Saturday, December 30, 2006

தெரியுமா உங்களுக்கு..?

அனல் மின் நிலையங்களில் நாளொன்றுக்கு பத்தாயிரம் டன் நிலக்கரியை எரித்து சில ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தான் தயாரிக்க முடியும்.

அதற்குப் பதிலாக சிறிய ஏரியில் இருக்கும் தண்ணீரில் உள்ள டியூட்டீரியம் மற்றும் டிரிஷியத்தை பிரித்தெடுத்து அவற்றை பிணைத்து மின்சாரம் தயாரித்தால் இந்த உலகத்துக்கே பல நூறு ஆண்டுகளுக்கு தாராளமாக மின்சாரத்தை தயாரித்துக் கொடுக்கலாம். இந்த முறையில் கதிரியக்க ஆபத்தும் இல்லை.

ஆனால், இதற்கான தொழில் நுட்ப சாத்தியம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. தற்போது இதற்கான ஆய்வுக்கு ஆயிரம் கோடி யூரோ ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

Friday, November 10, 2006

குட்டீஸ் கார்னர்

குழந்தைகளிடம் பல்வேறு துறைகளைப் பற்றிக் கூறலாம். தெரிந்த விஷயங்கள் என்றாலும் அத்துறைகளுக்கான பெயர்களைக் கூறும் போது ஆவலாகக் கேட்பார்கள்.

வானியல் - ASTRONOMY

மண்ணியல் - GEOLOGY

உடற்கூறியல் - ANATOMY

கனிம இயல் - MINEROLOGY

உலோகத் தொழிலியல் - METALLURGY

அண்டப்பிறப்பியல் - COSMOLOGY

தோட்டக்கலை – HORTICULTURE

கால்நடை விலங்கியல் - ANIMAL HUSBANDRY

பால் பண்ணை – DAIRY

தேனீ வளர்த்தல் - BEE KEEPING

முத்துக் குளித்தல் - PEARL DIVING

கப்பல் கட்டுதல் - SHIP BUILDING

கழிவுநீர் வடிகால் - DRAINAGE

போர்க்கலை – WARFARE

உணவுப்பங்கீட்டு முறை – RATIONING

உணவுப்பதப்படுத்துதல் - FOOD PROCESSING

Friday, October 27, 2006

குட்டீஸ் கார்னர்!

விடை தெரியாமல் மாட்டிக்கொண்டு முழிக்கும் அனைவருக்கும் விடை இதோ

1. சட்டை போடாதவன் ஆனாலும் சட்டையைக் கழற்றுடுவான்.

விடை : பாம்பு

2. வாலில் வைத்திருப்பான் வகையான ஆயுதம்.

விடை : தேள்

3. கறுப்பனுக்கு வயதானால் வெள்ளையன்.

விடை : தலைமுடி

4. அம்மா என்றழைத்தவனுக்கு அடுத்த வார்த்தை தெரியாது.

விடை : பசு

5. இனிக்கும் கைத்தடி ஓங்கினால் தடியடி.

விடை : கரும்பு

Thursday, October 26, 2006

குட்டீஸ் கார்னர்!

இப்புதிய பகுதி மலர்ந்ததின் நோக்கம்., எவ்வளவு ‘பெரிய மனிதராக’ இருந்தாலும் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் அந்த பத்து நிமிடம் தான் நமக்கு கிடைக்கும் சந்தோஷத்தில் முழுமையான சந்தோஷத்தை அளிக்கக் கூடியதாக, அதாவது கவலைகளை மறந்து நாம் செலவிடும் மணித்துளிகளாக அமைகிறது..! அப்படி நாம் அவர்களை குதூகலப்படுத்துவதற்கு வகை, வகையான விஷயங்களை தெரிந்துக் கொள்ள வேண்டாமா?! அதைத் தான் இப்பகுதியில் பகிர்ந்துக் கொள்ளப் போகிறோம்! அப்படி குட்டி இளவரசி(சர்)களைக் கவரும் விஷயங்கள் உங்களை கவர்ந்திருந்தால் இப்பகுதியில் பகிர்ந்துக் கொள்ளலாமே..!

ஏனெனில் எங்கள் வீட்டுக் குட்டீஸ்களிடம் நாங்களும் கலக்குவோமல்லவா..!

விடுகதைகள்

1. சட்டை போடாதவன் ஆனாலும் சட்டையைக் கழற்றுடுவான்.
2. வாலில் வைத்திருப்பான் வகையான ஆயுதம்.
3. கறுப்பனுக்கு வயதானால் வெள்ளையன்.
4. அம்மா என்றழைத்தவனுக்கு அடுத்த வார்த்தை தெரியாது.
5. இனிக்கும் கைத்தடி ஓங்கினால் தடியடி.

