a address 00000043."

Unknown said...

Dear Faizal, I am also having same problem as Madhura N, I cannott access the NHM Writer more than one day, i.e, each time i boot the system I am having the following error message "access violation at adress 004DA693 in moudle 'NhmWriter.exe.' Read a address 00000043."

Unknown said...

can u please tell me how to type தொழில் ,தொ,மேல,like wise words,need urgent to do my office works,the letter n is not working for me to type

BHANUSIVA said...

இதையெல்லாம் விடுங்க. கூகுள்க்கு மாறுங்க. பார்த்துப் பதிவிறக்க: http://www.google.co.in/inputtools/windows/

BHANUSIVA said...

ON-LINE or OFF-LINE சுலபமாக அனைத்துத் தட்டச்சு செய்யக்கூடிய - வோர்ட், எக்ஸ்செல், ஈ-மெயில், ப்ளாக், ஃபேஸ்புக் என அனைத்திலும் உபயோகிக்கலாம்.

BHANUSIVA said...

தமிழ்த் தட்டச்சு தெரிய வேண்டிய அவசியமில்லை. ஒலியியல் மாற்றம் (phonetic key input) மூலம் சுலபமாகத் தட்டச்சு செய்யலாம், திருத்தலாம். வேண்டிய வார்த்தைகளுக்கான ஆலோசனைப் பட்டியல் உடனுக்குடன் வழிகாட்டும். வேறென்ன வேண்டும்? thamilai aangilaththil type seythu kolai seyyath thevaiyillai. தமிழ் இனி வேகமாக வளரும், வாழும்.

Unknown said...

[தூ]
எப்படி தட்டச்சி செய்து

Unknown said...

Dear Mr. FAISAL, Salamalikum.
I am Valangaiman VS Narayanan from
T Nagar, Chennai 17.
First I must say Big Thanks to you
and your NHM Developers Team.
So far nobody has come forward to dedicate for Tamil Language to create software for free. By God's grace you have come to fulfill our requirements. My Friend Mr.Azhar told me to download NHM writer. It works well in xp. I am using Tamil typewriter Keyboard since 18 years.
Doing book layouts.
In NHM, like words, manthirum, thinam while typing in "pulli yeazhthu matrum koki yeazhthukal"
In trouble, also Pulli yeazhuthu looks Box appears. Your suggestions can send a mail to: image_vsnarayanan@yahoo.in
Cell: 9444157240

nrji said...

நான் புதியவன். டமில் ஃபோனெடிக் மிகவும் அருமை. நன்றி.

இராவணன் said...

அஸ்ஸலாமு அழைக்கும்....!
நல்ல பதிவு...?
facebook ல photo பாதுகாப்பாக தரவேற்றுவது எப்படி? என சொல்லவும்?

இராவணன் said...

நமது போட்டோவை யாரும் டவுன்லோட் செய்யாமல் இருக்க வழி இருக்க? தயவு செய்து சொல்லவும்?
rahul.sami786@gmail.com

mk yasir said...

இணையத்தில் தமிழிழ் தட்டச்சு செய்வதற்கு மிகமிக இலெகுவான வழியை ஒன்றை தேடிக் கொண்டிருந்தேன். இந்த பதிவை பார்த்தவுடனேதான் அதற்கான விடையை அறிந்து கொண்டேன். இறைவனுக்கே எல்லா புகழும். இந்த பதிவை பார்ப்பதற்கு முன்பிலிருந்தே கூகுள்ளின் மொழிபெயர்பையே உபயோகித்து வந்தேன். எனக்கு மிகவும் பரீட்சையமான பாமினி எழுத்துருவில் இணையத்தில் எழுத வாய்பு கிட்டியமைக்கு இந்த அரும்பணியை செய்த software குழுமத்திற்கும் இதை எப்படி பயன்படுத்துவது என்பதை மிக நேர்தியாக தமிழில் தொகுத்து தந்த இக்கட்டுரை ஆசிரியருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பின்னூட்டலையும் NHMWriter இன் ஊடகவே பதிந்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

mk yasir said...

இணையத்தில் தமிழிழ் தட்டச்சு செய்வதற்கு மிகமிக இலெகுவான வழியை ஒன்றை தேடிக் கொண்டிருந்தேன். இந்த பதிவை பார்த்தவுடனேதான் அதற்கான விடையை அறிந்து கொண்டேன். இறைவனுக்கே எல்லா புகழும். இந்த பதிவை பார்ப்பதற்கு முன்பிலிருந்தே கூகுள்ளின் மொழிபெயர்பையே உபயோகித்து வந்தேன். எனக்கு மிகவும் பரீட்சையமான பாமினி எழுத்துருவில் இணையத்தில் எழுத வாய்பு கிட்டியமைக்கு இந்த அரும்பணியை செய்த software குழுமத்திற்கும் இதை எப்படி பயன்படுத்துவது என்பதை மிக நேர்தியாக தமிழில் தொகுத்து தந்த இக்கட்டுரை ஆசிரியருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பின்னூட்டலையும் NHMWriter இன் ஊடகவே பதிந்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

Mukundan said...

நண்பரே, எனக்கு ஒரு உதவி தேவை. எனக்கு TAB_KAL (TAB Kalyani) என்ற font ல் டைப் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. என்னிடம் அந்த font உள்ளது. அந்த font ல் உள்ள கோப்புகளை பார்க்க முடிகிறது. ஆனால் அதில் நான் டைப் செய்வது எப்படி என்று தெரியவில்லை. உதவுவீர்களா?

cheena (சீனா) said...

அன்பின் ஃபைசல்

மறுமொழிகள் 200ஐத் தாண்டி விட்டன் - நன்று நன்று - பதிவர்கள் படித்துப் பயன் படுத்தத் துவங்கி விட்டனர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

«Oldest ‹Older   1 – 200 of 247   Newer› Newest»