மனிதனுக்குள் ஆதி முதல் இன்று வரை தேடல் என்பது அணுவிக்குள் புகுந்த கருப்பொருளாகவே உள்ளது.
மனித வாழ்க்கையே தேடல்கள் நிறைந்தது. பிறந்தது முதலே தேடல்கள் தொடங்குகின்றன, உணவுக்காக, உறவுக்காக என பலப்பல தேடல்கள்.
பக்தன் கடவுளை தேடுகிறான்,
பாமரன் உணவினை தேடுகின்றான்,
வியாபாரி பணத்தை தேடுகின்றான்,
இருப்பவன் இல்லாததை தேடுகின்றான்,
இல்லாதவன் இருப்பதை தேடுகிறான்,
ஆன்மிக வாதி உண்மைப் பொருளைத் தேடுகிறான்.
சிலர் பணத்தினைத் தேடுகிறார்கள்.
பலர் காதலினைத் தேடுகிறார்கள்.
கொஞ்சம் சிலர் நான் ஏன் பிறந்தேன், இந்த வாழ்வின் நோக்கம் என்ன?.. நான் எதை சாதிக்க வந்தேன் என்று தேடுகிறார்கள்.
யாரோ எதையோ ஒவ்வொரு நிமிடமும் தேடிக்கொண்டே இருக்கின்றார்கள்
சில சமயங்களில் சிலத் தேடல்களுக்கு பதில் கிடைத்தாலும், ஒரு தேடல் மற்றோரு தேடலை உண்டாக்குகிறது… முடிவில்லாத தேடலில் முழ்கிப் போனவானகவே மனிதனின் வாழ்க்கை உள்ளது.
நாம் அடிக்கடி தேடலில் மூழ்கித்தான் போகிறேம். விடை தெரிவதற்கு முன்பே மீண்டும் இந்த உலகத்தின் இயந்திரச் சுழலில் ஈர்க்கப்பட்டு. வாழ்ந்து கொண்டிருக்கும்போது.. மீண்டும் அதே தேடல் மற்றொரு வடிவில்.. மற்றொரு சமயத்தில்.. என்று முடியுமோ? தெரியவில்லை.
‘ தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியெடுக்கும்
தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசியிருக்கும்
பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே”..
தேடலின் பாதையில் கற்றுக்கொண்ட ஒன்று ‘தேடலுக்கு முடிவில்லை. தேடலை அனுபவித்தலே வாழ்க்கை’
சரி வாழ்கையை அனுபவிக்க் புதிய தேடல் தொடங்குவோம் வாருங்கள் நண்பர்களே.
வேறு எதையே தேடியபோது கிடைத்தவை... இவை...
No comments:
Post a Comment