இதன் விடை நாளைய பக்கத்தில். அதற்கிடையில் குட்டீஸ்களிடம் புதிர் போட்டு விடை தெரியாமல் நீங்கள் மாட்டிக் கொண்டால் நாங்கள் பொருப்பல்ல., ஹி..ஹி..!

Thursday, October 12, 2006

ஓ…அப்படியா..!

ஆண்களின் குரல்வளை பெண்களின் குரல்வளையை விடப் பெரியது. இதுவே ஆண்களின் குரல் கனமாக, கடினமானதாக இருப்பதற்குரிய காரணமாகும்.

அசைவிற்கு ஏற்ப தொண்டையில் உள்ள அதிர்வு நாளங்கள் சுருங்கி விரிந்து செயல்படும் போது துருத்திக் கொண்டுள்ள குருத்தெலும்பானது இனிமையான, கடினமான குரலுக்கு காரணமாய் இருக்கிறது.

இந்த குருத்தெலும்பை ஆண்களின் கழுத்துப் பகுதியில் காணலாம். அதன் பெயர் ‘ஆடம்ஸ் ஆப்பிள்’ எனக் கூறுவார்கள்.

Tuesday, October 10, 2006

படித்ததில் ரசித்தது..!

மரணவலி தான்
மனம் தளராதே..!
தரையிறங்கும்
நேரமிப்போது..!
முட்டு…முயற்சி செய்…
சுகப்பிரசவம் என்பது
சும்மாயில்லை
மாநகரப் பேருந்து
நெரிசலிலிருந்து…!

Friday, September 29, 2006

கண்ணதாசன் vs இறைவன்

“பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்.
‘பிறந்து பார்’ என இறைவன் பணித்தான்.
இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்.
‘இறந்து பார்’ என இறைவன் சொன்னான்.
‘மனையாள் சுகம் யாதெனக் கேட்டேன்.
‘மணந்து பார்’ என இறைவன் பணித்தான்.
‘அனுபவித்தே அறிவது வாழ்வெனின்
இறைவா நீ ஏன்? என்றேன்.
இறைவன் சற்றே அருகில் வந்து
“அனுபவம் என்பதே நான் தான்” என்றான்.

கண்ணதாசனின் கவிதை வரிகள்....

Wednesday, September 27, 2006

அறிந்துக் கொள்வோமே..!



விலங்குகளில் விசித்திரமானது கங்காரு. அதற்கு நடக்கத் தெரியும், தாவத் தெரியும். ஓடத் தெரியாது. நீளம் தாண்டுதவதில் மனிதனின் சாதனையை வென்று விடும். 30 அடிகள் தாவும். ஆதன் நீண்ட தடித்த வால், தாவுதற்கேற்ற முறையில் அமைந்தது.

பிறக்கும் போது ஓர் அங்குல அளவில் இருக்கும் குட்டியை வயிற்றுப் பையில் வைத்துக் காப்பாற்றும். அக்குட்டி ஐந்து மாதங்களில் ஒன்றே முக்கால் அடியாக வளர்ந்து விடும். ஆறடி அம்மாவுக்கு ஓரங்குல குழந்தை என்னும் புதிருக்கு இதுவே விடையாகும்.

குட்டியோ எட்டாம் மாதத்தில் பையிலிருந்து வெளியே வந்து இரை தேடும். தன்னைப் பிடிக்க வரும் வேட்டை நாய்களைப் பின்னங்கால்களால் உதைத்துச் சிதைத்து விடும்.

(மிக்க மேலானவன்)

Monday, September 25, 2006

பிளாக் பாக்சின் நிறம்..





விமான விபத்தை கண்டறிய உதவும் பிளாக் பாக்சின்
உண்மையான நிறம் மஞ்சள்.

இ. சிறீஸ்காந்தராசாவின் பல்சுவைச் சுரங்கம் நூலில் இருந்து.

Friday, September 22, 2006

தூக்கமே முக்கியம்...

உலக அரங்கத்தில் ஆங்கிலப் பேரிலக்கியத்திற்காக 1914- காலக் கட்டத்தில் பேரறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா நோபல் பரிசைப் பெற்றிருந்தார். அச்செய்தி அவருக்கு அன்று நள்ளிரவில் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டபோது, அவர் இவ்வாறு கூறினார்:

‘நான் இந்தப் பரிசைப் பெற்றிருக்கக் கூடிய ஒரு சாதாரண விஷயத்திற்காக என்னுடைய அருமையான உறக்கம் கெடுக்கப்பட்டிருக்க வேண்டாமே!’

ஓ…

உண்மை தான்! அதைத் இத்தருணத்திலும் வெளிப்படுத்திய ஷா உண்மையாகவே விந்தையான மனிதர் தான்!

சுவையான மனிதர்கள்
சுவையான சம்பவங்கள

சுவையான சம்பவங்கள்...

பாரத தேசத்தின் விடுதலை வேள்வியில் தீவிர பங்கேற்றவர்களில் குறிப்பிடத்தக்கவராகச் செயலாற்றிய ‘லோகமான்ய பாலகங்காதர திலகரின்’ நடவடிக்கைகளை உளவு அறிவதற்கெனப் பிரிட்டிஷ் அரசாங்கம் ரகசியப் போலீஸ்காரர் ஒருவரை அனுப்பித் திலகர் வீட்டுச் சமையல்காரராக அமர்ந்து அவரைக் கண்காணித்து வரும்படி ஆணையிட்டது.

அந்த ரகசியப் போலீஸ்காரரும் அவ்வாறே திலகர் வீட்டிலே சமையற்காரராக அமர்ந்தார்.

ஆறு மாதங்கள் ஓடி விட்டன. ஒரு நாள்..,

அந்த சமையற்காரர் திலகரிடம், ‘எஜமான், எனக்குச் சம்பளம் போதவில்லை. கொஞ்சம் உயர்த்திக் கொடுங்கள்.’ என்று வேண்டிக் கொண்டார்.

திலகர் அர்த்தச் செரிவுடனே சிரித்தார். ‘என்னப்பா, இப்படிக் குறைப்பட்டுக் கொள்கிறாயே? நான் உனக்கு மாதம் ஆறு ரூபாய் சம்பளம் தருகிறேன். பிரிட்டிஷ் அரசாங்கமோ உனக்கு மாதா மாதம் இருபத்திநாலு ரூபாய் சம்பளம் தருகிறது, என்னைக் கவனித்துக் கொள்வதற்கு! இன்னுமா உனக்குத் திருப்தி ஏற்படவில்லை?’ என்றார்.

அவ்வளவு தான்!

துப்பறியும் போலீஸாருக்கு வியர்த்துக் கொட்டியது, தலை குனிந்தார். அன்றிரவு வெளியே போய் விட்டுத் திரும்புவதாகச் சொல்லிவிட்டுப் போன அந்த சமையற்காரர் அப்புறம் திரும்பி வரவே இல்லை!

அரை மீசை...



உலகை அழவைத்த உறிட்லருக்கும் அரை மீசை, உலகை சிரிக்க வைத்த சார்லி சப்ளினுக்கும் அரை மீசை

இ. சிறீஸ்காந்தராசாவின் பல்சுவைச் சுரங்கம் நூலில் இருந்து.

Wednesday, September 20, 2006

குழப்பம்...

என்ன தொழில் தொடங்குவது அல்லது எவ்வாறு நம் எதிர்காலத்தை திட்டமிடுவது என்று என்னுள் ஓரு சில மாதங்கள் குழப்பமாகவே இருக்கிறது நாம் இவ்வாறு குழம்பிக் கொண்டே இருப்பது சரிதான? என்று என்னிய போது பா நந்தன் அவர்கள் எழுதிய குழப்பம்... எனும் இக் கவிதை என் கண்ணில் பட்டது அவற்றில் சில வரிகள் இங்கே

குழப்பமில்லாமல்
தத்துவங்களும் விஞ்ஞானமும் இல்லை.

ஆப்பிள் ஏன் கீழே விழுந்ததென்று குழம்பாவிடில்
புவிஈர்ப்பின் அவசியம் தெரிந்திருக்காது.
பறவைகள் மட்டுமேன் பறக்கின்றனவென்று குழம்பாவிடில்
விமானத்தின் கண்டுபிடிப்பு நிகழ்ந்திருக்காது.

ஆனால் இன்று நீங்கள்
குழம்புவதை நிறுத்தி விட்டீர்கள்.
தெளிவு என்னும் அறியாமையில்
மூழ்கி விட்டீர்கள்.

எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டீர்கள்.
அல்லது கண்மூடித்தன்மாய் எதிர்க்கத் தொடங்கி விட்டீர்கள்.
அதனால் குட்டையைப்போல்
ஒரே இடத்தில் தேங்க ஆரம்பித்து விட்டீர்கள்.

ஆதலால் எல்லோரும் குழம்பிக் கொண்டே இருங்கள்.
நதி போல் என்றும் பயணித்துக் கொண்டே இருங்கள்."

படித்து முடித்தவுடன் என்னுள் ஓர் தெளிவு நன்றி பா நந்தன் அவர்களே...

கவிதை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Tuesday, September 19, 2006

ஹா ஹா!

புகழ் மிக்க ஆங்கிலக் கவி காலரிட்ஜிடம் ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் லாம்ப் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அடிக்கடி அவரோடு பேசிப்பழக ஆரம்பித்தார்.

ஒரு நாள்:

முன்னர் தாம் செய்த பிரசங்கங்களைச் சார்லஸ் லாம்பிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டார் காலரிட்ஜ். “சார்லஸ்! நான் பிரசங்கம் செய்து நீங்கள் கேட்டதில்லை தானே?” என்று வினவினார்.

சார்லஸ் லாம்ப் சொன்னார்: “உங்களிடம் நான் பிரசங்கத்தைத் தவிர வேறெதையுமே இது வரையிலும் கேட்டதில்லையே” என்றார்.

Sunday, September 17, 2006

அட அப்படியா?! பகுதி 2

மீன்களும் அதன் பயன்களும்.

பால் சுறா - நோய்களுக்கும், ஈன்ற தாய்மார்களுக்கும் பயன்மிக்கது.

நட்சத்திர மீன் - சோர்வுற்ற தசைகளைத் தூண்டக்கூடிய மருந்துப்பொருட்கள் இம்மீனிலிருந்து பெறப்படுகிறது.

திருக்கை மீன் - இம்மீனின் வாலிலுள்ள கொடுக்குப் போன்ற முள்ளின் விடம், இருதய அறுவை சிகிச்சைக்கு பயன்படுகிறது.

தேரை மீன் - இதன் உடலிலிருந்து உண்டாகும் ரசாயனப் பொருள் இரத்தத்திலுள்ள சர்க்கரையை அழித்து விடுகிறதாம்.

கடல் வெள்ளரி மீன் - புற்று நோய்க்கு மருந்து.

சிப்பிலி - இதனிலிருந்து வெளிப்படும் பொருள் இளம்பிள்ளை வாதம், இன்புளுவென்சாவுக்கு, மருந்தாகவும், இரத்தம் உறைவதைத் தடுப்பதற்கு அறுவை சிகிச்சைக்கு தேவையான ஆற்றலை அளிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆக்டபஸ் - இதன் உமிழ்நீர் விடமாக இருப்பினும், அதனால் இருதய நோயை குணப்படுத்த முடிகிறதாம்.

கடல் நத்தை – நோயை எதிர்க்ககூடிய ஆன்டிபயாடிக் தயாரிக்கப்படுகிறது.

கடல் முள்ளெலி - இதிலிருந்து எடுக்கப்படும் விடம் புற்று நோய் வராமல் தடுக்கும் ஆற்றலுடையதாம்.

காட் மீன் - ஏ, டி, இ வைட்டமின்கள் கிடைக்கின்றன.

டிரங்க் மீன் - கைகால் வலிப்பு, நரம்பு தொடர்பான நோய்களுக்கு மருந்து கிடைக்கிறது.

டூனி மீன் - நீரிழிவு நோயைப் போக்குதற்குறிய இன்சுலின் பெறப்படுகிறது.

கடல் விசிறி - இப்பிராணியிலிருந்து எடுக்கப்படும் மருந்துப் பொருள், குடல் புண்களைக் குணமாக்கவும் இயங்கு தசையை முடுக்கிவிடவும், ஆஸ்துமா இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

(மிக்க மேலானவன்)

Friday, September 15, 2006

அட அப்படியா?!

நீரில் வாழும் மீனினத்தில் இருபதினாயிரம் வகைகளை இறைவன் படைத்துள்ளான்.

அவை சுவை மிகுந்த உணவாகவும் பிணிகளைப் போக்கும் மருந்தாகவும் உதவுகின்றன.

பாக்டீரியாக்களையும் வைரஸ் கிருமிகளையும் அழிக்கும் 125 ரசாயனப் பொருட்கள் கடல்வாழ் உயிரினங்களிலிருந்து மனித குலத்திற்குக் கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். புரதம், கொழுப்பு, வைட்டமின் ஏ, டி, கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாசுபரஸ், பொட்டாசியம், குளோரின் ஆகிய சத்துக்கள் மீன்களிலிருந்து நமக்குக் கிடைக்கின்றன.

ஒவ்வொரு மீனின் பயனையும் நாளை விரிவாகக் காண்போமே..!

Friday, September 08, 2006

ஹா ஹா..!

ஒரு சமயம் ஆங்கில இலக்கியத்தின் மாமேதையான ஜார்ஜ் பெர்னார்ட்ஷாவைத் திரையுலக நட்சத்திரம் ஒருத்தி சந்தித்தாள்

‘தாங்கள் என்னைத் திருமணம் செய்துக் கொண்டால், என்னைப் போல அழகும் உங்களைப் போன்ற அறிவும் கொண்ட பிள்ளைப் பிறக்கும் அல்லவா?’ என்றாள்.

ஷா சொன்ன பதில் இது:

‘உண்மையில் அப்படிப் பிறக்கிற குழந்தை உன் மாதிரி அறிவோடும் என் மாதிரி அழகோடும் இருந்து விட்டால், என்ன செய்வதாம்?’

சந்திக்க வந்த நடிகை சிந்தனையுடன் மௌனமாக வெளியேறினாள்.

சுவையான மனிதர்கள்
சுவையான சம்பவங்கள்

Wednesday, September 06, 2006

அதிசயமான ஒற்றுமை!

இந்தியப் பிரதமர் நேருஜிக்கு ஜப்பான் நாட்டுக் குழந்தைகள் யானை அனுப்ப வேண்டுமென்று அன்புடன் கடிதம் எழுதினார்கள்.

குழந்தை உள்ளம் படைத்த நேருஜி, உடனே அழகான யானைக் குட்டி ஒன்றை ‘இந்திரா’ என்று பெயரிட்டு, 1950-இல் அனுப்பினார். இந்த யானையை சில ஆண்டுகள் கழித்து ஜப்பான் நாட்டுக்குச் சென்ற போது நேருஜி கண்டு மகிழ்ந்தார்.

ஆனால் இந்திரா என்ற பெயர் கொண்ட அந்த யானை, அன்னை இந்திராகாந்தி நாட்டு துரோகிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட அதே நாளில், அதே 31-10-1984 காலை ஜப்பானில் விலங்குச் சாலையில் திடீரைன்று இறந்து விட்டதாம்!

எப்படிப்பட்ட அபூர்வ ஒற்றுமை!

Tuesday, September 05, 2006

அறிந்துக் கொள்வோமே..!


கடலில் வாழ்ந்து குட்டிப் போட்டுப் பால் கொடுக்கும் உயிரினங்களுள் ஒன்று திமிங்கலம். தாயின் அடிவயிற்றில் வாயை வைத்துப் பாலருந்தும் குட்டி, ஒரு தடவைக்கு 40 லிட்டர் பால் உட்கொள்ளும்.

அதற்கொப்ப நாள்தோறும் அதன் எடை 100 கிலோ ஏறிச்செல்லும். ஒன்றரை மீட்டலிருந்து 37 மீட்டர் வரை நீலமுள்ள திமிங்கலங்கள் இருக்கின்றன. ஒரு திமிங்கலத்தின் நாக்கு மட்டும் 4 டன் எடையிருக்கும்.

ஒரு திமிங்கலத்தில் இருந்து 20 பீப்பாய் எண்ணெயும், 100 பீப்பாய் கொழுப்பும், அம்பர் என்னும் சுகந்த பொருளும் பெறலாம். ஆபத்து நேரத்தில் திமிங்கலம் எழுப்பும் ஒலி 11 கிலோ மீட்டர் வரையில் கேட்கும். அவ்வொலியைக் கேட்டுப் பிற திமிங்கலங்கள் உதவிக்கு விரைந்து வரும்.

திமிங்கலம் வாலைச் சுழற்றியடித்தால் பெரிய படகுகளும் கவிழ்ந்துவிடும். ஒரு திமிங்கலம் பத்து யானையின் எடையினை உடையது. நாக்கு மட்டும் ஒரு யானையின் எடையினைக் கொண்டது.

{நன்றி : மிக்க மேலானவன்}

Monday, September 04, 2006

பிரியும் நேரம்..!

மானிட மனம்
பிரிவை எதிர் நோக்கும்
ஒரே தருணம்.!
ஆசையாய்.,
பாசமாய்.,
ஆவலாய்.,
வளர்க்கும் பிள்ளையை – என்று
நாம் நலமாய் பிரியப் போகிறோம் - எனும்
கவலையோடு காத்திருக்கும்.,
கருவுற்ற தாய்..!

Saturday, September 02, 2006

ஹா ஹா!

சர்ச்சிலும் விஷமும்.

இரண்டாவது உலக மகாயுத்தத்தில் வெற்றிச் செல்வராக விளங்கியவர் இங்கிலாந்து நாட்டின் இணையற்றப் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சில்.

ஒரு சமயம் நான்ஸி என்ற அழகி சர்ச்சிலை சந்தித்த போது, “நான் உங்களது மனைவியாக இருந்தால், நீங்கள் குடிக்கிற காஃபியில் நான் விஷத்தைக் கலந்து கொடுத்து விடுவேன்!” என்று நகைச்சுவையாக சொல்லிவிட்டாள்.

அவ்வளவு தான்!

மறுவினாடியே சர்ச்சில் ‘கட கட’ வென்று தமக்கே உரித்தான சிரிப்புடன் பதில் அளித்தார்! “நான் மட்டும் உன்னுடைய கணவராக இருந்திருந்தால், அந்த விஷத்தை நீ தராமலேயே நானே குடித்திருப்பேன்.”

அழகி அமைதியாக அவ்விடத்தைவிட்டு அகன்றாள்.

Friday, September 01, 2006

தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியெடுக்கும்.

மனிதனுக்குள் ஆதி முதல் இன்று வரை தேடல் என்பது அணுவிக்குள் புகுந்த கருப்பொருளாகவே உள்ளது.

மனித வாழ்க்கையே தேடல்கள் நிறைந்தது. பிறந்தது முதலே தேடல்கள் தொடங்குகின்றன, உணவுக்காக, உறவுக்காக என பலப்பல தேடல்கள்.
பக்தன் கடவுளை தேடுகிறான்,
பாமரன் உணவினை தேடுகின்றான்,
வியாபாரி பணத்தை தேடுகின்றான்,
இருப்பவன் இல்லாததை தேடுகின்றான்,
இல்லாதவன் இருப்பதை தேடுகிறான்,
ஆன்மிக வாதி உண்மைப் பொருளைத் தேடுகிறான்.
சிலர் பணத்தினைத் தேடுகிறார்கள்.
பலர் காதலினைத் தேடுகிறார்கள்.
கொஞ்சம் சிலர் நான் ஏன் பிறந்தேன், இந்த வாழ்வின் நோக்கம் என்ன?.. நான் எதை சாதிக்க வந்தேன் என்று தேடுகிறார்கள்.
யாரோ எதையோ ஒவ்வொரு நிமிடமும் தேடிக்கொண்டே இருக்கின்றார்கள்
சில சமயங்களில் சிலத் தேடல்களுக்கு பதில் கிடைத்தாலும், ஒரு தேடல் மற்றோரு தேடலை உண்டாக்குகிறது… முடிவில்லாத தேடலில் முழ்கிப் போனவானகவே மனிதனின் வாழ்க்கை உள்ளது.

நாம் அடிக்கடி தேடலில் மூழ்கித்தான் போகிறேம். விடை தெரிவதற்கு முன்பே மீண்டும் இந்த உலகத்தின் இயந்திரச் சுழலில் ஈர்க்கப்பட்டு. வாழ்ந்து கொண்டிருக்கும்போது.. மீண்டும் அதே தேடல் மற்றொரு வடிவில்.. மற்றொரு சமயத்தில்.. என்று முடியுமோ? தெரியவில்லை.

‘ தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியெடுக்கும்
தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசியிருக்கும்
பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே”..


தேடலின் பாதையில் கற்றுக்கொண்ட ஒன்று ‘தேடலுக்கு முடிவில்லை. தேடலை அனுபவித்தலே வாழ்க்கை’

சரி வாழ்கையை அனுபவிக்க் புதிய தேடல் தொடங்குவோம் வாருங்கள் நண்பர்களே.

வேறு எதையே தேடியபோது கிடைத்தவை... இவை...

கவிதையே தெரியுமா..!

என்றோ படித்தது., மனதில் பதிந்தது.!

பெண்ணே..!
நீ அரிசியாக இராதே.,
அரைத்து நசுக்கி விடுவார்கள்.
உளுந்தாக இரு.,
அரைத்தாலும் பொங்கி எழலாம்..!

Thursday, August 31, 2006

ஹா..! ஹா..!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தின் நிமித்தம் உலக நாடுகளில் பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பிய நேரம்.

பல்வேறு பத்திரிக்கைகளின் செய்தியாளர்கள் உடனே அவருடைய ராமாவரம் தோட்டத்திற்குப் படை எடுத்தனர்.

“உலக நாடுகள் சிலவற்றிற்குத் தாங்கள் போய்த் திரும்பியிருக்கிறீர்கள். ரொம்பவும் மகிழ்ச்சி. குறிப்பாக, ஜப்பான் நாட்டிலே தங்களுக்கு எது பிடித்தது என்று சொல்ல முடியுமா?” என்று நிருபர் ஒருவர் கேட்டார்.

"ஜப்பான் நாட்டில் எனக்கு சதைப் பிடித்தது!” என்றார் புரட்சி திலகம்.

அவ்வளவு தான்! அங்கே அப்போது எழுந்த சிரிப்பொலி அடங்க சில நிமிஷங்கள் பிடித்தன!

சுவையான மனிதர்கள்
சுவையான சம்பவங்கள்.

Wednesday, August 30, 2006

கவிதையே தெரியுமா…!




படித்ததில் ரசித்தது..,

"தண்டவாளத்தில் தலைசாய்த்துப் பூத்திருக்கும் ஒற்றைப் பூ என் காதல் நீ நடந்து வருகிறாயா ரயிலில் வருகிறாயா"

(பழனி பாரதி)

Tuesday, August 29, 2006

பூ பூப்பது நமக்காக!

வாத நோய் போக்கும் தாழம்பூ,
ஆறாத புண்களுக்கும் தீராத தலைவலிக்கும் ஆறுதலளிக்கும் சம்பங்கி,
சொறி சிரங்கு வீக்கங்களைப் போக்கும் மல்லிகை,
வயிற்றுக் கடுப்புக்கு மருந்தாக அமையும் மாதுளம் பூ,
பாம்புக் கடியின் துயர் போக்கும் தும்பைப் பூ,
வயிற்றுப் பூச்சிகளை விரட்டியடிக்கும் வேப்பம்பூ,
உறுப்புகளுக்கு உறுதியளிக்கும் செம்பருத்தி,
தூக்கத்திற்கு துணையளிக்கும் மருதோன்றிப் பூ,
நோய்களுக்கெல்லாம் காரணமான மூல நோயைப் போக்கும் வாழைப்பூ,
சூட்டைத் தணித்து கண் எரிச்சலை நீக்கும் முருங்கைப் பூ,
நீரழிவு உடல் நாற்றம் நீக்கும் ஆவாரம்,
கருவுற்ற பெண்களின் கவலையைப் போக்கும் குங்குமம்!
(நன்றி: மிக்க மேலானவன்)

இங்கு குறிப்பிட்டு உள்ளது சில பூக்கள் மட்டுமே இதுபோன்று நூற்றுக்கணக்கான மலர்கள் நமக்கு பல்வேறு பயன்களைத் தருகின்றன.

Monday, August 28, 2006

அறிவின் அடிப்படையில் மனிதர்கள்...

அறிவின் அடிப்படையில் மனிதர்களை ஆய்ந்துள்ளார் அரபு நாட்டு மேதை கலீல் இப்னு அஹ்மது என்பார்.

முதலாவது: தான் அறிந்தவன் என்பதை அறிந்திருக்கும் அறிஞன்: அவனைப் பின் பற்று.

இரண்டாவது: தான் அறியாதவன் என்பதை அறியாதிருப்போன்: அவன் தூங்குகிறான் அவனைத் தட்டி எழுப்பு.

மூன்றாவது: தான் அறியாமலிருப்பதை அறிந்திருப்பவன்: அவன் பாமரன் அவனுக்கு கற்றுக் கொடு.

நான்காவது: தான் அறியாதவன் என்பதை அறியாதிருப்பவன்: அவன் முட்டாள் அவனை ஒதுக்கித் தள்ளு.

இதனைத் தமது அரிய நூலில் எடுத்துக்காட்டியுள்ளார் அறிவுக் கடல் இமாம் கஸ்ஸாலீ {ரஹ்} அவர்கள்.

Sunday, August 27, 2006

புள்ளி விபரம்தான்.

ஜோஸப் ஸ்டாலின் ஆயுதக் கிடங்கு அதிகாரியாயிருந்தபோது அவர் உயர்ந்த அதிகாரிகளைக் கொண்டு ஓரு கூட்டம் கூட்டினார் அதில் அவர்கள் உக்ரைனில் எற்பட்டிருந்த பஞ்சம் பற்றி விவாதித்தார்கள்.

ஓர் அதிகாரி எழுந்து நின்று அங்கு நிலவும் பஞ்சத் துயரை உணர்ச்சியுடன் விளக்கத் துவங்கினார். " நூறாயிரக்கணக்கான மக்கள் பூச்சி, புழுக்களைப் போல செத்து மடிகின்றார்கள்" என்று கூறி விட்டு அவர், ஓவ்வொரு பகுதியிலும் இறந்தவர்கள் தொகையை வாசிக்க ஆரம்பித்தார். உடனே ஸ்டாலின், "ஓரு மனிதன் இறந்தால் அது பரிதாபத்துக்குறிய விஷயம், நூறாயிரக்கணக்கானவர் இறந்தால் அது வெறும் புள்ளி விபரம்தான்" என்றார்.

படியுங்கள் சுவையுங்கள் - அப்துற்-றஹீம்

ஓரு நிமிடம்...

அப்பா தனது பிள்ளைக்குக் கொடுக்கிற "பாக்ககெட் மணி" மாதிரி ஆண்டவன் நமது கையில் நேரத்தை கொடுத்திருக்கிறார்.

அதை நம்மில் எத்தனை பேர் எண்ணிப் பார்க்கிறோம்?

ஓன்று மட்டும் உண்மை. நேரம் பணத்தைவிட உயர்ந்தது. ஏனென்றால் அந்தப் பணத்தையே அதுதான் சம்பாதித்துத் தருகின்றது.

இன்னும் ஓரு நிமிடம் லேட்டாகியிருந்தா காப்பாத்தியிருக்க முடியாது அல்லது காப்பாத்தியிருக்க முடியும் என்று டாக்டர் சொல்வார் இதுபோன்று பலமுறை நாம் பார்த்திருப்போம், கேட்டு இருப்போம் அதுபோல வாழ்வில் ஓவ்வெரு நிமிடமும் அருமையானது. இதை சிந்தித்தால் வெற்றி நிச்சயம்.

Saturday, August 26, 2006

எளிய முறையில் நேர நிர்வாகம் பகுதி : 1


powered by ODEO

இது எனது முதல் ஒலிப்பதிவு கேளுங்க கேளுங்க கேட்டுபுட்டு உங்க கருத்ததை பதியுங்க நன்றி!

MP3 டவுன்லோடு செய்ய இங்கே அழுத்தவும்

Friday, August 25, 2006

இணைப்பு...

இணைய உலகில் வலம் வரும் போது ஒர் கட்டுரை படித்ததேன் அதில் என்னை கவர்ந்த இணைப்பு (Networking) பற்றி விசயம் பயன் உள்ளதக தோன்றியது இதே இங்கே அவைகள்.

இன்று பல புதிய திறமை வாய்ந்த இளையர்கள் தங்களிடையே இனணப்பை எற்படுத்த தயங்குகின்றார்கள் அல்லது தயாரக இல்லை என்று கூறலாம் ஏன் என்றால் ஒருவருடன் இணைப்பை எற்படுத்துவது என்பது புதிய வேலை கிடைக்க உதவும் என்று மட்டும் நினைக்கிறார்கள் மற்ற பயன்னுள்ள விசயங்களை பார்ப்பதும் இல்லை எடுத்துகாட்டக ஒருவருடன் இணைப்பை அல்லது இணையதளங்களில் மூலம் மின்அஞ்சல் பெறுவது போன்றவை நாம் தொழில் துறையில் எற்படும் மாற்றம், துறையின் எதிhகலாதிட்டம், துறையில் நிலவும் போட்டித்தன்மை, பல்வேறு புதிய வியாபர வாய்ப்புகள், புதிய சிந்தனை, புதிய செயல் ஆக்கம் போன்ற பலவகையான பயன்கள் உண்டு என்பதை பல சமங்களில் அறிய மறுக்கின்றோம். சரிதானே. மாற்று கருத்து இருந்தல் தயவு செய்து தெரிவியுங்கள்.

மேல் கூறியவற்றை பற்றி மேலும் ஆங்கிலத்தில் அறிய Seven Career Killers – (Kiplinger’s Personal Finance)

Thursday, August 24, 2006

அடுத்தவர் பிரச்சனையை...

"அடுத்தவர் பிரச்சனையை சரிசெய்யதீர்கள்" என்னடா இப்படி சொல்றான் பார்க்கதீங்க மேலோட்டமா பார்த்தா அப்படித்தான் தெரியும் இன்னும் படிங்க! நீங்க தொடர்ந்து அடுத்தவர் பிரச்சனையை சரிசெய்து கொண்டு இருந்திங்கன்ன அவருடைய அடுத்த பிரச்சனை உங்களுடையதா தான் இருக்கும் அதனால் நீங்கள் அடுத்தவர் பிரச்சனையை சரிசெய்வதை விட அவருக்கு எப்படி பிரச்சனையை தீர்ப்பது அல்லது கையாலுவது என்பதை கற்று தன்தாள் அவருக்கும் நல்லது உங்களுக்கும் நல்லது எப்படி!!! நான் சொல்வது சரி தானே?

பழமொழி :
பசித்தவனுக்கு மீன் கொடுப்பதைவிட, மீன் பிடிக்க சொல்லிக்கொடுப்பது நன்று.

தலைவலியை குறைக்க சில வழிவகைகள்!

தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பது பழமொழி

கீழ் தரப்பட்டுள்ள சில வழிவகைகள் உங்கள் தலைவலியை போக்க உதவும்
1. வாழைப்பழம் சப்பிடுவதன் மூலம்
2. பெப்பர்மெண்ட் சப்பிடுவதன் மூலம் (பெப்பர்மெண்ட்டுக்கு தமிழில் என்ன என்று தெரியவில்லை தெரிந்தால் கூறாவும்)
3. தக்காளி சார் பருகுவதன் மூலம்
4. கோபின் இல்லாத கோலா பருகுவதன் மூலம்
5. ரொட்டி துன்டு அல்லது நல்ல சாப்படு சப்பிடுவதன் மூலம்
மேலே கூறியவை மூலம் உங்கள் தலைவலியை குறைக்க முடியும் மேலும் உங்களுக்கு பலவழிகள் தெரிந்து இருக்களாம் தெரிந்தால் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்

Wednesday, August 23, 2006

முதலாளி

வியாபரத்தில் ஒரே ஒருவர் மட்டுமே முதலாளி: அவர் தான் கஸ்டமர்,

அவர் நினைத்தால் நிறுவனத்தில் உள்ள யாரை வேண்டும் என்றாலும் நீக்க முடியும் அது முதலாளி முதல் தொழிலாளி வரை, பணத்தை மற்ற இடங்களில் செலவு செய்வதின் மூலம்

சாம் வால்டன், நிறுவனர் வால் மார்ட்

There is only one boss: the customer.

And he can fire everybody in the company, from the chairman on down, simply by spending his money somewhere else.
SAM WALTON, FOUNDER OF WAL-MART

ஏன்! ஏதற்கு! ஏதை!

சும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது அதன் வெளிப்பாடுதான் இந்த இணையதளம்